பெண்களை விட ஆண்களை பலமாக படைத்தற்கு காரணம் அவர்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள தான். ஆனால் அந்த பலத்தை ஆண்கள் தவறாக பயன்படுத்தினால் அதைவிட அதிக பலத்தை பெண்கள் வெளிப்படுத்துவார்கள். ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் வலியை தாங்கும் சக்தி பெண்களுக்கு இருப்பது போல் ஆண்களுக்கு என்றும் இருக்க முடியாது. பெண்களின் சக்தியை என்று குறைத்து மதிப்பிடவே கூடாது. பெண் தனியாக இருக்கும் போது அவர்களுக்கான பாதுகாப்பு மனதைரியம் மற்றும் துணிச்சல் தான்.
தனியாக இருக்கும் பெண்ணிடம் ஒரு ஆண் எல்லை மீறினால் அவர்கள் தங்களுக்குள் இருக்கும் தைரியம் மற்றும் துணிச்சலை வெளிப்படுத்த வேண்டும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி ரைவலாகி உள்ளது. லிஃப்டில் தனியாக இருக்கும் ஒரு பெண்ணிடம் இளைஞர் அத்துமீறி நடக்கிறார். அந்த வீடியோவில் இருக்கும் இளைஞர் முதலில் பெண்ணின் அருகில் சென்று நிற்கிறார். இதை கவனித்த பெண் சற்று நகர்ந்து நிற்கிறார். இளைஞர் மீண்டும் அந்த பெண்ணின் தோள் மீது கைவைக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் இளைஞரை புரட்டி புரட்டி எடுக்கிறார்.
He got what he deserved pic.twitter.com/linbzcsqio
— Lance🇱🇨 (@BornAKang) December 27, 2022
இந்த வீடியோ பார்ப்பதற்கு ஸ்கரிப்ட் போன்று இருக்கலாம். ஆனால் பெண்கள் தனியாக இருக்கும் போது இதுப்போன்ற சவால் நிறைந்த சந்தர்ப்பங்களில் அவர்கள் துணிந்து செயல்பட வேண்டுமென்ற உத்வேகத்தை அளித்துள்ளது. பாலியல் தொந்தரவு அளிக்கும் ஆண்களிடம் எப்படி தற்காத்து கொள்ள வேண்டும் என்ற யுக்திகளை அவர்களால் கற்று கொள்ள முடிகிறது. இந்த வீடியோ 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கொண்டுள்ளது. பல ஆயிரம் லைக்ஸ்களை பெற்றுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த பலர் தங்களது கலவையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். நான் அந்த இடத்தில் இருந்து இருந்தால் அவரை போட்டோ எடுத்து வன்கொடுமை வழக்கு கொடுத்திருப்பேன் என்றுள்ளார். மற்றொருவர் அந்த பெண்ணின் தாக்குதலை பார்க்கும் போது அவர் சிறந்த தற்காப்பு பயிற்சி பெற்றவர் போல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.