ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஒரு நிமிடத்திற்கு 16 மரக்கன்றுகள்.. சரசரவென மரம் நட்டு சாதனைப் படைத்த இளைஞர்!

ஒரு நிமிடத்திற்கு 16 மரக்கன்றுகள்.. சரசரவென மரம் நட்டு சாதனைப் படைத்த இளைஞர்!

Trending | கனடா நாட்டு இளைஞர் ஒருவர் 24 மணி நேரத்தில் 23ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளார்.

Trending | கனடா நாட்டு இளைஞர் ஒருவர் 24 மணி நேரத்தில் 23ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளார்.

Trending | கனடா நாட்டு இளைஞர் ஒருவர் 24 மணி நேரத்தில் 23ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உலகம் சந்தித்து வரும் பிரச்னைகளில் வெப்பமயமாதல் மிக முக்கியமான ஒன்று. பல்வேறு காரணிகளால் உலக வெப்பம் மிகவும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் உலகின் பருவநிலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் நிகழந்து  வருகிறது. குறுகிய நேரத்தில் அதிகப்படியான மழை,வெள்ளம், வறட்சி,அதிகப்படியான வெப்பம், பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்ட பல்வேறு பருவநிலை மாற்றங்களை உலகம் சந்தித்து வருகிறது. இதனால் மரங்களை நடுவதின் அவசயிம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

  மரங்களை பாதுகாத்தல் மற்றும் புதிய மரக்கன்றுகளை நடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பான உலகளாவிய விழிப்புணர்ச்சியை சர்வதேச சமூகம் தொடர்ந்து மேற்கொண்டே வருகிறது. இந்நிலையில் கனடா நாட்டைச் சேர்ந்த 23 வயதான மாரத்தான் வீரர் அண்டோயின் மோசஸ் என்பவர் 24 மணிநேரத்தில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளார். மோசஸ் மரக்கன்றுகளை நடும் வீடியோவை சுற்றுச்சூழல் ஆர்வலர் எரிக் சோல்ஹைம் பகிர்ந்துள்ளார். பதினைந்து நொடிகளை மட்டுமே கொண்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  மோசஸ் மரக்கன்று நடும் வீடியோ 17 லட்சம் முறை பார்க்கப்பட்டிருக்கிறது. ஒரு நிமிடத்திற்கு 16 மரக்கன்றுகளை நட்டு மோசஸ் சாதனை படைத்திருப்பதாக சோல்ஹைம் பாராட்டியிருக்கிறார். இதற்கு முன்னதாக 24 மணி நேரத்தில் 15,170 மரக்கன்றுகள் நடப்பட்டதே சாதனையாக இருந்தது. இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டு, மோசஸின் செயல் சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. பொதுவாகவே சுற்றுச்சூழலின் மீது ஆர்வம் கொண்ட மோசஸ் கடந்த ஆறு ஆண்டுகளாக மரக்கன்றுகளை நட்டு வந்துள்ளார்.

  Read More : இலுப்பை சாராயம் குடித்து மட்டையான காட்டு யானைகள்! ஒடிஷாவில் சுவாரஸ்ய சம்பவம்!

  மோசஸின் செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். இவரைப் போல அனைவரும் இயற்கையின் மீது ஆர்வம் கொண்டு மரக்கன்றுகள் நட முன்வரவேண்டுமும் என பலரும் கருத்துக்களை பதிவிட்டிருக்கிறார்கள். உலக வெப்பமயமாதலை தடுக்கும் ஒரே வழி மரம் வளர்ப்புதான். மரம் வளர்த்தல் மற்றும் காடுகளை பாதுகாத்தல் போன்றவை ஒரு இயக்கமாக முன்னெடுக்கப்பட  வேண்டும். அதற்கு மோசஸ் போன்ற இளைஞர்கள் மிகப்பெரிய முன்னுதாரணம்.

  காடுகள் அழிப்பில் தொடர்ந்து ஈடுபட்டால் உலகம் இப்போதிருக்கும் நிலையை விட உலகம்மிகவும் மோசமான பருவநிலை பாதிப்புகளை சந்திக்க நேரும் என்பதால், சுற்றுச் சூழலை காப்பதற்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கியமான அங்கமாக மரக்கன்றுகள் நடுவதை அனைத்துநாடுகளும் மிகத்தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். அது தான் உலக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மிக எளிதான வழி  என்கிறார்கள் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Trending, Viral