Home /News /trend /

ட்விட்டர் குருவிக்கு உணவளிக்கும் எலான் மஸ்க்! அமுல் வெளியிட்டுள்ள "நையாண்டி" ஓவியப்படம்!

ட்விட்டர் குருவிக்கு உணவளிக்கும் எலான் மஸ்க்! அமுல் வெளியிட்டுள்ள "நையாண்டி" ஓவியப்படம்!


ட்விட்டர் குருவிக்கு உணவளிக்கும் எலான் மஸ்க்!

ட்விட்டர் குருவிக்கு உணவளிக்கும் எலான் மஸ்க்!

Elon Musks | எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியது குறித்து அமுல் நிறுவனம் - ஒரு ஓவியப்படம் வழியாக - தன் கருத்தை நகைச்சுவை உணர்வோடு கலந்து தெரிவித்து உள்ளது.

கடந்த ஒரு வாரமாக ட்விட்டரை "கையகப்படுத்திய" எலான் மஸ்க்கின் செய்திகளை புறக்கணிக்கவே முடியவில்லை. டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், கடந்த திங்களன்று ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்களுக்கு வங்க முடிவானதாக தகவல் வெளியானது.  அப்போதிலிருந்து, இந்த 'டாப்பிக்' மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில், எலான் மஸ்க் ட்விட்டரை கையப்படுத்தியது குறித்து அமுல் நிறுவனம் - வழக்கம் போல ஒரு ஓவியப்படம் வழியாக - தன் கருத்தை நகைச்சுவை உணர்வோடு கலந்து தெரிவித்து உள்ளது.

அந்த ஓவியப்படத்தில், எலான் மஸ்க் ஒரு மடிக்கணினியின் முன் அமர்ந்திருக்கிறார். அவருக்கும் மடிக்கணினிக்கும் இடையே நீல நிற 'ட்விட்டர் பறவை' ஒன்று நிற்கிறது. எலான் மஸ்க் அந்த பறவைக்கு ஸ்பூன் மூலம் உணவளிக்கிறார். ட்விட்டரை "கையகப்படுத்திய" எலான் மஸ்க்கை குறிப்பிட்டு அமுல் வெளியிட்டுள்ள இந்த ஓவியப் படத்தில் "யே சீஸ் படி ஹை மஸ்ட், மஸ்ட்!" என்கிற பிரபலமான பாலிவுட் பாடலைக் குறிப்பிடும் வகையில், "யே சீஸ் படி ஹை மஸ்க், மஸ்க்!" என்கிற நையாண்டித்தனமான வாசகத்தையும் பார்க்க முடிகிறது. மேலும் அதே ஓவியப் படத்தின் கீழே "அமுல்! அதை ஷேர் செய்யுங்கள்; சாப்பிட்டு விடாதீர்கள் எலான்!" என்றும் கேலியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஓவியத்திற்கு “#அமுல் டாப்பிகல்: இந்த பில்லியனர் ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கினார்!” என்றும் தலைப்பிடப்பட்டுள்ளது. இதுவரை இந்த ஓவியம், ட்விட்டரில் 2,000 க்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும், இன்ஸ்டாகிராமில் 18,000 க்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.

இந்த ஓவியப் படத்திற்கு கருத்து தெரிவித்த ஒரு இன்ஸ்டாகிராம் யூசர், "அமுல் வாங்கி அமுல் மஸ்கா தயாரிக்கலாம் என்கிற யோசனையை அவருக்கு யாரும் வழங்க வேண்டாம்" என்று நகைச்சுவையாக எழுதி உள்ளார்.

ALSO READ |  Watch: 'பகலில் உணவகத்தில் வேலை; ராணுவத்தில் சேர இரவில் 10 கி.மீ ஓட்டம்' - இளைஞரின் வீடியோ Viral
 அமுல் நிறுவனம், எலான் மஸ்க் குறித்த தலைப்புகளை உருவாக்குவது இது முதல் முறை அல்ல. இந்த மாத தொடக்கத்தில், ட்விட்டரை சொந்தமாக்குவதற்காக எலான் மஸ்க் செய்த முயற்சிகள் குறித்தும் அமுல் நிறுவனம் கருத்து தெரிவித்து இருந்தது. அது சார்ந்த ஓவியப்படத்தில் "எலான் தனது 'மஸ்க்'கிள்ஸை வளைக்கிறார்" மற்றும் "அமுல் தினமும் ரொட்டியை கையகப்படுத்துகிறது" என்று தலைப்பிடப்பட்டு இருந்தது.

முன்னதாக, எலான் மஸ்க் ட்விட்டரின் பேச்சு சுதந்திர ஆணையை ( Twitter’s free speech mandate) வலுப்படுத்தும் தனது விருப்பத்தை வெளிப்படையாக கூறி இருந்தார்,



அது பலரையும் கவர்ந்தது. ஆனால் ட்விட்டரை வாங்கிய பிறகு எலான் மஸ்க் பதிவிடும் ட்வீட்கள் இணையவாசிகளை மகிழ்விப்பதோடு மட்டுமில்லாமல், குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது. சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டரின் தலைமையகத்தை வீடற்றவர்களுக்கான தங்குமிடமாக மாற்ற வேண்டும் என்று முன்மொழிவது, கோகோ கோலா நிறுவனத்தை வாங்க ஆசைப்படுவது என எலான் மஸ்க் மிகவும் "ஒழுங்கற்ற" ட்வீட்களை பதிவிட்டு வருகிறார்.

தெளிவாக பேசினாலும் சரி, குண்டக்க மண்டக்க பேசினாலும் சரி ட்விட்டரில் எலான் மஸ்க்கை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. ட்விட்டரில் இவரை மொத்தம் 89 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Elon Musk, Trending

அடுத்த செய்தி