முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / YouTube Trending : 'கேரவனை சுற்றிக் காட்டும் பிக்பாஸ் அனிதா...குழந்தையின் ரகசியத்தை பகிரும் ஹேமா' - இன்றைய ட்ரெண்டிங் வீடியோக்கள்

YouTube Trending : 'கேரவனை சுற்றிக் காட்டும் பிக்பாஸ் அனிதா...குழந்தையின் ரகசியத்தை பகிரும் ஹேமா' - இன்றைய ட்ரெண்டிங் வீடியோக்கள்

  இன்றைய ட்ரெண்டிங் வீடியோக்கள்

இன்றைய ட்ரெண்டிங் வீடியோக்கள்

இன்றைய தினம் யூடியூப் ட்ரெண்டிங்கில் மாநாடு படத்தின் முதல் பாடல் , பிக்பாஸ் அனிதா சம்பத்தின் ஷூட்டிங் எப்படி போகுது வீடியோ, சீரியல் நடிகை ஹேமா ,தனுஷின் ஜகமே தந்திரம் , வில்லேஜ் குக்கிங் , லாக்டவுன் 2.0 அலப்பறைகள், பரிதாபங்கள் வீடியோ, கோபி, சுதாகர் செய்த அல்டிமேட் காமெடி, வீடியோக்கள் இடம்பெற்றுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞனாக நடிக்கிறார். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள், மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் பாடல்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பாடல் யூடியூப் ட்ரெண்ண்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது. 1,223,728க்கும் மேற்பட்டோர் இந்த பாடலை பார்த்துள்ளனர். இனிமேல் இந்த பாட்டு போடாத ஒரு முஸ்லிம் கல்யாண வீட்ட கூட நீங்க பார்க முடியாது என இணையவாசிகள் இந்த பாடலை ரசித்து கேட்டு வருகின்றனர்.

' isDesktop="true" id="486965" youtubeid="vQAs_P9JrJQ" category="trend">

அடுத்த இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ள வீடியோ வீட்ல விசேஷங்க எனும் தலைப்போடு கண்ணன் பகவதி சேனல் பதிவிட்டுள்ள வீடியோ. 500,208 பார்வையாளர்களை பெற்றுள்ள இந்த வீடியோவில் வீட்டில் நடக்கும் விஷேஷ நிகழ்வை பதிவிட்டுள்ளனர்.

' isDesktop="true" id="486965" youtubeid="yGOoZeXbonk" category="trend">

அடுத்த இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ள வீடியோ பிக்பாஸ் அனிதா சம்பத்தின் ஷூட்டிங் எப்படி போகுது வீடியோ. ஷூட்டிங் செல்வதற்கு பயன்படுத்தும் கேரவனை சுற்றி காண்பிக்கும் இவரது வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.244,546 பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ள இவரது வீடியோவிற்கு பலரும் கமெண்ட்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

' isDesktop="true" id="486965" youtubeid="fbxpwR0DYOI" category="trend">

அடுத்த இடத்தில் ட்ரெண்டாகியுள்ள வீடியோ சீரியல் நடிகை ஹேமா வீடியோ. தனது குழந்தைக்கு தற்போது பிறந்து 10வது மாதம் ஆவதால் குழந்தைக்கு என்னென்ன உணவு கொடுக்கின்றோம் என விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ இதுவரை 468,185 பார்வையாளர்களை பெற்றுள்ளது.

' isDesktop="true" id="486965" youtubeid="YnYhwqC74MU" category="trend">

தனுஷின் ஜகமே தந்திரம் இன்று நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியானது. இந்த படத்தின் ரிவியூ தான் தற்போது ட்ரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. ப்ளூ சட்டை மாறன் இந்த படம் குறித்து ரிவியூ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ 844,920 பார்வையாளர்களை பெற்றுள்ளது.கொரோனா சூழலை மனதில் கொண்டு, இன்று ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது. 190 நாடுகளில் 17 மொழிகளில் இப்படம் வெளியாவதாக முன்பே கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்தார்.

' isDesktop="true" id="486965" youtubeid="vunQhRYEXzs" category="trend">

அடுத்ததாக ட்ரெண்டிங் பட்டியலில் இடம் பெற்றுள்ளது வில்லேஜ் குக்கிங் சேனலில் இடம் பெற்றுள்ள வீடியோ. அசைவ உணவான மட்டனை எவ்விதம் செய்வது என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த சேனலுக்கு உள்நாட்டில் மட்டும் அல்ல வெளிநாட்டிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் உண்டு.இந்த வீடியோ 2,037,379 பார்வையாளர்களை பெற்றுள்ளது.

' isDesktop="true" id="486965" youtubeid="qD0ZycqRixU" category="trend">

அடுத்ததாக ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ள வீடியோ லாக்டவுன் 2.0 அலப்பறைகள் எனும் வீடியோ. இந்த வீடியோ இதுவரை 979,726 பார்வையாளர்களை பெற்றுள்ளது. ஒரு மனுஷன் எந்த அளவுக்கு இந்த லாக்டவுனில் வெட்டியாக இருந்துள்ளான் என்பதை நகைச்சுவையாக நக்கலைட்ஸ் சேனலில் வீடியோவாக பதிவிட்டுள்ளனர்.

' isDesktop="true" id="486965" youtubeid="lhAXO4TQSEg" category="trend">

அடுத்ததாக ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ள வீடியோ நாம் இருவர் நமக்கு இருவர் ப்ரோமோ வீடியோ.2,498,177 பார்வையாளர்களை பெட்ரா இந்த வீடியோ ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

' isDesktop="true" id="486965" youtubeid="3OvhYcreuxY" category="trend">

அடுத்ததாக அதிக பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டாகியுள்ள வீடியோ கோபி, சுதாகர் செய்த அல்டிமேட் காமெடி. லாக்டவுன் பாவங்கள் என வெளியிட்டுள்ள இந்த வீடியோ இதுவரை 2,047,732 பார்வையாளர்களை பெற்றுள்ளது.

' isDesktop="true" id="486965" youtubeid="lop7rGDHMsw" category="trend">

top videos

    தினமும் போடலன்னா சீரியல் தா பாக்கணும் தலைவா, நண்பர்களே ரொம்ப சந்தோசமா இருக்கு என்னாச்சின பரிதாபங்கள் வீடியோ போட்டுரூக்காங்க எனவும் இந்த வீடியோவிற்கு கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றது.

    First published:

    Tags: Trending, Youtube