Youtube Trending Today : யுவன் வந்துட்டயாபா... என் மனசுல இருந்த பாரமே போய்டிச்சே.....! சண்டையிடும் தீபா அக்கா - இன்றைய ட்ரெண்டிங் வீடியோ

இன்றைய ட்ரெண்டிங் வீடியோ

இன்றைய தினம் யூடியூப் ட்ரெண்டிங்கில் தீபா அக்கா, முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் டாக்கு லெஸ் வொர்க்கு மோரு லிரிக்ஸ் பாடல், குக் வித் கோமாளி புகழ், யுவான்சங்கர் ராஜா, ஆல்யா மனசா , கத்திரிக்காய் குழம்பு வீடியோ, ஸ்டெபி உலகம், நடிகை விஜய லக்ஷ்மி, போன் வீடியோக்கள் இடம்பெற்றுள்ளது.

 • Share this:
  வெள்ளை மனமும், வெகுளித்தனமும் கொண்ட தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை ஒற்றை சிரிப்பில் சம்பாதித்த தீபா அக்கா தான் இன்றைய ட்ரெண்டிங்கில் முதல் இடம். குக் வித் கோமாளி மூலம் சமீபத்தில் அதிகம் பேசப்பட்டார் தீபா அக்கா.

  இவரது வீடியோ ஒன்று இன்றைய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. இணையத்தில் அதிகம் அப்பா, மகள் பாசம் பேசப்படும். அதே போல் அம்மா, பையன் பாசத்தை மையமாக கொண்டு இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

      

  அடுத்த படியாக 3ம் இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளதுமுருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் டாக்கு லெஸ் வொர்க்கு மோரு லிரிக்ஸ் பாடல். நேற்றைய தினம் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் டாக்கு லெஸ் வொர்க்கு மோரு லிரிக்ஸ் பாடல் வெளியிடப்பட்டது.

  ALSO READ | நியாபகம் வருதே..நியாபகம் வருதே ... 80ஸ் கிட்களின் முதல் சோசியல் மீடியா ஆர்குட் - நினைவுகூரும் நெட்டிசன்ஸ்!

  வெளியிடப்பட்ட 24 மணிநேரத்தில் இந்த பாடல் 1.2 மில்லியன் வியூக்களை தற்போது கடந்துள்ளது. நடிகர் சாந்தனு மற்றும் அதுல்யா ரவி நடிப்பில் வெளியாகியுள்ள இந்த படத்தின் லிரிக் பாடலை ஷிவாங்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் சாம் விஷால் பாடியுள்ளனர். இந்த பாடல் தான் தற்போது ட்ரெண்டிங்கில் 3ம் இடம் பிடித்துள்ளது.

      

  அடுத்ததாக ட்ரெண்டிங்கில் உள்ளது குக் வித் கோமாளி புகழ். Lockdown-ல் பழைய தொழிலை கையில் எடுத்த புகழ். குக் வித் கோமாளி மூலம் பிரபலமான நடிகர் புகழ் வீடியோ இந்த லாக்டௌன் நேரத்தில் பலரின் மனதை குளிர்வித்துள்ளது.

  ALSO READ | பழைய தொழிலை கையில் எடுத்த புகழ்... அடம்பிடிக்கும் அராத்து பூர்ணிமா... ஆக்கிரமித்த ஷிவானி - இன்றைய ட்ரெண்டிங் வீடியோ

  எங்கு திரும்பினாலும் கொரோனா, மாஸ்க், சானிடைசர் என கேட்டுக்கொண்டிருந்த செவிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக புகழ் தனது காரை கழுவும் விதத்தை நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ 3 ம் இடத்தில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. இந்த வீடியோ கடந்த 2 நாட்களாக ட்ரெண்டிங்கில் உள்ளது.

      

  அடுத்ததாக ட்ரெண்டிங்கில் உள்ளது யுவான்சங்கர் ராஜா, இளையராஜா இசை அமைத்த மாமனிதன் படத்தின் 2 வது பாடலான ஏ ராசா பாடல். பா.விஜய் எழுதியுள்ள இப்பாடலின் வீடியோவில் யுவன் ஷங்கர் ராஜா பாடி நடித்துள்ளார். இந்த பாடலுக்கு பலரும் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். ஒடஞ்சதெல்லாம் ஒட்ட வைக்கிற சக்தி யுவன் கிட்ட மட்டும் தான் இருக்கு.

  ALSO READ | பிரதமர் மோடியை நேசிக்கும் நெட்டிசன்கள்.. வூஹான் லேப் குறித்து கணித்த டிரம்ப் - இன்றைய ட்ரெண்டிங் இவை தான்!

  யுவன் வாழ்வின் நம்பிக்கை எனவும், என் மனசுல இருந்த பாரமே போய்டிச்சே எனவும், என் மனசுல இருக்குற பாரம் எல்லாம் இறங்கிடுச்சு வெற்றியோ தோல்வியோ போராடுவோம் எனவும், நா இப்போ இருக்கிற சூழ்நிலைக்கு இந்த பாடல் எனக்கு மிகவும் அவசியம் எனவும் இந்த பாடலுக்கு கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றது.

     அடுத்ததாக 5 வது இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது ஆல்யா மனசா. விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா - ராணி சீரியலில் செம்பா - கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர்கள் சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி.சீரியலில் மட்டுமல்லாது சீரியஸாகவே காதலித்து வந்த சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

  ALSO READ | 'வளர்த்த பெண்ணை கண்டதும் கத்தி பாசத்தை பொழிந்த கழுதை' கண்ணீருடன் கட்டி அனைத்த சிறுமி - வைரலாகும் வீடியோ

  சஞ்சீவ் - ஆல்யா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ‘அய்லா சையத்’ என்று பெயரிட்டதாகவும் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டார் ஆல்யா. இவர் தற்போது விஜய் டிவியில் மீண்டும் சீரியலில் நடித்து வருகின்றார். இவரது யூடியூப் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள எப்படி இருந்த நான் எப்படி ஆயிட்டேன் வீடியோ ட்ரெண்டிங்கில் 5ம் இடம் பிடித்துள்ளது.

     அடுத்ததாக நாவூறும் சுவையில் மணமனக்கும் கத்திரிக்காய் குழம்பு வீடியோ தான் ட்ரெண்டிங்கில் 7ம் இடத்தை பிடித்துள்ளது. வில்லேஜ் குக்கிங் சேனல் யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.இந்த் வீடியோவை பார்த்த பலரும் கமெண்ட்ஸ்களை தெறிக்க விட்டுள்ளனர்.

  ALSO READ | "அட இது என் நிழலா?" தன் நிழலை பார்த்து வியந்த ஒட்டக குட்டி - வைரலாகும் வீடியோ

  வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு என யூடியூபில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ரெம்ப நாளா வீடியோவுக்காக காத்திருந்தோம் என இந்த வீடியோ விற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.  அடுத்தாக ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ள சேனல், ஸ்டெபி உலகம். வியாழக்கிழமை ஆனாவே எப்படா 11 மணி ஆகும்னு இருக்கு. உங்க குடும்பத்தை பார்த்தா அவ்ளோ சந்தோசமா இருக்கு ஸ்டெஃபி அக்கா என இவரது வீடியோவிற்கு ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். இவரது வீடியோ தான் ட்ரெண்டிங்கில் 8 வது இடம் பிடித்துள்ளது.

     அடுத்தாக 9 வது இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது கணவனின் சேட்டை. மனைவி ஒருவர் வீட்டை தூய்மை செய்து கொண்டு இருக்கையில் அவரது குழந்தைகள் விளையாடி கொண்டு உள்ளது. அருகில் இருந்த ரூமில் இருந்து மனைவி இருந்த அறைக்கு வந்த கணவர் அங்கே குழந்தைகள் விளையாடி கொண்டு இருந்த இடத்தில் குப்பைகளை கொட்டி விட்டு எஸ்கேப் ஆகி விடுகின்றார். மற்ற இடத்தை தூய்மை செய்து விட்டு குழந்தைகளை பார்க்கும் மனைவி குழந்தைகள் தான் குப்பையை கொட்டியதாக நினைத்து வசைபாடுகின்றார்.

  ALSO READ | இந்த வருஷம் முழுக்க சந்தோஷ் நாராயணன் ஆட்சி தான்...நீ பேசுமா சிவாங்கி...DNA டெஸ்ட் எங்க பாரதி? - இன்றைய ட்ரெண்டிங் வீடியோ

  இந்த லாக்டவுனில் குழந்தைகளை சமாளிப்பதை விட கணவன்களை சமாளிப்பது குடும்ப பெண்களுக்கு போதும் போதும் என்றாகி விடுகின்றது. இந்த வீடியோ தான் யூடியூபில் 9 வது இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

     அடுத்ததாக 10 வது இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது நடிகை விஜய லக்ஷ்மியின் யூடியூப் சேனல். தலை முடியை பராமரிப்பது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

        உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   
  Published by:Sankaravadivoo G
  First published: