• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • Youtube Trending : வனிதா வீட்டில் விசேஷம்... விபத்தில் சிக்கிய பாரதி - யூடியூபில் ட்ரெண்டான வீடியோக்கள்

Youtube Trending : வனிதா வீட்டில் விசேஷம்... விபத்தில் சிக்கிய பாரதி - யூடியூபில் ட்ரெண்டான வீடியோக்கள்

யூடியூபில் ட்ரெண்டான வீடியோக்கள்

யூடியூபில் ட்ரெண்டான வீடியோக்கள்

இன்றைய தினம் யூடியூபில் Kannana Kanne Weekend Promo , Barathi Kannamma promo , Mommy Paavam Chutti Kuzhandhai ,Senthoora Poove promo , Mouna Raagam Season 2 , Yes or No Challenge , Work From Home Scenario, Taanakkaran Official Teaser , நினைத்தாலே இனிக்கும், Vanitha Vijaykumar Sri Lakshmi Kuberan Pooja, வீடியோக்கள் இன்றைய தினம் யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

  • Share this:
    கண்ணான கண்ணே சீரியலின் ஜூலை 17ம் தேதி வெளியான ப்ரோமோ வீடியோ யூடியூப் ட்ரெண்டிங்கில் தற்போது வரை இடம் பிடித்துள்ளது. இதுவரை இந்த ப்ரோமோ 4,054,217 பார்வையாளர்களை பெற்றுள்ளது.

    மீரா யுவா சேர்ந்தத நினைத்து சந்தோஷப்படறதா இல்ல பிரிதிய நினைச்சு கவலைப் படுறதா என இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் சந்தோசம் பாதி, கவலை பாதி என பதிவிட்டு வருகின்றனர்.



    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் ப்ரோமோ வீடியோ யூடியூபில் அடுத்ததாக ட்ரெண்டாகி உள்ளது. 4,732,160 பார்வையாளர்களை பெற்ற இந்த வீடியோ ட்ரெண்டிங்கில் அடுத்த இடத்தில் உள்ளது. வலிப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹேமாவை காண கண்ணம்மாவை அழைத்து வர செல்கிறார் பாரதி. அவரச கதியில் மருத்துவமனை செல்லும் பாரதியும், கண்ணம்மாவும் வழியில் காரில் செல்லும் பொழுது சிறு விபத்து உண்டாக பொறுமையாக செல்லுமாறும், ஹேமாவிற்கும் ஒன்றும் ஆகாது எனவும் கண்ணம்மா பாரதிக்கு அறிவுறுத்துகின்றார். நேற்று வெளியாகிய இந்த ப்ரோமோ வீடியோ தற்போது வரை ட்ரெண்டிங்கில் உள்ளது.



    ரவுடி பேபி யூடியூப் சேனலில் வெளியாகி உள்ள சுட்டி குழந்தை செய்யும் குறும்பு வீடியோ யூடியூபில் 794,369 பார்வையாளர்களை பெற்று வைரலாகி உள்ளது. Mommy Paavam என்ற தலைப்பில் வெளியாகி உள்ள இந்த வீடியோ வீட்டில் குழந்தைகள் செய்யும் குறும்புத் தனத்தை மையமாக கொண்டு உருவாக்க பட்டுள்ளது.



    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செந்தூரப்பூவே ப்ரோமோ வீடியோ தற்போது யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. இந்த தொடரில் பிரபல தமிழ் நடிகர் ரஞ்சித் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக தறி என்ற தொடரில் நடித்த ஸ்ரீ நிதி என்பவர் கதாநாயகியாக நடிக்கின்றார். இதில் செம்பருத்தி சீரியலில் நடித்த அகிலாண்டேஸ்வரி ரஞ்சித்திற்கு ஜோடியாக தற்போது நடித்து வருகின்றார். இந்த ஜோடியின் நடிப்பை பலரும் யூடியூபில் வாழ்த்துக்களோடு பதிவிட்டுள்ளனர். இந்த சீரியலின் கடந்த 18ம் தேதி வெளியான ப்ரோமோ தற்போது வரை ட்ரெண்டிங் பட்டியலில் உள்ளது.



    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌனராகம் சீரியலின் ப்ரோமோ வீடியோ 2,694,227 பார்வையாளர்களை பெற்று யூடியூபில் ட்ரெண்டாகி உள்ளது.



    Yes or No Challenge வீடியோ இன்று யூடியூப்பில் ட்ரெண்டாகி உள்ளது. 5,034,846 பார்வையாளர்களை பெற்றுள்ள இந்த வீடியோ பலரின் கவனம் பெற்றுள்ளது.



    ஜம்ப் கட்ஸ் சேனல் வெளியிட்டுள்ள Work From Home Scenario வீடியோ ட்ரெண்டிங்கில் அடுத்ததாக இடம் பிடித்துள்ளது.Work From Home பணியில் இருப்பவர்கள் வீட்டில் என்னென்ன செய்கின்றார்கள் என்பதை நகைச்சுவையாக இந்த வீடியோவில் வெளியிட்டுள்ளனர்.



    விக்ரம் பிரபுவின் டாணாக்காரன் டீஸர் யூடியூபில் வெளியாகி உள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ள இப்படத்தின் டீசரில் வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம் பிரபு நடித்துள்ளார்.

    இந்த படத்தின் லால் காதாப்பாத்திரங்களும் வசனங்களும் டீசரில் கவனம் ஈர்க்கின்றன. போலீஸ் ஆவதற்கு முன்பு பட்டாலியனில் பயிற்சி எடுக்கும்போது காவலர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகளையும் அடிமைத்தனத்தையும் காட்டுக்கிறது ‘டாணாக்காரன்’. இந்த படத்தின் டீசர் யூடியூபில் 1,146,438 பார்வையாளர்களை பெற்றுள்ளது.



    நாக் அவுட் யூடியூப் சேனலில் வெளியாகி உலா நினைத்தாலே இனிக்கும் வீடியோ யூடியூபில் ட்ரெண்டாகி உள்ளது. 339,160 பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.



    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் ‘விக்ரம்’ திரைப்படம் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கமல் ஹாசன் நடிக்கும் இந்தப் படத்தில், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் அர்ஜுன் தாஸ், நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த வீடியோ 2,385,744 பார்வையாளர்களை பெற்று யூடியூபில் ட்ரெண்டாகி உள்ளது.



    பிக்பாஸ் வனிதா வீட்டில் ஸ்ரீ லட்சுமி குபேரன் பூஜை நடைபெறுகின்றது. இதில் அவரது மூத்த மகளோடு வனிதா கலந்து கொள்ளும் வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. இதுவரை 358,912 பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: