Youtube Trending Today : என் தலைவன் புகழ் வாழ்க்க... பவித்ராவை கேள்வி கேட்கும் ரசிகர்கள்,அராத்து பூர்ணிமா அட்டகாசம் - இன்றைய ட்ரெண்டிங் வீடியோ

இன்றைய ட்ரெண்டிங் வீடியோ

இன்றைய தினம் யூடியூப் ட்ரெண்டிங்கில் அராத்து பூர்ணிமா, தீபா அக்கா, முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் டாக்கு லெஸ் வொர்க்கு மோரு லிரிக்ஸ் பாடல், குக் வித் கோமாளி புகழ், யுவான்சங்கர் ராஜா, ஆல்யா மனசா , கத்திரிக்காய் குழம்பு வீடியோ, ஸ்டெபி உலகம், நடிகை விஜய லக்ஷ்மி, போன் வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன.

  • Share this:
    இன்றைய தினம் ட்ரெண்டிங்கில் முதல் இடம் அராத்து பூர்ணிமா வீடியோ தான். யூடியூபில் மட்டும் அல்ல இணையவாசிகள் மத்தியிலும் இடம் பிடித்துள்ளார் அராத்து பூர்ணிமா.

    நகைச்சுவைக்கென பெயர் போன இவரது வீடியோ பலரும் ரசிக்க வைக்கும் படி அமைந்துள்ளளது. இந்த வீடியோ இதுவரை 344,618 பார்வையாளர்களை பெற்றுள்ளது.



    அடுத்த படியாக 2ம் இடத்தை பிடித்துள்ளது வீட்டில் நடக்கும் அம்மா, பையன் காமெடிகளை மையமாக வைத்து குக் வித் கோமாளி தீபா அக்கா நடித்துள்ள வீடியோ. அம்மா, பையன் பாசத்தை மையமாக கொண்டு இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினமும் இந்த வீடியோ முதல் இடத்தில் இருந்தது. இந்த வீடியோ இதுவரை 457,717 பார்வையாளர்களை பெற்றுள்ளது. வெள்ளை மனமும், வெகுளித்தனமும் கொண்ட தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை ஒற்றை சிரிப்பில் சம்பாதித்த தீபா அக்கா குக் வித் கோமாளி மூலம் சமீபத்தில் அதிகம் பேசப்பட்டார்.



    அடுத்த படியாக 3ம் இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளதுமுருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் டாக்கு லெஸ் வொர்க்கு மோரு லிரிக்ஸ் பாடல். நேற்றைய தினம் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் டாக்கு லெஸ் வொர்க்கு மோரு லிரிக்ஸ் பாடல் வெளியிடப்பட்டது.வெளியிடப்பட்ட 24 மணிநேரத்தில் இந்த பாடல் 1.2 மில்லியன் வியூக்களை தற்போது 1,755,508 பார்வையாளர்களை கடந்துள்ளது. நடிகர் சாந்தனு மற்றும் அதுல்யா ரவி நடிப்பில் வெளியாகியுள்ள இந்த படத்தின் லிரிக் பாடலை ஷிவாங்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் சாம் விஷால் பாடியுள்ளனர். இந்த பாடல் தான் தற்போது ட்ரெண்டிங்கில் 3ம் இடம் பிடித்துள்ளது.



    அடுத்ததாக ட்ரெண்டிங்கில் 4ம் இடத்தில் உள்ளது யுவான்சங்கர் ராஜா, இளையராஜா இசை அமைத்த மாமனிதன் படத்தின் 2 வது பாடலான ஏ ராசா பாடல். பா.விஜய் எழுதியுள்ள இப்பாடலின் வீடியோவில் யுவன் ஷங்கர் ராஜா பாடி நடித்துள்ளார். இந்த பாடலுக்கு பலரும் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். ஒடஞ்சதெல்லாம் ஒட்ட வைக்கிற சக்தி யுவன் கிட்ட மட்டும் தான் இருக்கு.

    ALSO READ | "அட இது என் நிழலா?" தன் நிழலை பார்த்து வியந்த ஒட்டக குட்டி - வைரலாகும் வீடியோ

    யுவன் வாழ்வின் நம்பிக்கை எனவும், என் மனசுல இருந்த பாரமே போய்டிச்சே எனவும், என் மனசுல இருக்குற பாரம் எல்லாம் இறங்கிடுச்சு வெற்றியோ தோல்வியோ போராடுவோம் எனவும், நா இப்போ இருக்கிற சூழ்நிலைக்கு இந்த பாடல் எனக்கு மிகவும் அவசியம் எனவும் இந்த பாடலுக்கு கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றது.

    யுவன் வாழ்வின் நம்பிக்கை எனவும், என் மனசுல இருந்த பாரமே போய்டிச்சே எனவும், என் மனசுல இருக்குற பாரம் எல்லாம் இறங்கிடுச்சு வெற்றியோ தோல்வியோ போராடுவோம் எனவும், நா இப்போ இருக்கிற சூழ்நிலைக்கு இந்த பாடல் எனக்கு மிகவும் அவசியம் எனவும் இந்த பாடலுக்கு கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றது.



    அடுத்தத்ததாக தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருப்பவர் குக் வித் கோமாளி புகழ். Lockdown-ல் பழைய தொழிலை கையில் எடுத்த புகழ் எனும் இவரது வீடியோ கடந்த நாட்களாக தொடர்ந்து 5 ம் இடத்தில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. இந்த வீடியோ இதுவரை 551,959 பார்வையாளர்களை பெற்றுள்ளது.

    ALSO READ | 'வளர்த்த பெண்ணை கண்டதும் கத்தி பாசத்தை பொழிந்த கழுதை' கண்ணீருடன் கட்டி அனைத்த சிறுமி - வைரலாகும் வீடியோ

     



    ALSO READ | தண்ணீருக்கு தவித்த கழுகிற்கு தாகம் போக்கிய வழிபோக்கர்கள் - வைரல் வீடியோ!

    அடுத்தத்ததாக 6வது இடத்தில் ட்ரெண்டிங்கில் இருப்பவர் குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி .இவரது ஏன் என்றால் காதல் என்பேன் ஷார்ட் பிலிம் 183,164 பார்வையாளர்களைப் பெற்று ட்ரெண்டிங்கில் 6 வது இடத்தில் உள்ளது. இதற்கு புகழின் ரசிகர்கள் பலரும் அப்ப என்னோட தலைவன் வாழ்க்கை என பதிவிட்டு வருகின்றனர்.



    அடுத்ததாக நாவூறும் சுவையில் மணமனக்கும் கத்திரிக்காய் குழம்பு வீடியோ தான் ட்ரெண்டிங்கில் 9ம் இடத்தை பிடித்துள்ளது. வில்லேஜ் குக்கிங் சேனல் யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.இந்த் வீடியோவை பார்த்த பலரும் கமெண்ட்ஸ்களை தெறிக்க விட்டுள்ளனர்.



    ALSO READ |  ஸ்பெஷல் இயந்திரம் மூலம் இளநீர் வெட்டி விற்கும் வியாபாரி - வைரலாகும் வீடியோ!

    வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு என யூடியூபில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ரெம்ப நாளா வீடியோவுக்காக காத்திருந்தோம் என இந்த வீடியோ விற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.



    அடுத்ததாக 8 வது இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது ஆல்யா மனசா. விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா - ராணி சீரியலில் செம்பா - கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர்கள் சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி.சீரியலில் மட்டுமல்லாது சீரியஸாகவே காதலித்து வந்த சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

    சஞ்சீவ் - ஆல்யா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ‘அய்லா சையத்’ என்று பெயரிட்டதாகவும் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டார் ஆல்யா. இவர் தற்போது விஜய் டிவியில் மீண்டும் சீரியலில் நடித்து வருகின்றார். இவரது யூடியூப் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள எப்படி இருந்த நான் எப்படி ஆயிட்டேன் வீடியோ ட்ரெண்டிங்கில் 8ம் இடம் பிடித்துள்ளது.



    அடுத்தாக ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ள சேனல், ஸ்டெபி உலகம். வியாழக்கிழமை ஆனாவே எப்படா 11 மணி ஆகும்னு இருக்கு. உங்க குடும்பத்தை பார்த்தா அவ்ளோ சந்தோசமா இருக்கு ஸ்டெஃபி அக்கா என இவரது வீடியோவிற்கு ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். இவரது வீடியோ தான் ட்ரெண்டிங்கில் 11 வது இடம் பிடித்துள்ளது.

     



    அடுத்ததாக 12 வது இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது நடிகை விஜய லக்ஷ்மியின் யூடியூப் சேனல். தலை முடியை பராமரிப்பது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.





    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sankaravadivoo G
    First published: