அரசுப் பேருந்தைத் திருடி சொந்த ஊருக்குச் செல்ல முயன்ற வாலிபர் கைது!

பேருந்தை கடத்தி சென்ற கர்நாடக மாநிலம் பெங்களூர் விஜயபுராவை சேர்ந்த முஜாமி கான் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

அரசுப் பேருந்தைத் திருடி சொந்த ஊருக்குச் செல்ல முயன்ற வாலிபர் கைது!
  • Share this:
ஆந்திராவில் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தை திருடி சென்ற கர்நாடகா வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டம் தர்மவரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றார். இதுபற்றி பணிமனை அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து சிக்கப்பள்ளி போலீசார் அனந்தபுரத்தில் உள்ள கியா கார் தொழிற்சாலை அருகே பேருந்தை மடக்கி நிறுத்தினர். பேருந்தை கடத்தி சென்ற கர்நாடக மாநிலம் பெங்களூர் விஜயபுராவை சேர்ந்த முஜாமி கான் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.


அவரிடம் நடத்திய விசாரணையில் ஊரடங்குக்கு முன்பு அனந்தப்புரத்திற்கு உறவினர் வீட்டிற்கு வந்ததாகவும் ஊரடங்கு காரணமாக ஊருக்கு செல்ல முடியாமல் இருந்தது. அதனால் இன்று அனந்தபுரத்தில் இருந்து தர்மவரம் வரை நடந்து வந்ததாகவும் அதன் பின்னர் பனிமலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை எடுத்து அதில் பெங்களூரு செல்ல முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading