Home /News /trend /

டிவிட்டர் இந்தியா 2021 – இந்த ஆண்டில் வைரலான டிவீட்கள் என்னென்ன?

டிவிட்டர் இந்தியா 2021 – இந்த ஆண்டில் வைரலான டிவீட்கள் என்னென்ன?

டிவிட்டர் இந்தியா 2021

டிவிட்டர் இந்தியா 2021

2021 ஆம் ஆண்டில் அதிகமாக டிவீட் செய்யப்பட்ட பதிவுகள் எவை என்று இங்கே பார்க்கலாம்.

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், அந்த ஆண்டு சமூக வலைத்தளங்களில் எதைப் பற்றிய செய்திகள் அதிகமாக பகிரப்பட்டது, எதைப் பற்றி மக்கள் அதிகமாக பேசியிருக்கிறார்கள் என்பது பற்றிய அறிக்கைகளை அந்தந்த நிறுவனம் வெளியிடும். இரு நாட்களுக்கு முன்பும் அதிகமாக தேடப்பட்ட தகவல் பற்றி கூகுள் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, மைக்ரோபிளாகிங் தளமான டிவிட்டர் தனது ஆண்டு அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் மிகவும் வைரலான டிவீட்கள் பற்றி குறிப்பிட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் அதிகமாக டிவீட் செய்யப்பட்ட பதிவுகள் எவை என்று இங்கே பார்க்கலாம்.

அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்ட ட்விட்: இந்தியாவுக்கு கோவிட் நிவாரண நிதி அளித்த பேட் கம்மின்ஸ்

 



 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான பேட் கம்மின்ஸ் இந்தியாவுக்கு கோவிட் நிவாரண நிதியாக கணிசமான தொகையை அளித்து, அதைப் பற்றி உருக்கமான செய்தியை டிவிட்டரில் பதிவு செய்திருந்தார். இந்த டிவீட் உலகம் முழுவதிலும் வைரலாக ரீட்வீட் செய்யப்பட்டது.

அதிகமாக லைக் செய்யப்பட்ட டிவீட்: விருக்ஷாவின் முதல் குழந்தை

 



 

நட்சத்திர ஜோடி அனுஷ்கா மற்றும் விராட் கோலி வெற்றிகரமான பாலிவுட்-கிரிக்கெட் ஜோடியாக வலம் வருகின்றனர். இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மா ஆகியோர் தங்கள் முதல் குழந்தை பிறந்ததைப் பற்றிய பதிவு வைரலாக பரவி, அதிகமாக லைக் செய்யப்பட்ட டிவீட்டாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அனுஷ்கா சர்மா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த டிவீட் 2020 ஆம் ஆண்டும் அதிகமாக லைக் செய்யப்பட்ட டிவீட் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்தியாவின் மிகவும் பிரபலமான டிவீட்டுகள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முதல் டோஸ் கோவிட் தடுப்பூசி போட்டுகொண்ட போது பகிர்ந்த புகைப்படம், இந்த ஆண்டின் பிரபலமான டிவீட்.

 



 

அது மட்டுமின்றி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றதற்காக இந்திய கிரிக்கெட் அணியை பாராட்டி வெளியிட்ட பதிவும் மிகவும் வைரலாக பரவியது. டாடா நிறுவனத் தலைவரான ரத்தன் டாடா தன்னுடைய நிறுவனங்களில் மீண்டும் ஏர் இந்தியா நிறுவனத்தை இணைத்த போது, அதை வரவேற்று “Welcome Back Air India” என்று பகிர்ந்த டிவீட் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டது. பிசினஸ் கேட்டகிரியில் அதிகமாக ரீட்வீட் செயப்பட்ட, அதிகமான கான்வர்சேஷன் உருவாக்கிய பதிவாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 



நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் பீஸ்ட் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தற்போது படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி லட்சக்கணக்கான லைக்குகளைப் பெற்றது

 



கோவிட் பாதிப்பு தாக்கம் தொடங்கியதிலிருந்தே, டிவிட்டர் மிகவும் முக்கியமான தகவல் பரிமாற்ற தளமாக மாறிவிட்டது. அனைத்து அதிகாரபூர்வமான செய்திகளுமே ட்விட்டரில் முதலில் பகிரப்படும் அளவுக்கு அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அது மட்டுமின்றி ரியல் டைம் ஹெல்ப்லைன் என்ற அடிப்படையில் சரியான நேரத்தில் தேவையான தகவலை வழங்கும் உதவி மையமாகவும் டிவிட்டர் செயல்பட்டது. கிரிக்கெட், விவசாயிகள் போராட்டம், டோக்கியோ ஒலிம்பிக்ஸ், ஐபிஎல், தீபாவளி, பிட்காயின் ஆகியவை இந்தியர்களால் அதிகமாக பகிரப்பட்ட செய்திகளாக டிவிட்டர் தெரிவித்திருக்கிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Trending, Twitter

அடுத்த செய்தி