ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

டிவிட்டர் நிறுவனத்தில் தூங்கிக்கிட்டே வேலை பார்க்கலாம்… வேலை பார்த்துக்கிட்டே தூங்கிக்கலாம்… ஊழியர்களை சோதிக்கும் மஸ்க்...

டிவிட்டர் நிறுவனத்தில் தூங்கிக்கிட்டே வேலை பார்க்கலாம்… வேலை பார்த்துக்கிட்டே தூங்கிக்கலாம்… ஊழியர்களை சோதிக்கும் மஸ்க்...

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

Twitter | டிவிட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்கியதை தொடர்ந்து பல்வேறு பரபரப்புகள் சுற்றிச் சுற்றி வருகின்றன. அந்நிறுவனத்தின் ஊழியர்கள் பாடு திண்டாட்டமாகிவிட்டதாக வெளியாகும் செய்திகள் தான் இப்போதைய ஹாட் டாப்பிக்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  டிவிட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்கியதை தொடர்ந்து பல்வேறு பரபரப்புகள் சுற்றிச் சுற்றி வருகின்றன. அந்நிறுவனத்தின் ஊழியர்கள் படும் திண்டாட்டமாகிவிட்டதாக வெளியாகும் செய்திகள் தான் இப்போதைய ஹாட் டாப்பிக்.

  இதோ வாங்குகிறார், அதோ வாங்குகிறார் என எலன் மஸ்கிற்கும் டிவிட்டர் நிறுவனத்திற்குமான சடுகுடு ஆட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தாலும் அடுத்தகட்ட பரபரப்புகள் அரங்கேறத் தொடங்கியுள்ளது.

  டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியவுடன் அந்நிறுவனத்தில் பணிபுரியும் 75 விழுக்காடு ஊழியர்களை மஸ்க் வீட்டிற்கு அனுப்ப உள்ளதாக வெளியான தகவல்களால் அந்நிறுவன ஊழியர்கள் கலக்கமடைந்தனர். அது நடக்கவில்லை. ஆனால் அதற்கு பதிலாக இப்போது அரங்கேறும் சம்பவங்களால் கதிகலங்கி நிற்கிறார்கள் டிவிட்டர் நிறுவன ஊழியர்கள்.

  ஆம் பனிரெண்டு மணி நேர வேலை, விடுமுறை கிடையாது போன்ற கெடுபிடிகளால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  24 மணிநேரமும் வேலை பார்க்கச் சொல்லி நிர்வாகம்  கொடுக்கும் நெருக்கடிகளால் ஊழியர்கள் சொல்ல முடியாத துயருக்கு ஆளாகியுள்ளனர். ஓய்வுக்கு கூட ஊழியர்கள் வீட்டிற்கு செல்ல முடியாமல் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

  இதையும் படிங்க : “உணவு ஏற்றுமதிக்கு பாதுகாப்பு தாருங்கள்”…ஜெலன்ஸ்கி வேண்டுகோள்

  இந்நிலையில் டிவிட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் நிலையை தெளிவாக வெளிப்படுத்தும் வகையில் ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நிறுவன ஊழியர் ஒருவர் அலுவலகத்திலேயே படுத்து தூங்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  டிவிட்டரை முறைப்படுத்தவும், வாடிக்கையாளர்களின் தகவல்களை உறுதிப்படுத்தவும் எலன் மஸ்க் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளார். இந்த வேலைகளை ஒரு வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என கெடுவும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஊழியர்கள் ஓய்வின்றி, 24 மணி நேரமும் வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

  டிவிட்டர் நிறுவனத்தில் தூங்கும் ஊழியர்

  இந்நிலையில், தான் அந்நிறுவனத்தின் ஊழியர் எஸ்தர் கிராஃபோர்டு என்பவர் அலுவலகத்தின் தரையில் படுத்து தூங்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் சக ஊழியரான இவான் ஜோன்ஸ் என்பவரால் பதிவிடப்பட்டுள்ளது. நிர்வாகத்திடம் எதையோ எதிர்பார்த்து தான் எஸ்தர் இப்படி அலுவலகத்திலேயே தூங்குகிறார் என கருத்தை பதிவிட்டுள்ள ஜோன்ஸ்க்கு எஜ்தர் பதில் டுவிட் செய்திருக்கிறார்.

  அதில், உங்கள் குழு 24 மணி நேரமும் வேலை செய்ய நிர்பந்திக்கப்படும் போது சில நேரங்களில் இப்படி வேலை செய்யும் இடத்திலேயே தூங்க நேரிடும் என பதில் சொல்லியிருக்கிறார்.

  உலகத்தின் முதன்மை பணக்காரர் எலன் மஸ்க் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் என்றாலும், ஊழியர்களுக்கு இவ்வளவு பெரிய சோதனைகளை தருகிறாரே என பலரும் புலம்பி வருகிறார்.

  எலான் மஸ்க்

  75 விழக்காடு ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பமாட்டேன் எனக் கூறினாரே எலன் மஸ்க்…. நான் அனுப்ப மாட்டேன்.. நீங்களாகவே போவதென்றால் போய்க் கொள்ளலாம் என்கிறாரோ…முடியலடா சாமி…

  Published by:Karthi K
  First published:

  Tags: Elon Musk, Trending News, Twitter