Viral Video : ஆடையை மாற்றி வீடியோ போடவிருந்த பெண்ணுக்கு நடந்த விபரீதம் - வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

இளம்பெண் ஒருவர் தனது ஆடையை மாற்றி லைவ் வீடியோவில் போடுவதற்கு முயற்சி செய்துள்ளார். அதன் பின்னர் நடந்த விபரீத சம்பவம் இணையவாசிகளை நகைப்பிற்குள்ளாகியுள்ளது.

  • Share this:
    நம் நாட்டில் கொரோனா விதிகள் சற்று தளர்த்தப்பட்டுள்ளதால் வெளியில் சுற்றி வருகிறோம். சில நாடுகளில் இன்னும் கடுமையான தடைகள் உள்ளன. அந்த நாடுகளில் உள்ள மக்கள் தங்கள் பொழுதை செல்ஃபி வீடியோக்கள் மற்றும் உலகத்துடன் எவ்வாறு இணைப்பது என்பது குறித்த லைவ் வீடியோக்களில் பொழுதை போக்கி வருகின்றனர்.

    இதனால் மன திருப்தி கிடைக்கும் என கூறுகின்றனர். அதன் ஒரு பகுதியாக அவர்கள் மேக்கப் போடுவது, உடை மாற்றுவது (புதிய உடைகளை மக்களுக்கு போட்டு காட்டி ஆடை குறித்து விளக்குவது ), சமைப்பது, செல்லப்பிராணிகளை பராமரிப்பது போன்ற ஏதாவது பொழுதுபோக்கை செய்து அதனை தங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவ்வாறு செய்வது உளவியல் ரீதியாக நிம்மதியாக இருக்கிறது எனவும் தெரிவிக்கின்றனர்.

    இந்நிலையில் சமீபத்தில் இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அதில் இளம் பெண் ஒருவர் தனது முகத்தில் முக மூடி போட்டவாறு தனது ஆடைகளை மாற்றி வீடியோ போடுவதற்கு முயற்சி செய்துள்ளார். இதற்காக வீடியோவை க்ளிக் செய்து அவர் அணிந்திருந்த ஆடையை மாற்றப் போகிறேன் என்று கூறி அந்த இளம் பெண் இரண்டு படிகள் பின்வாங்கினாள் ... அவ்வளவுதான் ... திடீரென்று ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. அவள் திடீரென பின்னால் வாளியில் விழுந்தாள். இவை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.  இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் அதைப் பார்த்து சத்தமாக சிரிக்கிறார்கள்.



    உண்மையில் அவள் ஆடைகளை மாற்றி வீடியோ பதிவிட்டிருந்தால் கூட இவ்வளவு வேடிக்கையாக இருந்திருக்காது என நகைச்சுவையாக தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவை பலர் சமூக வலைதளங்களில் பார்த்து ரசித்து வருகின்றனர்.




    இதே போன்று சமீபத்தில் விட்டில் வெட்டிங் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியாகியிருந்தது. அந்த வீடியோவில் திருமண அலங்காரத்தில் இருந்த மணப்பெண் திருமண ஆடைகளை அணிய முடியாமல் அவர் லிப்டில் அமர்ந்து கொண்டு வருகிறார்.

    அவர் கீழே அமர்ந்து கொண்டு வருவதை சிலர் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் அவர் திடீரென ஒரு கிளாஸில் ஒயினை குடிக்கிறார்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: