• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • Youtube Trending Today : பாவம் கணேசன்...பரிதாபத்தில் பாக்கியா? ஊரடங்கில் ஒரு சுற்றுலா..அஸ்வினின் அசத்தல் ஐடியா! - இன்றைய ட்ரெண்டிங் பட்டியல்

Youtube Trending Today : பாவம் கணேசன்...பரிதாபத்தில் பாக்கியா? ஊரடங்கில் ஒரு சுற்றுலா..அஸ்வினின் அசத்தல் ஐடியா! - இன்றைய ட்ரெண்டிங் பட்டியல்

 இன்றைய ட்ரெண்டிங் பட்டியல்

இன்றைய ட்ரெண்டிங் பட்டியல்

இன்றைய தினம் யூடியூப் ட்ரெண்டிங்கில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் திரைப்பட ட்ரைலர்,England v New Zealand - Day 1 Highlights,பாக்கிய லட்சுமி சீரியல் ப்ரோமோ,குக் வித் கோமாளி புகழ், ஜங்கிள் குயின், ரோட்டு கடை உணவு , Anything You Can Fit In The Triangle I’ll Pay For, பாவம் கணேசன் சீரியல் ப்ரோமோவீடியோக்கள் இடம்பெற்றுள்ளன.

  • Share this:
    இன்றைய தினம் யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கும் முதல் வீடியோ தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் திரைப்பட ட்ரைலர். ட்விட்டரிலும் இன்றைய தினம் இந்திய ட்ரெண்டிங்கில் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் தான் இடம் பிடித்துள்ளது. இந்த படத்திற்கான எமோஜியை ட்விட்டரில் படக்குழு வெளியிட்டுள்ளது.

    ஜகமே தந்திரம், கார்த்திக் சுப்பராஜ் பல வருடங்கள் முன்பு எடுக்க நினைத்த படம். தனுஷும் நடிக்க ஒப்புக் கொண்ட நிலையில், தனுஷின் சந்தை மதிப்பைவிட படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்ததால் படப்பிடிப்பு தள்ளிப் போடப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் தனுஷ் மாஸ் நடிகராக உருவெடுக்க, ஜகமே தந்திரத்தை தொடங்கினர். படம் திரையரங்கில் வெளியாகாதது தனுஷுக்கு மட்டுமில்லை, அவரது ரசிகர்களுக்கும் ஏமாற்றமே. இந்த ட்ரைலர் யூடியூபில் முதல் இடத்தில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. நேற்றைய தினமும் முதலிடத்தில் இந்த வீடியோவே இடம் பெற்று இருந்தது. தற்போது இந்த வீடியோ 9,262,855 பார்வையாளர்களையும், 25,266 கமெண்ட்ஸ்களையும் பெற்றுள்ளது.

     



    அடுத்ததாக ட்ரெண்டிங்கில் 2ம் இடம் பிடித்திருக்கும் வீடியோ England v New Zealand - Day 1 Highlights. நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய கிரிக்கெட் தொடரின் முக்கிய தருணங்களை England & Wales Cricket Board யூடியூப் பக்கம் அதன் அதிகாரபூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ட்ரெண்டிங்கில் 2ம் இடம் பிடித்துள்ளது. மேலும் 1,402,572 பார்வையாளர்கள் மற்றும் 2,750 கமெண்ட்ஸ்களையும் பெற்றுள்ளது.



    ட்ரெண்டிங் பட்டியலில் 3வது இடத்தில் இருப்பது பாக்கிய லட்சுமி சீரியல் ப்ரோமோ வீடியோ. இந்த ப்ரோமோவை இதுவரை 2,312,830 பேர் பார்த்துள்ளனர். 855 கமெண்ட்ஸ்களை பெற்றுள்ளது. பாக்கியலட்சுமி சீரியல் 27 ஜூலை 2020 முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர் ஆகும்.

    ALSO READ |  கலைஞர் புகழ் பாடும் இணையவாசிகள்...எமோஜியை கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள் - இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங் இவை தான்!

    இது ஸ்டார் ஜல்சா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ஸ்ரீமோயி' என்ற பெங்காலி மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும். இந்த தொடரை 'டேவிட்' என்பவர் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவருடன் வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் போன்ற பலர் நடிக்கிறார்கள்.



    ட்ரெண்டிங்கில் அடுத்த இடத்தில் 4வது இடத்தில் இருப்பது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ப்ரோமோ . இதுவரை 2,003,609 பார்வையாளர்களை இந்த ப்ரோமோ பெற்றுள்ளது. இந்த ப்ரோமோவிற்கு பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒருவர் தயவுசெய்து மாயையோடு சேர்த்து வையுங்கள் ரொம்ப நாளைக்கு இதவே இழுக்காதீர்கள் மண்டை காய்கிறது என பதிவிட்டுள்ளார்.

    ALSO READ | ப்ரைரி நாய்யை கையில் வைத்து தாலாட்டும் சிறுமி - வைரல் வீடியோ!

    மற்றொருவர், ஒரு பெண்ணிற்கு குழந்தை வரம் கிடைப்பதே தற்போது அபூர்வம்.. எனவே இது போன்ற நாடகங்களை நாங்கள் பார்த்தால் எங்கள் மனம் உடைந்து போகிறது. பாசிட்டிவாக சீரியலை கொண்டு போங்க என மற்றொருவர் பதிவிட்டுள்ளார். மேலும் மஹாவின் நடிப்பு அருமை எனவும் அவருக்கு நாங்கள் தொடர்ந்து ரசிகர்கள் எனவும் பதிவிட்டள்ளனர்.



    அடுத்ததாக ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கும் வீடியோ பரட்டை புகழ் சேனல். இந்த சேனலில் இடம் பெற்றிருக்கும் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ 542,290 பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டிங்கில் 5ம் இடம் பிடித்துள்ளது.

     



    அடுத்ததாக ட்ரெண்டிங்கில் 6ம் இடம் பிடித்திருக்கும் வீடியோ ஜங்கிள் குயின். இந்த வீடியோ இதுவரை 5,079,005 பார்வையாளர்களை பெற்றுள்ளது.

     



    அடுத்ததாக ட்ரெண்டிங்கில் 6ம் இடம் பெற்றுள்ள வீடியோ Anything You Can Fit In The Triangle I’ll Pay For எனும் வீடியோ. இந்த வீடியோ இதுவரை 18,289,392 பார்வையாளர்களை பெற்றுள்ளது.MrBeast எனும் யூடியூப் சேனலில் இந்த வீடியோ இடம் பெற்றுள்ளது. இந்த சேனலுக்கு இதுவரை 62.8M subscribers உள்ளனர்.



     

    அடுத்தாததாக 8வது இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ள வீடியோ ரோட்டு கடை உணவு. இந்த ஊரடங்கு காலத்தில் ஊர் சுற்றும் இளைஞர்கள் பெரிதும் மிஸ் பண்ற ஒரு விஷயம் இது. அதிலும் வெளியூர் சென்று வேலை செய்வோருக்கு ரோட்டு கடை சாப்பாடு தான் பசி போக்கும் அன்னபூரணி. இவர்கள் இல்லையேல் பலரும் பட்டினியில் பணி செய்ய வேண்டியது தான்.



    ட்ரெண்டிங்கில் 9 வது இடத்தில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் இடம் பிடித்துள்ளார். தமிழகத்தில் தனக்கென தனி ரசிகர்களை கொண்டுள்ள அஸ்வின் சுற்றுலா பயணம் என தனது யூடியூபில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இதுவரை 252,092 பார்வையாளர்களை பெற்றுள்ளது.

     



    அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாவம் கணேசன் சீரியல் ப்ரோமோ 11ம் இடம் பிடித்துள்ளது. 1,407,797 பார்வையாளர்களை இதுவரை பெற்றுள்ள இந்த வீடியோவிற்கு 374 பேர் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

     





    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: