2021 ஆம் ஆண்டில் பூமியை கடந்த சென்ற மிகப்பெரிய சிறிய கோளானா காட் ஆஃப் டிஸ்ட்ரக்ஷன் அப்போபிஸ் (God of Destruction Apophis)-க்குப் பிறகு மற்றொரு சிறிய கோள் பூமியை நோக்கி வேகமாக வந்துகொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். முந்தைய சிறிய கோள் பூமியை நெருங்கி வந்த வேகத்தைவிட, இந்த கோளின் வேகம் அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், பயப்படத் தேவையில்லை என்றும் கூறியுள்ளனர். காரணம், இந்த சிறிய கோளானாது பூமியில் இருந்து சுமார் 3.4 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்ல இருப்பதாகவும் நாசா கூறியுள்ளது.
இந்த சிறிய கோளுக்கு AF8 எனப் பெயரிட்டுள்ள நாசா, புதிய சிறியகோளின் அளவு கால்பந்து மைதானத்தின் அளவில் இருக்கும் என கூறியுள்ளது. அதாவது 260 முதல் 580 மீட்டர் வரை ஏ.எப் 18 கோளின் மொத்த அளவு இருக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். மற்ற சிறிய கோள்களைப்போல் இந்த கோளும் பூமியை கடந்து செல்லும் எனக் கூறியுள்ள
நாசா விஞ்ஞானிகள், ஆனால் அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய அம்சங்களும் அந்த கோளில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மிகப்பெரிய அளவிலான ஆபத்தைக் கூட அந்த சிறிய கோள் ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலையில் ஆறுதல் அளிக்கக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் பூமியில் இருந்து 3.4 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் செல்லும் என்ற கணிப்பு. ஒருவேளை ஏ.எப்.8 கோளின் வேகத்தின் மாற்றம் ஏற்பட்டால் என்ன நடக்கலாம் என்பது குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அவர்களுக்கு குழப்பத்தைக் கொடுக்க கூடிய ஒருவிஷயமாக பார்க்கப்படுவது கோளின் வேகம். இந்த ஆண்டில் முதன்முறையாக கடந்த மார்ச் மாதத்தில் இந்த கோளை கண்டுபிடித்த விஞ்ஞானிகள், மே 4 ஆம் தேதி பூமியை கடந்து செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். பூமியை கடக்கும்போது ஏ.எப் 8 என்ற சிறிய கோளின் வேகம் 9 கிலோ மீட்டரில் இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
நாசாவின் ஜே.பி.எல், ஏ.எப்.8 கோளை அபாயகரமான சிறுகோள் என வகைப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த கோளின் சுற்றுவட்டப்பாதையை நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
Also read... Explainer: இந்தியாவில் தற்போது பரவும் கொரோனாவின் மாறுபாடுகள் யாவை?
கடந்த 2004 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட காட் ஆப் டிஸ்ட்ரக்ஷன் என்ற சிறிய கோளால் பூமிக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர். இந்த சிறிய கோள் அண்மையில் பூமியை கடந்து சென்றுவிட்ட நிலையில் அடுத்த 100 ஆண்டுகளுக்கு விண்கற்களால் பூமிக்கு ஆபத்தில்லை என நாசா கூறியுள்ளது. 2029, 2036 ஆம் ஆண்டுகளில் பூமியை விண்கற்கள் தாக்கலாம் என கூறப்பட்டு வந்த நிலையில் அவை தடம் மாறி சென்றுவிட்டதாகவும் நாசா கூறியுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.