Today Trending YouTube : இந்த வருஷம் முழுக்க சந்தோஷ் நாராயணன் ஆட்சி தான்...நீ பேசுமா சிவாங்கி...DNA டெஸ்ட் எங்க பாரதி? - இன்றைய ட்ரெண்டிங் வீடியோ

இன்றைய ட்ரெண்டிங் வீடியோ

இன்றைய தினம் யூடியூப் ட்ரெண்டிங்கில் குக் வித் கோமாளி அஸ்வின், ஷிவாங்கி, ஜகமே தந்திரம் படத்தில் இடம் பெற்றுள்ள நேத்து பாடல் , அராத்து பூர்ணிமா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா ப்ரோமோ போன்றவை தான் இடம்பெற்றுளளது.

 • Share this:
  அஸ்வின் என கூறும் போதே பின்னரே ஒட்டிக்கொண்டு வரும் பெயர் தான் ஷிவாங்கி. இவர்கள் அடிக்கும் லூட்டியை காணாதோர் எவரும் இலர். இருவரும் இணைந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு பலரையும் சிரிக்க வைத்தனர். ஷிவாங்கியின் வெளியப்படையான பேச்சு பலரும் ரசிக்கும் படி அமைந்திருந்தது. அடுத்த ஜெனிலியா என பலரும் கூறும் அளவிற்கு மீம்ஸ்கள் பறந்தன. ஷிவாங்கி இந்நிகழ்ச்சியில் செய்யும் குறும்பத்தனத்தை ரசிக்க ஏராளமான ரசிகர் கூட்டமிருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயன் ஒருமுறை சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த போது அவரை பாராட்டியிருந்தது நினைவுகூரத்தக்கது.

  தனது நகைச்சுவை, குறும்புத்தனத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஷிவாங்கி அடுத்ததாக சிவகார்த்திகேயன் உடன் ‘டான்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் தற்போது ஒன்றாக இணைந்து யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து வருகின்றனர். அதில் தற்போது மீடியா மசொன்ஸ் ( Media Masons ) யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று யூடியூப் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது. சிவாங்கி பேசிட்டே இருக்கனும், அந்த பேச்ச கேட்டுட்டே இருக்கனும் என இந்த வீடியோவை குக் வித் கோமாளி ரசிகர்கள் பார்த்து பகிர்ந்து வருகின்றனர்.  இதற்கு அடுத்த இடத்தில் யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ள வீடியோ ஜகமே தந்திரம் படத்தில் இடம் பெற்ற நேத்து பாடல் வீடியோ.

  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’. ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

  கடந்த ஆண்டு மே மாதம் திரைக்கு வர வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது. அதைத்தொடர்ந்து திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது. அதேபோல் தனுஷூம் திரையரங்க வெளியீட்டையே எதிர்பார்ப்பதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

  ALSO READ |  Twitter Trending Today : தல vs தளபதி.. ட்ரெண்டாகும் #PSBB.. வூஹானில் நடப்பது என்ன? - இணையத்தில் இன்றைய ட்ரெண்டிங் இவை தான்

  இந்நிலையில் தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 18-ம் தேதி ரிலீசாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் பாடல் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.இந்த பாடலுக்கு இந்த வருஷம் முழுக்க சந்தோஸ் நாராயணன் ஆட்சி தான் போல, தனுஷின் பேச்சு சென்னை பசங்களின் மைண்ட் வாய்ஸ் போல இருக்கு, இந்த பாடலை ஒரு முறை கேட்டால் பிடிக்காது,கேட்ககேட்க தான் பிடிக்கும் என்றபடியும் கமெண்ட்ஸ்கள் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் குவிந்து வருகின்றது.

     அடுத்ததாக ட்ரெண்டிங்கில் 4ம் இடத்தில் இருக்கும் வீடியோ அராத்து பூர்ணிமா வீடியோதான். இணையம் பயன்படுத்துவோர் இவரது வீடியோவை கடந்து வர வாய்ப்பில்லை. பெரும்பாலும் இவர் பதிவிடும் வீடியோக்கள் இணையத்தில் அதிக பார்வைலேயர்களை பெற்று வைரலாகும். அவ்விதம் தற்போது பூர்ணிமா பதிவிட்டுள்ள இருக்கு ஆனா இல்ல. அம்மா vs மகள் வீடியோ யூடியூபில் 4 வது இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.இதுவரை இந்த வீடியோ 754,114 பார்வையாளர்களை பெற்றுள்ளது.

     இதற்கு அடுத்ததாக ட்ரெண்டிங்கில் 5 வது இடத்தில் உள்ள வீடியோ தான் பாரதி கண்ணம்மா ப்ரோமோ வீடியோ.

  விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் தற்போது பாரதி தனது குழந்தையின் படிப்பை நிறுத்தி வெளிநாடு அழைத்துச் செல்ல முடிவெடுத்து குழந்தையின் பள்ளிக்கு வந்து டி.சி கேட்கின்றார். அனைத்தையும் கதவின் வெளியில் நின்று ஒட்டு கேட்டார் போன்று கண்ணம்மா உடனே அங்கு வந்து இனி நான் குழந்தைக்கு சமையல் செய்து அனுப்ப மாட்டேன். குழந்தை எங்கும் செல்ல வேண்டாம் என கூறுகிறாள்.

  ஆண்மை பரிசோதனைக்கு வர மறுக்கும் நித்யாநந்தா போல பாரதி கண்ணம்மா சீரியல் பாரதியை ஒரு டி..என்.ஏ டெஸ்ட் எடுக்க வைக்க படாத பாடு படும் கண்ணம்மாவின் துயரம் இந்த வாரமும் தொடர்க்கின்றது.

     இந்த ப்ரோமோவின் கீழ் ரசிகர்கள் பலரும், எங்க போறன்னாலும் DnA test எடுத்துட்டு போ பாரதி எனவும் Hello தம்பி Flight எல்லாம் இல்ல எப்படி Foreign போரிங்க எனவும், ஒரு நேர்மையான நல்ல பொண்ணு இப்படி கஷ்டபடுரமாதிரியே காட்டுனா போரடிக்குது. கொஞ்சம் வில்லியையும் வைச்சு செய்யரமாதிரி சீன்களை வைங்க பிளீஸ் எனவும் கமெண்ட்ஸ் களை தெறிக்கவிட்டுள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sankaravadivoo G
  First published: