Today Trending YouTube : 'அராத்து பூர்ணிமாவின் லூட்டி முதல் ரோஜா சீரியலின் ப்ரோமோ வரை' - இன்றைய ட்ரெண்டிங் வீடியோ

இன்றைய ட்ரெண்டிங் வீடியோ

இன்றைய தினம் யூடியூப் ட்ரெண்டிங்கில் நாம் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ப்ரோமோ , மணி ஹெஸ்ட் தொடரின் 5-வது சீசன் ,ரோஜா சீரியலின் ப்ரோமோ, காற்றுக்கென்ன வேலி சீரியலின் ப்ரோமோ, குக் வித் கோமாளி அஸ்வின், ஷிவாங்கி, ஜகமே தந்திரம் படத்தில் இடம் பெற்றுள்ள நேத்து பாடல் , அராத்து பூர்ணிமா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா ப்ரோமோ போன்றவை தான் இடம்பெற்றுள்ளன.

 • Share this:
  நேற்றைய தினம் ட்ரெண்டிங்கில் இருந்த அதே அஸ்வின், ஷிவாங்கி வீடியோ இன்றைய தினமும் ட்ரெண்டிங்கில் 2ம் இடத்தில் உள்ளது. குக் வித் கோமாளி முடிந்தாலும் இன்றளவும் எவ்வித தளர்வும் இன்றி, முகத்துடன் ஒன்றி இருக்கும் மாஸ்க் போல ரசிகர்கள் மனதில் உள்ளனர் அஸ்வின்,ஷிவாங்கி.

      

  தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படத்தின் பாடல் ட்ரெண்டிங்கில் 2ம் இடம் பிடித்துள்ளது. இந்த பாடலுக்கு இந்த வருஷம் முழுக்க சந்தோஸ் நாராயணன் ஆட்சி தான் போல, தனுஷின் பேச்சு சென்னை பசங்களின் மைண்ட் வாய்ஸ் போல இருக்கு, இந்த பாடலை ஒரு முறை கேட்டால் பிடிக்காது,கேட்ககேட்க தான் பிடிக்கும் என்றபடியும் கமெண்ட்ஸ்கள் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் குவிந்து வருகின்றது. இந்த பாடல் நேற்றய தினமும் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றிருந்தது.

      

  இதற்கு அடுத்ததாக 3வது இடத்தில், நெட்ப்ளிக்ஸில் வெளியாகி மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற மணி ஹெஸ்ட் தொடரின் 5-வது சீசன் செப்டம்பர் 3-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ தான் ட்ரெண்டிங்கில் 3ம் இடத்தை பிடித்துள்ளது.

  நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வங்கிகளில் கொள்ளையடிக்கும் கொள்ளையர்களைப் பற்றிய கதைதான் மனிஹெய்ட் தொடர். இதுவரையில், நான்கு சீசன்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு சீசனும் தலா 8 எபிசோடுகளைக் கொண்டது. நான்கு சீசன்களும் எந்த தொய்வும் இன்றி விறுவிறுப்பாக செல்வது இந்த சீசனின் சிறப்பு.

  இந்த இணைய தொடரில் 20-க்கும் மேற்பட்ட முக்கிய கதாப்பாத்திரங்கள் இருந்தாலும், ப்ரோபசர் எனும் எல்லாரையும் வழிநடத்துபவரின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. அந்த கதாபாத்திரம் காவல்துறையிடம் கைதாவது போல 4-வது சீசன் முடிவடைந்ததால் 5-வது சீசனின் மீது மக்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

  உலக அளவில் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தநிலையில், மனிஹெய்ஸ்ட்டின் 5-வது சீசனின் முதல் பகுதி செப்டம்பர் 3-ம் தேதியும், இரண்டாம் பகுதி டிசம்பர் 3-ம் தேதியும் வெளியாகும் என்று நெட்ப்ளிக்ஸ் அறிவித்துள்ளது. முந்தைய சீசன்களில் ஒரு சீசனுக்கு 8 பகுதி இருந்தநிலையில், இறுதி சீசனான 5-வது சீசனில் 10 பகுதிகள் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

      

  அடுத்ததாக ட்ரெண்டிங்கில் 4ம் இடத்தில் இருக்கும் வீடியோ அராத்து பூர்ணிமா வீடியோதான். இணையம் பயன்படுத்துவோர் இவரது வீடியோவை கடந்து வர வாய்ப்பில்லை. பெரும்பாலும் இவர் பதிவிடும் வீடியோக்கள் இணையத்தில் அதிக பார்வைலேயர்களை பெற்று வைரலாகும். அவ்விதம் தற்போது பூர்ணிமா பதிவிட்டுள்ள இருக்கு ஆனா இல்ல. அம்மா vs மகள் வீடியோ யூடியூபில் 4 வது இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.இதுவரை இந்த வீடியோ 754,114 பார்வையாளர்களை பெற்றுள்ளது.

      

  8 வது இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் வீடியோ இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ நேற்றைய தினமும் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது. இந்த ப்ரோமோவின் கீழ் ரசிகர்கள் பலரும், எங்க போறன்னாலும் DnA test எடுத்துட்டு போ பாரதி எனவும் Hello தம்பி Flight எல்லாம் இல்ல எப்படி Foreign போரிங்க எனவும், ஒரு நேர்மையான நல்ல பொண்ணு இப்படி கஷ்டபடுரமாதிரியே காட்டுனா போரடிக்குது. கொஞ்சம் வில்லியையும் வைச்சு செய்யரமாதிரி சீன்களை வைங்க பிளீஸ் எனவும் கமெண்ட்ஸ் களை தெறிக்கவிட்டுள்ளனர்.

      

  இதற்கு அடுத்த படியாக நரிக்கூட்டம் யூடியூப் சேனலில் இடம் பெற்றுள்ள கணவன் , மனைவி உறவின் அன்பினை வெளிப்படுத்தும் வீடியோ 9 வது இடத்தில் உள்ளது.

      

  அடுத்ததாக யூடியூப் ட்ரெண்டிங்கில் 10 வது இடத்தில் இருப்பது சன்டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலின் ப்ரோமோ வீடியோ. இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் சீரியல் குறித்த தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சிலர் மூன்று நாள்தான் டெல்லியில் வேலை என்றார்கள். ஆனால் பத்து நாட்கள் ஆகிவிட்டது எனவும் ஊரடங்கை இழுப்பது போல் கதையும் இழுத்து கொண்டோ போகிறது எனவும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

      

  இதற்கு அடுத்த படியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றுக்கென்ன வேலி சீரியலின் ப்ரோமோ ட்ரெண்டாகியுள்ளது. யூடியூப் ட்ரெண்டிங்கில் இந்த வீடியோ 11 வது இடத்தை பெற்றுள்ளது.

      

  அடுத்த படியாக 12 வது இடத்தில ட்ரெண்டிங்கில் இருக்கும் வீடியோ தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ப்ரோமோ. இந்த வாரத்திற்கான ப்ரொமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டு உள்ளது. அதில் மாயன் படும் கஷ்டம் பற்றி அம்மாவிடம் சொல்கிறார் அவரது தங்கை. அதை நீங்கள் நினைத்தால் மட்டுமே சரி செய்ய முடியும் என்று கேட்கிறார்.

  அதனால் மஹாவின் வீட்டுக்கு சென்று பேசுகிறார் நாச்சியார். மஹாவிடம் அவர் பேசும்போது 'உன் மனசில் என்ன இருக்கு சொல்லு' என கேட்கிறார். அதற்கு அவர் 'மாயன் இல்லாமல் நான் இல்லை அத்தை' அவன் வேண்டுமென்று தோன்றுகின்றது என பதில் கூறுகிறார். அதை கேட்ட நாச்சியார், 'உங்களை சேர்த்து வைக்க வேண்டியது என் பொறுப்பு' என மஹாவிடம் வாக்கு கொடுக்கின்றார். இந்த ப்ரோமோ வீடியோ தான் 12 வது இடத்தில ட்ரெண்டிங்கில் உள்ளது.

        உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   
  Published by:Sankaravadivoo G
  First published: