இணையத்தை கலக்கும் பெண்... முகபாவனைகளால் நடிப்பில் அசத்தல்...

இணையத்தை கலக்கும் பெண்

உண்மையில், வீடியோ தளங்களில் இவர் முகத்தை பார்த்திடாமல் எவரும் கடந்து இருக்க மாட்டார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவில் ட்ரெண்டாகி உள்ளார் இந்த பெண்.

 • Share this:
  யாராக இருந்தாலும், திறமைகள் கொண்டாடப்பட வேண்டும். திரையில் நடிக்கும் நடிகர்கள் மட்டுமல்லாது எத்தனையோ திறமையாளர்கள் ஆர்ப்பாட்டம் இன்றி அவரவர் தளங்களில் கலக்கி வருகிறார்கள். வாய்ப்புகளைத் தேடி, மேடை ஏறி கடும் உழைப்பை செலுத்திதான் கலைஞர்கள் அங்கீகாரம் பெறுகிறார்க்ள் என்கிற கூற்று பொய்யாகி போயுள்ளது, இன்றைய உலகில்.

  ஆம். யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஷேர்சாட், டிக்டாக் உள்ளிட்ட வீடியோ தளங்களின் வருகையால், கிராமங்களில் கடைக்கோடியில் இருக்கும் எத்தனையோ கலையாற்றல் கொண்டவர்கள் வெளிச்சத்துக்கு வருகிறார்கள். அவர்களில் பலர் திரைத்துறையில் வாய்ப்பு கிடைத்து நடிகர்களாகவும் புகழ் பெற்றிருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.   
  View this post on Instagram

  A post shared by harjith.dharani (@harjith.dharani)

  அந்த வகையில், ஒரு பெண் தன்னுடைய முகபாவனைகளால், பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறார். தனது வீடு, பணி இடம் என நண்பர்களுடன் திரை வசனங்கள், பாடல்களுக்கு ஏற்றாற்போல் அழகாக நடித்து வீடியோ வெளியிட்டு வருகிறார் இந்த பெண்.   
  View this post on Instagram

  A post shared by harjith.dharani (@harjith.dharani)

  இவரின் வீடியோக்களை பார்க்கும்போது தையல் கலைஞராக பணி செய்வதாக அறிய முடிகிறது. இந்த தையல்கலைஞரின் நடிப்புக் கலையும் அசத்தலாக இருந்து வருகிறது. இவர் வெளியிடும் வீடியோக்களை பலர் தங்கள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைத்திருக்கிறார்கள்.. இவரது வீடியோக்கள் பல சமூக வலைதள பக்கங்களிலும் உலா வருகின்றன.   
  View this post on Instagram

  A post shared by harjith.dharani (@harjith.dharani)
   
  View this post on Instagram

  A post shared by harjith.dharani (@harjith.dharani)
   
  View this post on Instagram

  A post shared by harjith.dharani (@harjith.dharani)
   
  View this post on Instagram

  A post shared by harjith.dharani (@harjith.dharani)

  உண்மையில், வீடியோ தளங்களில் இவர் முகத்தை பார்த்திடாமல் எவரும் கடந்து இருக்க மாட்டார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவில் ட்ரெண்டாகி உள்ளார் இந்த பெண்.

  கொரோனா ஊரடங்கு என முடங்கிப்போயுள்ள வாழ்க்கை சுழலில், இவரின் வீடியோக்கள் எத்தனையோ பேரிடம் திறமைகள் வெளிப்பட ஊக்கமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. திறமையாளர்கள் யாராக இருந்தாலும், பாராட்டுவதே சரியாக இருக்கும்.
  Published by:Yuvaraj V
  First published: