Youtube Trending : 'வா தலைவா எவ்ளோ நாளாச்சு உன்ன இப்டி பாத்து...செம்பருத்தி டைரக்டரு...முடியல' - இன்றைய யூடியூப் ட்ரெண்டிங்

இன்றைய யூடியூப் ட்ரெண்டிங்

இன்றைய தினம் யூடியூப் ட்ரெண்டிங்கில் BB Jodigal ,My Shoot Day Vlog with Vijay TV Stars,Pugazh's day out with Kavin and Sakthi PART -02,Mom Birthday Cake Prank,Sembaruthi (செம்பருத்தி),Village Cooking Channel,Mommies Your Attention Please,Thappu Pannitten வீடியோக்கள் இடம்பெற்றுள்ளது.

  • Share this:
    ஷங்கர் ராஜாவின் "U1 ரெக்கார்ட்ஸ்" தயாரிப்பில், சிம்பு பாடியுள்ள தப்பி பண்ணிட்டேன் ஆல்பம் பாடலின் டீஸர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. 738,763 பார்வையாளர்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

    இந்த வீடியோவிற்கு 1,410 கமெண்ட்ஸ்கள் கிடைத்துள்ளன. சிம்பு ரசிகர்கள் இந்த டீசரை பார்த்தவுடன் இந்த வீடியோவ நான் பார்த்ததுக்கு 2 காரணமாந்தான்
    STR + U1, அன்றும் இன்றும் என்றும் ஒரே தலைவன் சிலம்பரசன்TR, வா தலைவா எவ்ளோ நாளாச்சு உன்ன இப்டி பாத்து என ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவிட்டுள்ளனர்.



    Mommies Your Attention Please என்ற வீடியோ யூடியூபில் அடுத்த இடத்தில் ட்ரெண்டாகி உள்ளது.221,668 பார்வையாளர்களை பெற்றுள்ள இந்த வீடியோவை ரௌடி பேபி சேனல் வெளியிட்டுள்ளது. குழந்தையை வைத்து யூடியூப் சேனல் நடத்தி வருகின்றனர். குழந்தைகள் என்ன செய்தலும் குறும்பு தான். அது போல் இந்த சேனலில் வரும் சுட்டி குழந்தை கியூட்டாக பேசுகின்றது. குழந்தையின் பாவனைக்காக பலரும் பார்ப்பதாக கமெண்ட்சில் பதிவிட்டுள்ளனர்.



    DIAMOND BUTTON UNBOXING வீடியோ யூடியூபில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலை தெரியாதோர் இருக்க முடியாது. உணவுகளை சமைத்து யூடியூபில் வீடியோவாக வெளியிடுவதை இவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். மிக அதிக அளவிலான உணவுகளை சமைத்து ஊரில் உள்ள பலருக்கும் விருந்து படைத்து வந்த இந்த சேனல் தற்போது யூடியூபில் டைமண்ட் பட்டன் வாங்கி அசத்தி உள்ளனர்.

    இது குறித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வீடியோ ஒன்றை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில், எங்களை நேரில் பார்ப்பவர்களுக்கு தெரியும் நாங்கள் எப்படி பட்ட கிராமத்தில் வசிக்கிறோம் என.. அப்படிப்பட்ட கிராமத்தில் 6 மாசம் விவசாயம் போக மீதி 6 மாசம் நாங்க சும்மா இருப்போம். அப்டி சும்மா இருக்கும் போது தான் இந்த யூடியூப் சேனல் நாங்க ஸ்டார்ட் பண்ணோம். இன்னைக்கு எங்களுக்கு 1 கோடி சப்ஸ்கிரைபேர்ஸ் கிடைச்சுருக்காங்க.நாங்க உழைப்பை போட்டாலும் ஒத்துழைப்பை போட்டது நீங்களே. எல்லா மக்களுக்கும் நாங்கள் நன்றி சொல்லிக்கொள்கிறோம் என கூறியுள்ளனர்.இந்த வீடியோ தற்போது 10,108,268 பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.



    ஆவியவிட மோசமான பாவியா இருப்பான் போலையே இந்த டைரக்டரு என செம்பருத்தி டைரக்டருக்கு கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றது. சீ-தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் பார்வதி பாம்பு கடித்து மயங்கி விழுகிறாள். பாம்பு கடித்ததை கூட இந்த பொண்ணு மறைச்சுட்டாளே என செம்பருத்தியின் மாமியார் கதறி அழும் ப்ரோமோ ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. இதற்கு செம்பருத்தி ரசிகர்கள் பாம்பு கடிச்ச உடனே விஷம் ஏறும் இவ்வளவு நேரம் கழித்து விஷம் ஏறுமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.



    Mom Birthday Cake Prank வீடியோ ட்ரெண்டாகி உள்ளது.570,836 பார்வையாளர்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.2,665 பேர் இந்த வீடியோவிற்கு கமெண்ட்ஸ் பதிவிட்டுள்ளனர்.அம்மாவை வைத்து பிராங்க் பண்ணி அம்மாவின் பிறந்த நாளை கொண்டாடும் மகனின் செயலுக்கு சிரிப்பலை கமெண்ட்ஸ் செக்சனில் குவிந்துள்ளது.



    Pugazh's day out with Kavin and Sakthi PART -02 வீடியோ அடுத்தாக ட்ரெண்டாகி உள்ளது.பிக்பாஸ் கவின், குக்வித் கோமாளி புகழ் இருவரும் இணைந்து கதை பேசி,ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே சிரித்து மகிழ்கின்றனர்.



    அடுத்ததாக விஜய் டிவி வெளியிட்டுள்ள BB Jodigal ப்ரோமோ வீடியோ ட்ரெண்டிங்கில் உள்ளது. அதில் இந்த வாரம் ஞாயாயிற்று கிழமை வெளியாகவுள்ள நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர். நடிகர் நகுல் பாட்டு பாடி தனது மனைவி, மற்றும் மகள்களை மகிழ்விக்கும் தருணம் அந்த வீடியோவில் வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவை 1,328,652 பேர் பார்த்துள்ளனர்.



    My Shoot Day Vlog with Vijay TV Stars வீடியோ அடுத்ததாக ட்ரெண்டாகி உள்ளது. சுனிதா தனது Sunita Xpress சேனலில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.618,973 பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: