• HOME
 • »
 • NEWS
 • »
 • trend
 • »
 • Youtube Trending : 'ரஜினி ஸ்டைல்ல சொல்றேன்...திரும்பி வருவேன்' ட்ரெண்டிங்கில் அர்ச்சனா - இன்றைய யூடியூப் ட்ரெண்டிங்

Youtube Trending : 'ரஜினி ஸ்டைல்ல சொல்றேன்...திரும்பி வருவேன்' ட்ரெண்டிங்கில் அர்ச்சனா - இன்றைய யூடியூப் ட்ரெண்டிங்

இன்றைய யூடியூப் ட்ரெண்டிங்

இன்றைய யூடியூப் ட்ரெண்டிங்

இன்றைய தினம் யூடியூப் ட்ரெண்டிங்கில் ACHUMA TAKES A BREAK! ,Navarasa , THE ROOMMATE ,15th Anniversary Celebration,Niraimaatha Nilavae Episode 02,First video after Baby Delivery,Mommies Your Attention Please,Vaazhl Trailer வீடியோக்கள் இடம்பெற்றுள்ளது.

 • Share this:
  முன்னணித் தொகுப்பாளினியாக இருப்பவர் அர்ச்சனா. சன் டிவியில் ‘இளமை புதுமை’, ‘காமெடி டைம்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானார். பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வேலை செய்த இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நான்காவது சீசனில் கலந்துகொண்டார்.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் 'காதலே காதலே', 'ஓல்டு இஸ் கோல்டு' போன்ற சில முக்கிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

  மேலும் மிர்ச்சி எப்எம்மிலும் தொகுப்பாளர்களாக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் தான் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிலையில் மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் அர்ச்சனாவுக்கு திடீரென அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக அவரே தனது Wow Life சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ 715,825 பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.  Navarasa | Date Announcement வீடியோ அடுத்ததாக ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

  இயக்குநர் மணிரத்னமும், க்யூப் சினிமாஸும் இணைந்து தயாரித்துள்ள நவரசா ஆந்தாலஜி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.நவரசங்கள் என்பது மனிதனின் ஒன்பது உணர்வுகளை குறிப்பது. இந்த உணர்வுகளை அடிப்படையாக வைத்து ஒன்பது குறும்படங்களை ஒன்பது பேர் இயக்கியுள்ளனர். அதன் தொகுப்பே நவரசா ஆந்தாலஜி. கெளதம் மேனன், அரவிந்த்சாமி, பிரியதர்ஷன், கார்த்திக் நரேன், வஸந்த் சாய், கார்த்திக் சுப்புராஜ், பிஜோய் நம்பியார், சர்ஜூன், ரதீந்திரன் பிரசாத் என 9 இயக்குநர்கள் 9 கதைகளை இயக்கியுள்ளனர். இதில் சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பிரசன்னா, சித்தார்த், பார்வதி, ரோகிணி, ரித்விகா, யோகி பாபு, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

  ஒவ்வொரு கதைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான், ஜிப்ரான், அருள்தேவ், கார்த்திக், ரான் ஈதன் யோஹன்னான் உள்ளிட்ட 9 பேர் இசையமைத்துள்ளனர். தற்போது இதன் டீசர் வெளியாகியுள்ளது. இதையடுத்து நவரசா ஆகஸ்ட் 6-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.இந்த வீடியோ ட்ரெண்டிங்கில் 2ம் இடம் பிடித்துள்ளது.2,264,878 பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.  பூர்ணிமா ரவியின் அராத்தி சேனலில் வெளியிட்டுள்ள வீடியோ 427,282 பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டாகி உள்ளது.THE ROOMMATE | IMSAIYUM THALAVALIYUM என்ற தலைப்பின் கீழ் இந்த வீடியோ வெளியாகி உள்ளது.  தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் வீட்டில் சுப நிகழ்ச்சி. 15th Anniversary Celebration நடந்துள்ளது. இந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ட்ரெண்டாகி உள்ளது.1,264,907 பார்வையாளர்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.  Niraimaatha Nilavae Episode 02 வீடியோ 358,193 பார்வையாளர்களை பெற்று அடுத்த இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.TUBE LIGHT சேனல் குழுவினர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.  Vaazhl Trailer வீடியோ 964,314 பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டாகி உள்ளது.அருவி’ பட இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தம்மனின் ‘வாழ்’ பட டிரெய்லர் வெளியாகி யூடியூபை கலக்கி வருகின்றது.‘கனா’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ ஆகிய படங்களை தயாரித்த சிவகார்த்திகேயன் மூன்றாவதாக ’வாழ்’ படத்தை தயாரித்திருக்கிறார். இப்படத்தை, கடந்த 2016 ஆம் ஆண்டு விமர்சன ரீதியாக பாராட்டுக்களைக் குவித்த ‘அருவி’ பட இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தம்மன் இயக்கியிருக்கிறார்.  சுல்பியா சேனலில் இருந்து வெளியாகி உள்ள First video after Baby Delivery வீடியோ யூடியூப் ட்ரெண்டிங்கில் வைரலாகி உள்ளது.200,282 பார்வையாளர்களை பெற்றுள்ள இந்த வீடியோவிற்கு 2,029 பேர் கமெண்ட்ஸ் பதிவிட்டுள்ளனர்.  ரௌடி பேபி சேனலில் இருந்து வெளியாகி உள்ள Mommies Your Attention Please வீடியோ 746,927 பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டாகி உள்ளது.  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sankaravadivoo G
  First published: