Youtube Trending Today : "நான் அவன் இல்லை...சிக்கலில் சிக்கிய மதன் கௌரி...சிக்குவாரா பாக்கியா கணவர்" - யூடியூபில் ட்ரெண்டாகிய வீடியோக்கள்

யூடியூபில் ட்ரெண்டாகிய வீடியோக்கள்

இன்றைய தினம் யூடியூப் ட்ரெண்டிங்கில் அழகிய லாக்டவுன், பாக்கியலட்சுமி ப்ரோமோ, தேன்மொழி பி.ஏ. , மதன் கௌரி,மொபைல் பிராங்க் , முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் டாக்கு லெஸ் வொர்க்கு மோரு லிரிக்ஸ் பாடல் வீடியோக்கள் இடம்பெற்றுள்ளது.

  • Share this:
    யூடியூப் ட்ரெண்டிங்கில் இன்றைய தினம் 2ம் இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது ரவுடி பேபி சேனலில் அழகிய லாக்டவுன் வீடியோ. வீட்டில் குழந்தைக்கும்,பெற்றோருக்கும் இடையே நடக்கும் அழகிய தருணங்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த காணொளிக்கு 700 பேர் கமெண்ட்ஸ் பதிவிட்டுள்ளனர்.



    அடுத்ததாக ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி ப்ரோமோ வீடியோ. விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் பாக்யலட்சுமி. இது ஸ்டார் ஜல்சா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ஸ்ரீமோயி' என்ற பெங்காலி மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும்.

    இந்த தொடரை 'டேவிட்' என்பவர் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவருடன் வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் போன்ற பலர் நடிக்கிறார்கள். இதன் ப்ரோமோ வீடியோ இன்றைய தினம் யூடியூப் ட்ரெண்டிங்கில் 5ம் இடத்தில் உள்ளது.

     



     

    அடுத்த இடத்தில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ள வீடியோ தேன்மொழி பி.ஏ. 1,345,254 பார்வையாளர்களை பெற்று 275 கமெண்ட்ஸ்களையும் பெற்றுள்ளது. தேன்மொழி பி.ஏ - ஊராட்சி மன்றத் தலைவர் என்பது விஜய் தொலைக்காட்சியில் 26 ஆகத்து 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகும் குடும்பம் அரசியல் மற்றும் நகைச்சுவை கலந்த தொலைக்காட்சி தொடர் ஆகும்.

    இந்த தொடர் 'நிம்கி முகியா' என்கிற இந்தி தொடரின் தமிழாக்கம் ஆகும். இந்த தொடரில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளியாக அறிமுகமான ஜாக்குலின் முதல் முதலாக தேன்மொழி என்ற கதாபாத்திரத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக சித்தார்த் அருள் என்ற காதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இத் தொடரை கதிரவன் இயக்கியுள்ளார்.

     



     

    ட்ரெண்டிங்கில் 9வது இடத்தில் இடம் பிடித்துள்ள வீடியோ கீர்த்தி என பெயர் கொண்ட யூடியூப் சேனல் வீடியோ. தலைமுடியை படாத பாடு படுத்தும் இவரது வீடியோவை காண இலங்கையில் கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. நாடு முழுவதும் ரசிக கிளைகளை கொண்டுள்ள இவர் தற்போது திருமணத்தில் தனது தலைமுடியை எப்படி அலங்கரித்தனர் என டெமோ ஒன்றை காட்டுகின்றார். இந்த வீடியோ இதுவரை 453,594 பார்வையாளர்களை பெற்றுள்ளது.

     



     

    அடுத்ததாக 13 வது இடத்தில் உள்ளது யூடிபர் மதன் கௌரி வீடியோ. பெண்களையும், பள்ளி சிறுமிகளையும் ஆபாச வசை பாடிய பப்ஜி மதன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுரியில் கைது செய்யப்ட்ட யூடியூபர் பப்ஜி மதன் காவல்துறை காலில் விழுந்து கண்ணீர் விட்டு கெஞ்சியாதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நியூஸ் 18 தமிழ்நாடு, ஆபாச பேச்சு யூடியூபர் மதன் பற்றி தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தது.தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே பலரும் மதன் கௌரியை தொடர்பு படுத்தி அடுத்த வரிசையில் நீ தான் என்ற படியும், இது நீங்களா என்றபடியும் கமெண்ட்ஸ் செய்து வந்தனர். இதற்கு பதில் அளித்துள்ள மதன் கௌரி நான் இல்ல என விளக்க மளித்துள்ளார். இந்த வீடியோ 1,441,317 பார்வையாளர்களை பெற்று 13வது இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

     



    அடுத்தத்ததாக டிக்கெட் கிடைக்குமா என தலைப்பிட்டுள்ள டிக்டாக் வீடியோ ஒன்று ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. 640,022 பார்வலர்களை பெற்றுள்ள இந்த வீடியோவை திருமண தம்பதிகள் வெளியிட்டுள்ளனர். பலரும் இந்த வீடியோவின் கீழே வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

     



    அடுத்த இடத்தில் 10வதாக ட்ரெண்டாகியுள்ள வீடியோ மொபைல் பிராங்க் வீடியோ.கணவர் ஒருவர் தனது மனைவிக்கு பரிசளிக்கும் விதத்தை பிராங்க் வீடியோவாக செய்து நகைச்சுவையாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை 239,405 பேர் பார்த்துள்ளனர்.

     



    அடுத்த படியாக 1ம் இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளதுமுருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் டாக்கு லெஸ் வொர்க்கு மோரு லிரிக்ஸ் பாடல்.

    நடிகர் சாந்தனு மற்றும் அதுல்யா ரவி நடிப்பில் வெளியாகியுள்ள இந்த படத்தின் லிரிக் பாடலை ஷிவாங்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் சாம் விஷால் பாடியுள்ளனர். இந்த பாடல் தான் தற்போது ட்ரெண்டிங்கில் 1ம் இடம் பிடித்துள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published: