• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • Youtube Trending Today : 'முதல் இடம் பிடித்த ஜெகமே தந்திரம் ட்ரெய்லர்...புகழுக்கு குவியும் வாழ்த்து '- இன்றைய ட்ரெண்டிங் வீடியோ

Youtube Trending Today : 'முதல் இடம் பிடித்த ஜெகமே தந்திரம் ட்ரெய்லர்...புகழுக்கு குவியும் வாழ்த்து '- இன்றைய ட்ரெண்டிங் வீடியோ

இன்றைய ட்ரெண்டிங் வீடியோ

இன்றைய ட்ரெண்டிங் வீடியோ

இன்றைய தினம் யூடியூப் ட்ரெண்டிங்கில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் திரைப்பட ட்ரைலர்,அராத்து பூர்ணிமா, குக் வித் கோமாளி புகழ், ஜங்கிள் குயின், நெஞ்சத்திலே எபிசோடு 1 , ஏன் என்றால் காதல் என்பேன்,ரோட்டு கடை உணவு , Anything You Can Fit In The Triangle I’ll Pay For, வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன.

  • Share this:
    இன்றைய தினம் யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கும் முதல் வீடியோ தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் திரைப்பட ட்ரைலர்.தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸில் வரும் 18-ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டனர்.

    ட்ரெய்லர் பரவலான கவனத்தை பெற்றிருக்கும் நிலையில், படம் ஓடிடி தளத்தில் வெளியாவதால் உண்டான ஏமாற்றத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் தனுஷ். 'சிறப்பான திரை அனுபவமாக இருக்க வேண்டியது நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. இருந்தாலும் ஜகமே தந்திரத்தையும், சுருளியையும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்' என் ட்வீட் செய்துள்ளார் தனுஷ்.



    ஜகமே தந்திரம், கார்த்திக் சுப்பராஜ் பல வருடங்கள் முன்பு எடுக்க நினைத்த படம். தனுஷும் நடிக்க ஒப்புக் கொண்ட நிலையில், தனுஷின் சந்தை மதிப்பைவிட படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்ததால் படப்பிடிப்பு தள்ளிப் போடப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் தனுஷ் மாஸ் நடிகராக உருவெடுக்க, ஜகமே தந்திரத்தை தொடங்கினர். படம் திரையரங்கில் வெளியாகாதது தனுஷுக்கு மட்டுமில்லை, அவரது ரசிகர்களுக்கும் ஏமாற்றமே.இந்த ட்ரைலர் யூடியூபில் முதல் இடத்தில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

    அடுத்ததாக ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கும் வீடியோ பரட்டை புகழ் சேனல். இந்த சேனலில் இடம் பெற்றிருக்கும் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ 448,994 பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டிங்கில் 2ம் இடம் பிடித்துள்ளது.



    அடுத்ததாக ட்ரெண்டிங்கில் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் வீடியோஜங்கிள் குயின். இந்த வீடியோ இதுவரை 3,699,355 பார்வையாளர்களை பெற்றுள்ளது.



    அடுத்ததாக ட்ரெண்டிங்கில் 6ம் இடம் பெற்றுள்ள வீடியோ Anything You Can Fit In The Triangle I’ll Pay For எனும் வீடியோ. இந்த வீடியோ இதுவரை 9,697,902 பார்வையாளர்களை பெற்றுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    MrBeast எனும் யூடியூப் சேனலில் இந்த வீடியோ இடம் பெற்றுள்ளது. இந்த சேனலுக்கு இதுவரை 62.8M subscribers உள்ளனர்.



    அடுத்தாததாக 7வது இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ள வீடியோ ரோட்டு கடை உணவு. இந்த ஊரடங்கு காலத்தில் ஊர் சுற்றும் இளைஞர்கள் பெரிதும் மிஸ் பண்ற ஒரு விஷயம் இது. அதிலும் வெளியூர் சென்று வேலை செய்வோருக்கு ரோட்டு கடை சாப்பாடு தான் பசி போக்கும் அன்னபூரணி. இவர்கள் இல்லையேல் பலரும் பட்டினியில் பணி செய்ய வேண்டியது தான்.



    அடுத்ததாக 18வது இடத்தில ட்ரெண்டிங்கில் உள்ளது அராத்து பூர்ணிமா வீடியோ. இருக்கு ஆனா இல்ல என்ற தலைப்பில் அம்மாவிற்கும் பொண்ணுக்கும் இடையே நடக்கும் சுவாரசிய விஷயங்களை நகைச்சுவையகவும், நேர்த்தியாகவும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ இதுவரை 1,037,001 பார்வையாளர்களை பெற்றுள்ளது.



    அடுத்தத்ததாக 20வது இடத்தில் ட்ரெண்டிங்கில் இருப்பவர் குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி . இவரது ஏன் என்றால் காதல் என்பேன் ஷார்ட் பிலிம் 1,198,914 பார்வையாளர்களைப் பெற்று ட்ரெண்டிங்கில் 20 வது இடத்தில் உள்ளது. இதற்கு புகழின் ரசிகர்கள் பலரும் அப்ப என்னோட தலைவன் வாழ்க்கை என பதிவிட்டு வருகின்றனர்.



    இட்லி தோசைக்கு பதிலாக இப்படி செய்துபாருங்க எனும் வீடியோ ட்ரெண்டிங்கில் 10வது இடத்தில் உள்ளது. 226,250 பார்வையாளர்களை பெற்றுள்ள இந்த வீடியோவிற்கு சபாஷ் சகோதரி எப்படி இப்படி திறமையா யோசித்து வெற்றியும் பெறுகிறீர்கள் என ரசிகர்கள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.



    ட்ரெண்டிங்கில் 11 வது இடத்தில் இருக்கும் வீடியோ நாக் அவுட் எனும் வீடியோ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள நெஞ்சத்திலே எபிசோடு 1 வீடியோ.



    இதுவரை 964,389 பார்வையாளர்களை பெற்றுள்ள இந்த வீடியோவிற்கு ரசிகர்கள், Sun Music சம்பவங்கள்..90s Kids விளையாட்டு என கமெண்ட்ஸ்களை பதிவிட்டு கடந்த காலங்களை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: