Youtube Trending : ஹே சிங்காரி...யூடியூபில் கொடிகட்டி பறக்கும் மைக் செட் ஸ்ரீராம் - இன்றைய யூடியூப் ட்ரெண்டிங்

யூடியூப் ட்ரெண்டிங்

இன்றைய தினம் யூடியூப் ட்ரெண்டிங்கில் Hey Singari பாடல் , ராஜா ராணி சீரியல் , பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி மெகா சங்கமம் , Manga Piching & Kerala Style Manga Oorga ,Eruma Saani வீடியோக்கள் இடம்பெற்றுள்ளது.

  • Share this:
    மைக் செட் யூடியூப் வெளியிட்டுள்ள Hey Singari பாடல் வீடியோ முதல் இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. மைக் செட் சேனலில் இந்த பாடல் விரைவில் வெளியாக உள்ளது என நேற்றைய தினம் ட்ரைலர் ஒன்றை வெளியிட்டனர்.

    தற்போது இந்த வீடியோவிற்கு ஸ்ரீ ராம் ரசிகர்கள் கமெண்ட்சில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.ஸ்ரீராம் அண்ணா உங்களுடைய வெற்றிக்கு முடிவே இருக்க கூடாது நிங்கள் தொடர்ந்து செயல்படணும் நன்றி வாழ்த்துக்கள் என யூடியூபர் ஸ்ரீ ராமிற்கு பலரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.இந்த பாடலை ஜி.வி பிரகாஷ் பாடியுள்ளார்.



    அடுத்த இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது சரவணன் மீனாட்சி மைனா வீடியோ. Mr & Mrs Chinnathirai Shooting Vlog என்ற தலைப்பில் மைனா சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ 537,471 பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.



    அடுத்ததாக ட்ரெண்டிங்கில் இடம் பெற்றுள்ள வீடியோ Eruma Saani | Types of People Watching Jagame Thanthiram எனும் தலைப்பில் எருமை சாணி யூடியூப் சேனல் வெளியிட்டுள்ள வீடியோ. இந்த வீடியோ இதுவரை 600,215 பார்வையாளர்களை பெற்றுள்ளது.



    அடுத்ததாக ட்ரெண்டாகியுள்ள வீடியோ விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜாராணி சீரியல் வீடியோ. உண்மை தான் வெல்லும் என்று சரவணன் அண்ணா நிரூபித்து காட்டியது மகிழ்ச்சி என ராஜாராணி ரசிகர்கள் இந்த ப்ரோமோவை பார்த்து மகிழ்ச்சியில் உள்ளனர்.



    டிவோ மியூசிக் வெளியிட்டுள்ள நடன இயக்குனர் சாண்டி மாஸ்டரின் 3:33 வீடியோ அடுத்த இடத்தில் ட்ரெண்டாகியுள்ளது. பார்ப்பதற்கே ரொம்ப பயங்கரமாக உள்ள இந்த வீடியோ பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது.



    அடுத்ததாக ட்ரெண்டிகள் தொடர்ந்து இடம்பெற்றிருக்கும் வீடியோ பிக்பாஸ் அனிதா சம்பத் வீடியோ. Amma's House Shifting Vlog என அனிதா வெளியிட்டுள்ள இந்த வீடியோ ட்ரெண்டிங்கில் நேற்றைய தினமும் இடம் பிடித்திருந்தது. தற்போது இந்த வீடியோ 264,533 பார்வையாளர்களை பெற்றுள்ளது.



    யூடியூப் ட்ரெண்டிங்கில் அடுத்த இடத்தில் உள்ள வீடியோ Manga Piching & Kerala Style Manga Oorga என்ற தலைப்போடு குக்வித் கோமாளி ஷிவாங்கி பதிவிட்டுள்ள வீடியோ. பெரியம்மா வீட்டிற்கு கேரளா சென்றுள்ள ஷிவாங்கி அங்கு மங்கா பறித்து ஊறுகாய் போடுவதை வீடியோவாக வெளியிட்டுள்ளார் . 1,385,899 பார்வையாளர்கள் இந்த ப்ரோமோவை பார்த்துள்ளனர். 3,830 பேர் இந்த ப்ரோமோவிற்கு கமெண்ட்ஸ் பதிவிட்டுள்ளனர்.



    இன்றைய தினம் அடுத்ததாக ட்ரெண்டிங்கிங்கில் உள்ள வீடியோ பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி மெகா சங்கமம் வீடியோ. ஐஸ்வர்யா தனது மனதில் கண்ணனை வைத்து கொண்டு வீட்டில் பார்த்த மாப்பிள்ளையுடன் நிச்சயம் செய்து கொள்கின்றார். இதனை பார்த்த கண்ணன் அப்புறம் என்ன நல்ல இரு என வாழ்த்து தெரிவிக்க ஐஸ்வர்யா எனக்கு உன்னை தான் பிடிக்கும் மாமா என கூறுகின்றார்.

    இந்த ப்ரோமோ ட்ரெண்டிங்கில் 2ம் இடம் பிடித்துள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள், காதல முதலையே சொல்லுங்க.தேவை இல்லாம இன்னொரு மாப்பிள்ளை அவமானம் பட வக்காதிங்க எனவும், முதல்ல இந்த சங்கமத்தை முடிச்சிட்டு அவங்க அவங்க வீட்டை பார்த்து ஓடுங்க,இது சங்கமம் இல்ல எங்களுக்கு வந்த சங்கடம் ,Director Sir இத ஒத்துக்க முடியாது......scene aa மாத்துங்க என பலரும் கமெண்ட்ஸ் பதிவிட்டுள்ளனர். 2,861,880 பார்வையாளர்கள் இந்த ப்ரோமோவை பார்த்துள்ளனர். 1,909 பேர் இந்த ப்ரோமோவிற்கு கமெண்ட்ஸ் பதிவிட்டுள்ளனர்.



    ஆலியா மான்ஸாவின் Aila Papa ku Vaccine Potaachu வீடியோ அடுத்த இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. 869,669 பார்வையாளர்களை பெற்றுள்ள இந்த வீடியோவிற்கு 1,462 பேர் கமெண்ட்ஸ் பதிவிட்டுள்ளனர்.



    Village Cooking Channel Live Stream ஒன்றை வெளியிட்டுள்ளனர். யூடியூபில் இவர்கள் மிக பிரபலமானவர்கள். இவர்கள் லைவ்விற்கு கமெண்ட்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் உள்ளது.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: