• HOME
 • »
 • NEWS
 • »
 • trend
 • »
 • Youtube Trending : என்னென்ன சொல்றான் பாருங்க.. பாராட்டு பெறும் ராஜாராணி; மைக் செட் ஸ்ரீராம் வெளியிட்ட அசத்தல் வீடியோ' - இன்றைய ட்ரெண்டிங்

Youtube Trending : என்னென்ன சொல்றான் பாருங்க.. பாராட்டு பெறும் ராஜாராணி; மைக் செட் ஸ்ரீராம் வெளியிட்ட அசத்தல் வீடியோ' - இன்றைய ட்ரெண்டிங்

யூடியூப் ட்ரெண்டிங்

யூடியூப் ட்ரெண்டிங்

இன்றைய தினம் யூடியூப் ட்ரெண்டிங்கில் ராஜா ராணி சீரியல் , பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி மெகா சங்கமம் , Manga Piching & Kerala Style Manga Oorga , நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ப்ரோமோ , சரவணன் மீனாட்சி மைனா வீடியோ ,மாமே ஓட்டாண்டி வீடியோ , Re-Exam Paavangal , Sisters Reunion வீடியோக்கள் இடம்பெற்றுள்ளது.

 • Share this:
  எப்பா ரொம்ப வருஷத்துக்கு அப்றம் வந்த ஒரே உருப்படியான ப்ரோமோ என ரசிகர்கள் கமெண்ட்ஸில் வியந்து பாராட்டும் வண்ணம் விஜய் டிவி ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ராஜா ராணி சீரியல் 2017-2019ம் வரை விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை 7 மணிக்கு ஒளிபரப்பானது. அதில் சின்னையா கதாபாத்திரத்தில் ஆல்யா மானசாவின் கணவர் சஞ்சய் நடித்திருந்தார்.

  இருவரும் தங்கள் ரியல் லைஃபில் திருமணம் செய்து கொண்ட பிறகு தற்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகம் சிறப்பாக ஓடிக்கொண்டு உள்ளது. இந்த தொடரின் இரண்டாவது பருவம் 10 அக்டோபர் 2020 ஆம் ஆண்டு முதல் புதிய கதைக்களத்துடன் திங்கள் முதல் சனி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பகின்றது.இதன் ப்ரோமோ தற்போது யூடியூப் ட்ரெண்டிகள் முதல் இடம் பிடித்துள்ளது.

  இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் எப்பாடி விஜய் டவி ல இப்போ தான்டா ஒரு உருப்புடியான ப்ரோமோ பேட்டுருக்கீங்க,எப்பா ரொம்ப வருஷத்துக்கு அப்றம் வந்த ஒரே உருப்படியான ப்ரோமோ,உண்மை தான் வெல்லும் என்று சரவணன் அண்ணா நிரூபித்து காட்டியது மகிழ்ச்சி எனவும் கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.  இன்றைய தினம் அடுத்ததாக ட்ரெண்டிங்கிங்கில் உள்ள வீடியோ பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி மெகா சங்கமம் வீடியோ. ஐஸ்வர்யா தனது மனதில் கண்ணனை வைத்து கொண்டு வீட்டில் பார்த்த மாப்பிள்ளையுடன் நிச்சயம் செய்து கொள்கின்றார். இதனை பார்த்த கண்ணன் அப்புறம் என்ன நல்ல இரு என வாழ்த்து தெரிவிக்க ஐஸ்வர்யா எனக்கு உன்னை தான் பிடிக்கும் மாமா என கூறுகின்றார்.

  இந்த ப்ரோமோ ட்ரெண்டிங்கில் 2ம் இடம் பிடித்துள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள், காதல முதலையே சொல்லுங்க.தேவை இல்லாம இன்னொரு மாப்பிள்ளை அவமானம் பட வக்காதிங்க எனவும், முதல்ல இந்த சங்கமத்தை முடிச்சிட்டு அவங்க அவங்க வீட்டை பார்த்து ஓடுங்க,இது சங்கமம் இல்ல எங்களுக்கு வந்த சங்கடம் ,Director Sir இத ஒத்துக்க முடியாது......scene aa மாத்துங்க என பலரும் கமெண்ட்ஸ் பதிவிட்டுள்ளனர். 2,861,880 பார்வையாளர்கள் இந்த ப்ரோமோவை பார்த்துள்ளனர். 1,909 பேர் இந்த ப்ரோமோவிற்கு கமெண்ட்ஸ் பதிவிட்டுள்ளனர்.  யூடியூப் ட்ரெண்டிங்கில் அடுத்த இடத்தில் உள்ள வீடியோ Manga Piching & Kerala Style Manga Oorga என்ற தலைப்போடு குக்வித் கோமாளி ஷிவாங்கி பதிவிட்டுள்ள வீடியோ. பெரியம்மா வீட்டிற்கு கேரளா சென்றுள்ள ஷிவாங்கி அங்கு மங்கா பறித்து ஊறுகாய் போடுவதை வீடியோவாக வெளியிட்டுள்ளார் . 1,286,757 பார்வையாளர்கள் இந்த ப்ரோமோவை பார்த்துள்ளனர். 3,830 பேர் இந்த ப்ரோமோவிற்கு கமெண்ட்ஸ் பதிவிட்டுள்ளனர்.  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ப்ரோமோ அடுத்த இடத்தில் ட்ரெண்டியாகி உள்ளது. இதன் இரண்டாம் பருவத்தில் செந்தில் குமார் என்பவர் 'மாயன்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்க, இவருக்கு ஜோடியாக ரச்சித்தா மகாலட்சுமி என்பவர் 'மகாலட்சுமி' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த தொடர் 27 ஜூலை 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகின்றது

  இதன் தற்போதைய ப்ரோமோவில் மகாலட்சுமி மாயனிடம் முக்கியமாக ஒன்று பேச வேண்டும். வரும் பொழுது வாழைப்பழ மைசூரு பாக்கு மற்றும் இறுக்கி கட்டிய மல்லிகை பூ வாங்கி வா என கூற ஆசை ஆசையை வாங்கி வந்த மாயன் அதனை மகாலட்சுமிக்கு வழங்குகின்றார். பொறுப்பா சொல்றேன் என சாவகாசமாக மைசூரு பாக்கை மகா சாப்பிட்டுவிட்டு சொல்வதற்குள் மாயனை போலீஸ் பிடித்துச் சென்றனர். இந்த ப்ரோமோ இதுவரை 2,300,946 பார்வையாளர்களை பெற்றுள்ளது.இதற்கு ஒருவர் என்னடா இப்படி guess பண்ணவே முடியாத மாறி வச்சிட்டீங்க, korean mystery la கூட பத்தாவது scene ல கண்டுபுடிச்சிரலாமே.... ம்ம்ம்ம் யாரா இருக்கும்????? என பதிவிட்டுள்ளார்.  அடுத்த இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது சரவணன் மீனாட்சி மைனா வீடியோ. Mr & Mrs Chinnathirai Shooting Vlog என்ற தலைப்பில் மைனா சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ 341,067 பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

  மைக் செட் யூடியூப் வெளியிட்டுள்ள Hey Singari மியூசிக் டீசர் வீடியோ அடுத்த இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. மைக் செட் சேனலில் இந்த பாடல் விரைவில் வெளியாக உள்ளது என வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவிற்கு கமெண்ட்சில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.ஸ்ரீராம் அண்ணா உங்களுடைய வெற்றிக்கு முடிவே இருக்க கூடாது நிங்கள் தொடர்ந்து செயல்படணும் நன்றி வாழ்த்துக்கள் என யூடியூபர் ஸ்ரீ ராமிற்கு பலரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.  மாமே ஓட்டாண்டி வீடியோ யூடியூபில் அடுத்த இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. ஹரி பாஸ்கர் யூடியூப் சேனலில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.204,376 பார்வையாளர்களை பெற்றுள்ள இந்த வீடியோவை 1,177 பேர் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.  அடுத்த இடத்தில் Re-Exam Paavangal வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.பரிதாபங்கள் யூடியூப் சேனல் வெளியிட்டுள்ள இந்த வீடியோவிற்கு 5,276 கமென்ட்ஸ் பதிவிட்டுள்ளார். இந்த சேனலில் வரும் கோபி, சுதாகர் மிகவும் பிரபலமானவர்கள் . இவர்கள் இருவரின் நடிப்பிற்க்காக பலரும் இந்த வீடியோவை பார்வையிட்டு வருகின்றனர்.யாருக்கெல்லாம் இவங்க வாரத்துக்கொரு ஒரு வீடியோ போடுறது ரொம்ப புடிச்சிருக்கு என இவர்களது வீடியோவிற்கு கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றது.  Sisters Reunion வீடியோ 988,639 பார்வையாளர்களை பெற்று அடுத்த இடத்தில் ட்ரெண்டிங்காகியுள்ளது.அருமையான அக்கா தங்கைகள் நீங்கள் மூவரும் இன்று போல் என்றும் ஒற்றுமையாக இருங்கள் என பிக்பாஸ் விஜி, அவரது சகோதரி காரக்குழம்பு கனி, ஆகியோர் தங்கள் அப்பாவுடன் வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sankaravadivoo G
  First published: