Youtube Trending Today :'கம்பி கட்டுற கதை' எங்க பா காணோம்...கோவத்துல ஒரு நாள் Shanthnu!- இன்றைய ட்ரெண்டிங் பட்டியல்

யூடியூப் ட்ரெண்டிங்

மீம்ஸ், நகைச்சுவை என தற்போது இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் பரிதாபம் சேனலின் கோபி,சுதாகர் வீடியோ ட்ரெங்கில் 6ம் இடம் பிடித்துள்ளது.

  • Share this:
    இன்றைய தினம் யூடியூப் ட்ரெண்டிங்கில் நெஞ்சத்திலே எபிசோட் 2 ,விஜய் டிவி ஏர்டெல் சூப்பர் சிங்கர் , ஜகமே தந்திரம் திரைப்பட ட்ரைலர், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய கிரிக்கெட், விஜய் டிவியின் குக் வித் கோமாளி வெங்கடேஷ் பட் , காமெடி நடிகர் சிங்கம் புலி, சத்யா சீரியல் ப்ரோமோ
    வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன.

    இன்றைய தினம் நாக் அவுட் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள நெஞ்சத்திலே எபிசோட் 2 ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது.இதுவரை 539,003 பார்வையாளர்களை பெற்றுள்ள இந்த வீடியோ 2,224 கமெண்ட்ஸ்களை பெற்றுள்ளது.

     



     

    அடுத்ததாக யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ள வீடியோ விஜய் டிவி ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஒன்றாக இணைந்து படித்துள்ள பாடல் தொகுப்பு. ட்ரெண்டிங்கில் 3ம் இடம் பிடித்துள்ள இந்த வீடியோ 340,754 பார்வலையாளர்களை பெற்றுள்ளது.

     



    அடுத்ததாக யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ள வீடியோ தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் திரைப்பட ட்ரைலர். இந்த ட்ரைலர் யூடியூபில் 5ம் இடத்தில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. தற்போது இந்த வீடியோ10,855,409 பார்வையாளர்களையும், 27,106 கமெண்ட்ஸ்களையும் பெற்றுள்ளது.

     



    அடுத்ததாக ட்ரெண்டிங்கில் 2ம் இடம் பிடித்திருக்கும் வீடியோ England v New Zealand - Day 4 Highlights. நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய கிரிக்கெட் தொடரின் முக்கிய தருணங்களை England & Wales Cricket Board யூடியூப் பக்கம் அதன் அதிகாரபூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ட்ரெண்டிங்கில் 4ம் இடம் பிடித்துள்ளது. மேலும் 1,981,096 பார்வையாளர்கள் மற்றும் 1,938 கமெண்ட்ஸ்களையும் பெற்றுள்ளது.



    இன்றைய தினம் ட்ரெண்டிங்கில் யாரும் எதிர்பாரா விதமாக 15வது இடத்தில் காமெடி நடிகர் சிங்கம் புலியின் திரைப்பட காமெடி ஒன்று இடம் பெற்றுள்ளது.சிங்கம்புலி தமிழ் நடிகரும், இயக்குனரும், வசனகர்த்தாவும் ஆவார். ரெட் மற்றும் மாயாவி ஆகிய படங்களுக்குப் பிறகு திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களை ஏற்று நடித்துவருகிறார். மாயாண்டி குடும்பத்தார் படத்தில் இவர் நடித்த காமெடி பலரின் மனங்களை வென்று தற்போது ட்ரெண்டிங்கில் எதிர்பாறா விதமாக இடம் பிடித்துள்ளது.



    அடுத்ததாக ஜீ -தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சத்யா சீரியல் ப்ரோமோ ஒன்று ட்ரெண்டிங்கில் 13 வது இடம் பிடித்துள்ளது.



    மீம்ஸ், நகைச்சுவை என தற்போது இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் பரிதாபம் சேனலின் கோபி,சுதாகர் வீடியோ ட்ரெங்கில் 6ம் இடம் பிடித்துள்ளது.Best Of Paavangal என்ற தலைப்பின் கீழ் பரிதாபங்கள் யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ இதுவரை 862,742 பார்வையாளர்களை பெற்றுள்ளது.



    அடுத்ததாக ட்ரெண்டயுள்ள வீடியோ நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவியின் யூடியூப் பக்க வீடியோ. கோவத்துல ஒரு நாள் Shanthnu! என இருவரும் இணைந்து தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இதனை 173,163 பார்வலையாளர்கள் பார்த்துள்ளனர்.



    விஜய் டிவியின் குக் வித் கோமாளி செப். வெங்கடேஷ் பட் பாதம் கீர் எப்படி செய்வது என வீடியோ ஒன்றை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரது வீடியோவிற்கு கமெண்ட்ஸ்கள் தாறுமாறாக பறக்கிறது. ஒருவர் அடுத்த ஜென்மம் நான் உங்கள் friend ah பிறக்கணும்.....என பதிவிட்டுள்ளார். மற்றொருவர் உங்களின் சமையல் போல உங்களின் பேச்சும் சுவையானது . பாதம் கீர் அருமை எனவும் தல, அந்த இஞ்சி பூண்டு ??? அப்படியே போற போக்குல தோசை தீயாம எடுக்கறது எப்படி, முக்கியமா பிஞ்சுபோகாம எடுக்கறது எப்படி னு சொல்லுங்க தல, புண்ணியமா போகும் தல எனவும் அவரது ரசிகர்கள் பதிவிட்டுள்ளார்.





    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sankaravadivoo G
    First published: