நுங்கு சாப்பிட்டால் மார்பகங்கள் பெரிதாகும், குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும், மாட்டுக்கறி சாப்பிட்டால் பல நோய்கள் வரும், 1 குலோப் ஜாமுன் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடும் என பல்வேறு சர்ச்சை கருத்துகளை யூட்யூப்பில் பகிர்ந்து வந்த சித்த மருத்துவர் டாக்டர் சர்மிகா இந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் மருத்துவ டிப்ஸ் என்ற பெயரில் சித்த மருத்துவர் சர்மிளா யூட்யூப்பில் கொடுத்து வந்த சில அறிவுரைகள் சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் தெரிவித்த கருத்துகளுக்கு பலரும் பதிலடி கொடுத்து வந்தனர். இந்நிலையில் இதுபோன்ற போலியான தகவல்களை மருத்துவ அறிவுரைகள் என்ற பெயரில் பரப்பி வரும் சர்மிளா மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறையின் இணை இயக்குனர் டாக்டர் பார்த்திபன் கூறியிருந்தார்.
இதனையடுத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்ற தலைப்பில் டாக்டர் சர்மிகா தனது யூட்யூப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “நுங்கு சாப்பிட்டால் மார்பகம் வளரும்னு சொல்லிருந்தேன். நுங்கு சாப்பிட்டால் குளிர்ச்சி. அதை சாப்பிட்டால் உடல் எடை கூடும். உடல் எடை கூடினால் மார்பகங்களும் வளரும்னுதான் சொன்னேன்.
அதே போல, குப்புற படுத்தா புற்றுநோய் வரும்னு சொல்லல. பொதுவாவே உடலுக்கு ரத்த ஓட்டம் சீரா இருக்கனும். ரத்த ஓட்டம் சீரா இல்லைனா புற்றுநோய் வர வாய்ப்பு இருக்கு.
ஒரு குலோப் ஜாமுன் சாப்பிட்டா 3 கிலோ எடை கூடும்னு ஒரு ப்ளோல சொல்லிட்டேன். 1008 பிரச்சனை இருக்கு அப்டினா 1008 பிரச்சன இருக்குனா அர்த்தம். அதுபோலதான். இனிப்பு சாப்பிட்டா எடை அதிகரிக்கும். அதைத்தான் அப்படி சொன்னேன். நானும் மனுஷிதானே. தவறுகள் நடக்கத்தான் செய்யும். இதை யாராவது தவறா எடுக்கிட்டா மன்னிச்சுருங்க” என கூறியிருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ayurvedic medicine, Trending News, Youtube