"40 கிலோ சாக்லெட் சாப்பிட்டேன்" - அட்லாண்டிக் கடலை கடந்து 21 வயது இளம் பெண் சாதனை!

"40 கிலோ சாக்லெட் சாப்பிட்டேன்" - அட்லாண்டிக் கடலை கடந்து 21 வயது இளம் பெண் சாதனை!

அட்லாண்டிக் கடலை கடந்து 21 வயது இளம் பெண்

டால்பின் மற்றும் பைலட் மீன்களையும் பார்த்ததாக தெரிவித்துள்ள ஜாஸ்மீன், கரையை அடைந்தவுடன் எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
21 வயது இளம் பெண் அட்லாண்டிக் கடலை தனி ஒருவராக கடந்து, மிக குறைந்த வயதில் அட்லாண்டிக் பெருங்கடலை கடந்த பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இங்கிலாந்தின் நார்த் யார்க்ஷையரில் வசித்து வரும் ஜாஸ்மீன் ஹாரிசன் (Jasmine Harrison) நீச்சல் கற்றுத்தரும் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். படகோட்டுவதில் ஆர்வம் கொண்ட அவர், 2018ம் ஆண்டு நடைபெற்ற இதுபோன்ற போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இதனையடுத்து தாலிஸ்கர் விஸ்கி அட்லாண்டிக் சேலஞ்சில் (Talisker Whisky Atlantic) போட்டியாளராக பங்கேற்க ஆர்வம் ஏற்பட்டு அந்தப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார்.

தனி ஒருவராக படகில் பயணித்த அவர், சுமார் 70 நாட்கள் அட்லாண்டிக் பெருங்கடலில் படகோட்டி, மிக குறைந்த வயதில் அட்லாண்டிக் பெருங்கடலை கடந்த பெண் என்ற சாதனையை 21 வயதில் நிகழ்த்தியுள்ளார். இதுகுறித்து பேசிய ஜாஸ்மீன், அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்தது மிகப்பெரிய அனுபவமாக இருந்ததாக கூறினார். பல்வேறு சவால்களை சந்தித்ததாகவும், அதேவேளையில் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்ததாக கூறியுள்ளார். இரண்டு மணி நேரம் துடுப்பில் படகோட்டுவது, பின்னர் 2 மணி நேரம் தூங்குவது என சுழற்சி முறையில் கடல் பயணத்தை மேற்கொண்டதாவும், ஓய்வு நேரங்களில் சாட்டிலைட் போன் உதவியுடன், அம்மாவிடம் பேசியதாகவும் ஜாஸ்மீன் தெரிவித்துள்ளார்

3 ஆயிரம் மைல் தொலைவை 70 நாட்கள் 3மணி நேரம் 48 நிமிடங்களில் ஜாஸ்மீன் ஹாரிசன் கடந்துள்ளார். பயணத்தின்போது 40 கிலோ சாக்லெட் மற்றும் பிஸ்கட்டை மட்டுமே உணவாக எடுத்துக்கொண்டுள்ளார். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் படகோட்டுவது என திட்டமிட்டு பயணித்த அவர், மழை பெய்யும்போது படகோட்டுவதை நிறுத்தியுள்ளார். இலக்கை அடைவதற்கு 100 மைல் இருக்கும்போது ஜாஸ்மீன் எதிர்பாராத விபத்து ஒன்றை சந்தித்துள்ளார். தொடர்ந்து பயணித்துக்கொண்டிருந்த அவரது படகு திடீரென கவிழ்ந்துள்ளது. இதில் அவருடைய இடது முழங்கையில் பலத்த அடியுடன் காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பயணத்தை விடாப்படியாக தொடரவேண்டும் எனபதில் ஜாஸ்மீன் ஹாரிசன் உறுதியாக இருந்து, பயணத்தை நிறைவு செய்துள்ளார்.

தனது படகுக்கு கீழ் மிகப்பெரிய திமிங்கலங்களும், மார்லீன் மீன்களும் சென்றதாக ஜாஸ்மீன் கூறியுள்ளார். டால்பின் மற்றும் பைலட் மீன்களையும் பார்த்ததாக தெரிவித்துள்ள ஜாஸ்மீன், கரையை அடைந்தவுடன் எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்பட்டதாக கூறியுள்ளார். கரையை அடைந்தவுடன் என்ன நினைத்தீர்கள் என அவரிடம் கேள்வி எழுப்பியபோது, சிறிதும் யோசனையின்றி நல்ல உணவை உண்ண வேண்டும் என நினைத்ததாக கூறினார்.

Also read... பாம்புக்கே தண்ணீரை குடிப்பதற்கு கொடுத்த அதிசய மனிதர் - வைரலாகும் வீடியோ!

அட்லாண்டிக் கடலை அடைந்தவுடன் ஜாஸ்மீனின் பெயர்கள் சாதனை புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் தொண்டு நிறுவனத்துக்கு 10 ஆயிரம் டாலர் நிதியையும் திரட்டியுள்ளார். ஹாரிசனுக்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த கேட்டி ஸ்பாட்ஸ் (Katie Spotz) இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார். 2010 ஆம் ஆண்டு 22 வயதில் அவர் செய்த சாதனையை 2021 ஆம் ஆண்டு 21 வயதில் ஜாஸ்மீன் ஹாரிசன் முறியடித்துள்ளார். லூகாஸ் ஹெய்ட்ஸ்மேன் (Lukas Haitzmann ) என்பவர், உலகிலேயே மிக்கஃ குறைந்த வயதில் அட்லாண்டிக் பெருங்கடலை கடந்த இளைஞர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். 2019 ஆம் ஆண்டு தன்னுடைய 18 வது வயதில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள அவர், இதன்மூலம் இரு தொண்டு நிறுவனங்களுக்காக 16 ஆயிரம் அமெரிக்க டாலரை நிதியாக திரட்டிக்கொடுத்துள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: