YouTube Trending Today : பழைய தொழிலை கையில் எடுத்த புகழ்... அடம்பிடிக்கும் அராத்து பூர்ணிமா... ஆக்கிரமித்த ஷிவானி - இன்றைய ட்ரெண்டிங் வீடியோ

இன்றைய ட்ரெண்டிங் வீடியோ

இன்றைய தினம் யூடியூப் ட்ரெண்டிங்கில் சிவாங்கி, சந்திர கிரகணம், குக் வித் கோமாளி புகழ், குக் வித் கோமாளி வெங்கடேஷ் பட், ஜகமே தந்திரம் திரைப்படத்தின் பாடல், மணி ஹெஸ்ட் தொடரின் 5-வது சீசன், நரிக்கூட்டம் , அராத்து பூர்ணிமா, ரோஜா சீரியலின் ப்ரோமோ, ரோஜா சீரியலின் ப்ரோமோ, போன்றவை இடம்பெற்றுள்ளன.

  • Share this:
    ‘குக் வித் கோமாளி’ சிவாங்கியின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இணையத்தில் அவரது ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இதனிடையே மீடியா மிஷன் யூடியூப் சேனல் அவரது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக யூடியூபில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது இந்த வீடியோ ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது.

     



     

    நாட்டில் சில பகுதிகளில் சந்திர கிரகணத்தை இன்று காண முடியும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று மூன்று வானியல் அதிசயங்கள் ஒரே நாளில் நிகழவுள்ளன. சந்திர கிரகணம் மாலை 3.15 மணிக்குத் தொடங்கி 6.23 மணிக்கு முடியும். அதேநேரம் முழு சூரிய கிரகணம் மாலை 4.39 மணிக்குத் தொடங்கும். அதை தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆசியாவின் சில நாடுகள், ஆஸ்திரேலியா, பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காணமுடியும்.

    இன்று ஏற்படும் சந்திர கிரகணத்துக்குப் பின் இந்தியாவில் அடுத்த சந்திர கிரகணத்தை இந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி காணலாம். இதனிடையே ஆத்ம மையம் எனும் யூடியூப் பக்கத்தில் சந்திர கிரகணம் அன்று வழிபட வேண்டிய தெய்வம், வழிபாட்டு முறை குறித்து வீடியோ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ட்ரெண்டிங்கில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது

     



    மூன்றாவது இடத்தில் யூடியூபில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கும் வீடியோ Lockdown-ல் பழைய தொழிலை கையில் எடுத்த புகழ். குக் வித் கோமாளி மூலம் பிரபலமான நடிகர் புகழ் வீடியோ இந்த லாக்டௌன் நேரத்தில் பலரின் மனதை குளிர்வித்துள்ளது. எங்கு திரும்பினாலும் கொரோனா, மாஸ்க், சானிடைசர் என கேட்டுக்கொண்டிருந்த செவிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக புகழ் தனது காரை கழுவும் விதத்தை நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ 3 ம் இடத்தில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

     



     

    அடுத்தத்ததாக 4 வது இடத்தில் ட்ரெண்டிங்கில் இருப்பது 24 மணி நேரம் காருக்குள் இருந்தால் எப்படி இருக்கும் என யூடியூபர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ.

     



     

    கடந்த சில நாட்களாகவே யூடியூபை வாடகைக்கு எடுத்தார் போன்று தொடர்ந்து முன்னணியில் உள்ளது ஷிவாங்கி வீடியோ. இன்றையதினம் 5 வது இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

     



     

    குக் வித் கோமாளி வெங்கடேஷ் பட் வெளியிட்டுள்ள உணவு வீடியோ இன்று ட்ரெண்டிங்கில் 6ம் இடம் பிடித்துள்ளது. ஊரடங்கில் வீட்டில் என்ன செய்வது என தெரியாமல் நினைத்து கொண்டிருப்பவர்கள் பொழுது போக ஏதாவது சமைக்க நினைத்தால் இதனை ட்ரை பண்ணி பாருங்கள..

     



     

    அடுத்ததாக தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படத்தின் பாடல் ட்ரெண்டிங்கில் 2ம் இடம் பிடித்துள்ளது. இந்த பாடல் வெளியான நாளில் இருந்து தனுஷ் ரசிகர்கள் பாக்க பாக்கத் தான் நல்லாயிருக்கும் என பார்த்துக்கொண்டே உள்ளனர் போலும். தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

     



     

     

    இதற்கு அடுத்ததாக 8வது இடத்தில், நெட்ப்ளிக்ஸில் வெளியாகி மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற மணி ஹெஸ்ட் தொடரின் 5-வது சீசன் செப்டம்பர் 3-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ தான் ட்ரெண்டிங்கில் 3ம் இடத்தை பிடித்துள்ளது.



     

    இதற்கு அடுத்த படியாக நரிக்கூட்டம் யூடியூப் சேனலில் இடம் பெற்றுள்ள கணவன் , மனைவி உறவின் அன்பினை வெளிப்படுத்தும் வீடியோ 15 வது இடத்தில் உள்ளது.நேற்றைய தினம் இந்த வீடியோ 9 வது இடத்தில் இருந்தது.

     



     

    அடுத்ததாக ட்ரெண்டிங்கில்11ம் இடத்தில் இருக்கும் வீடியோ அராத்து பூர்ணிமா வீடியோதான். இதுவரை இந்த வீடியோ 962,959 பார்வையாளர்களை பெற்றுள்ளது.

     



     

    அடுத்ததாக யூடியூப் ட்ரெண்டிங்கில் 9 வது இடத்தில் இருப்பது சன்டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலின் ப்ரோமோ வீடியோ.

     



     

    அடுத்ததாக யூடியூப் ட்ரெண்டிங்கில் 12 வது இடத்தில் இருப்பது ஜீ தமிழ் சீரியல் நடிகை ரவுடி பேபியின் சத்யா சீரியல். இந்த சீரியலின் 635 வது எபிசோடு வீடியோ இதுவரை 772,389 பார்வலையாளர்களை பெற்றுள்ளது.

     



     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sankaravadivoo G
    First published: