திருடிய பொருட்களுடன் டிக் டாக்கில் ஆட்டம்... வசமாக சிக்கிய இளம்பெண்

திருடிய நகைகள் மற்றும் பொருட்களுடன் டிக் டாக்கில் வீடியோ எடுத்து பதிவிட்ட பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

திருடிய பொருட்களுடன் டிக் டாக்கில் ஆட்டம்... வசமாக சிக்கிய இளம்பெண்
  • Share this:
டிக் டாக் லைக்ஸ்களை அள்ள அதீத ஆர்வத்தில் பெண் ஒருவர் தான் திருடிய பொருட்களுடன் வீடியோ எடுத்து சிக்கி கொண்டுள்ளார். அசாமின் கவுகாத்தியில் வயதான பெண் ஒருவரை கவனித்து கொள்ள உள்ளூர் தொண்டு நிறுவனம் மூலமாக சுமி கலிதா என்ற பெண் ஒருவரை பணியில் அமர்த்தி உள்ளனர்.

அந்த பெண் ஒரு நாள் வீட்டில் உள்ள, விலை உயர்ந்த வாட்ச் மற்றும் ஆடைகள் எடுத்து கொண்டு லக்கிம்பூரில் உள்ள அவரது ஊருக்கு சென்று விட்டார். இதை அடுத்து அந்த பெண்ணை தேடி பார்த்து உள்ளனர். ஆனால் எந்த முயற்சியும் பயனளிக்காததால் அந்த பெண்னை தேடுவதை நிறுத்தி விட்டனர்.

சமீபத்தில் அந்த பெண் திருடிய நகை மற்றும் வாட்சுடன் டிக் டாக்கில் வீடியோ எடுத்து பதிவிட்டதை பாதிக்கப்பட்டவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த பெண் அனாமிகா என்றப் பெயரில் டிக் டாக்கில் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.


@anamikaboruah81Hat nemelu anibole♬ Moina kun bidhatai.. prasenjitdeka - Prasen


@anamikaboruah81Meri life meri Mrzi♬ original sound - user595910

@anamikaboruah81##sparklingmemories♬ original sound - prakashxonowalஇதையடுத்து அந்த பெண் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டடுள்ளது.

டிக் டாக் ஐடி-யை வைத்து அந்த பெண்ணை தேடும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர்.
First published: May 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading