இன்றைய தினம் யூடியூபில் முதல் இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது மைக்செட் யூடியூப் சேனலின் கொரோனா சோதனைகள் 2 வீடியோ. 1,497,269 பார்வையாளர்களை பெற்றுள்ள இந்த வீடியோவிற்கு 5,582 பேர் கமெண்ட் செய்துள்ளனர். ஸ்ரீராம் என்பவர் மைக்செட் (Micset) என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகின்றார்.
இவரது சேனலுக்கு 6.53 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இவரது வீடியோக்கள் நகைச்சுவையாகவும், தற்கால அனுபவங்களை வைத்து எடுக்கப்பட்டவை போலவும் இருப்பதால் இன்றைய இளைஞர்கள் மத்தியில் இவர் பிரபலமானவர். இவருக்கென இணையத்தில் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
அடுத்ததாக ட்ரெண்டாகியுள்ள வீடியோ ப்ரான்க்ஸ்ட்டர் ராகுல் யூடியூப் பக்கத்தில் பதிவிடப் பட்டுள்ள வீடியோ. 487,075 பார்வையாளர்களை பெற்றுள்ள இந்த வீடியோவிற்கு 2,440 பேர் கமெண்ட் செய்துள்ளனர்.
மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞனாக நடிக்கிறார். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள், மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் பாடல்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த பாடல் யூடியூப் ட்ரெண்ண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. 1,771,351க்கும் மேற்பட்டோர் இந்த பாடலை பார்த்துள்ளனர். இனிமேல் இந்த பாட்டு போடாத ஒரு முஸ்லிம் கல்யாண வீட்ட கூட நீங்க பார்க முடியாது என இணையவாசிகள் இந்த பாடலை ரசித்து கேட்டு வருகின்றனர்.
அடுத்த இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ள வீடியோ வீட்ல விசேஷங்க எனும் தலைப்போடு கண்ணன் பகவதி சேனல் பதிவிட்டுள்ள வீடியோ. 631,338 பார்வையாளர்களை பெற்றுள்ள இந்த வீடியோவில் வீட்டில் நடக்கும் விஷேஷ நிகழ்வை பதிவிட்டுள்ளனர்.
கணவனிடம் மனைவிமார்கள் செய்யும் குறும்புகள் வீடியோவாக பலர் பதிவேற்றுவர். அவ்வகையில் இன்றைய தினம் மனைவி செய்யும் குறும்பு ஒன்று ட்ரெண்டிங்கில் 3வது இடத்தில் இடம் பிடித்துள்ளது.6,848,955 பார்வையாளர்களை பெற்றுள்ள இந்த வீடியோவிற்கு 1,318 பேர் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.
அடுத்த இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ள வீடியோ பிக்பாஸ் அனிதா சம்பத்தின் ஷூட்டிங் எப்படி போகுது வீடியோ. ஷூட்டிங் செல்வதற்கு பயன்படுத்தும் கேரவனை சுற்றி காண்பிக்கும் இவரது வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.244,546 பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ள இவரது வீடியோவிற்கு பலரும் கமெண்ட்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
கோதுமை மாவு இருந்தால் இப்படி செய்துபாருங்க எனும் வீடியோ 117,201 பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டிங்கில் அடுத்த இடத்தில் உள்ளது. 136 பேர் இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ளனர்.
கண்ணன் பகவதி சேனலில் பதிவிடப்பட்டுள்ள டெய்லி மை லைப் வீடியோ 299,811 பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டிங்கில் அடுத்த இடத்தில் உள்ளது.
அடுத்த இடத்தில் ட்ரெண்டாகியுள்ள வீடியோ சீரியல் நடிகை ஹேமா வீடியோ. தனது குழந்தைக்கு தற்போது பிறந்து 10வது மாதம் ஆவதால் குழந்தைக்கு என்னென்ன உணவு கொடுக்கின்றோம் என விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ இதுவரை 638,864 பார்வையாளர்களை பெற்றுள்ளது.
அடுத்ததாக ட்ரெண்டிங் பட்டியலில் இடம் பெற்றுள்ளது வில்லேஜ் குக்கிங் சேனலில் இடம் பெற்றுள்ள வீடியோ. அசைவ உணவான மட்டனை எவ்விதம் செய்வது என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்த சேனலுக்கு உள்நாட்டில் மட்டும் அல்ல வெளிநாட்டிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் உண்டு.இந்த வீடியோ 2,413,369 பார்வையாளர்களை பெற்றுள்ளது.இந்த வீடியோ கடந்த 3 நாட்களாக ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anitha sampath, Bigg Boss Tamil, Youtube