• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • யார் இந்த எமதர்ம ராஜா? உ.பியில் நூதன கொரோனா விழிப்புணர்வு!

யார் இந்த எமதர்ம ராஜா? உ.பியில் நூதன கொரோனா விழிப்புணர்வு!

எமதர்மராஜா

எமதர்மராஜா

உத்தரப்பிரதேச மாநிலத்தில் எமதர்மர் வேடம் அணிந்து கொண்டு கலைஞர் ஒருவர் மேற்கொள்ளும் கொரோனா விழிப்புணர்வு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

  • Share this:
கொரோனா வைரஸின் 2வது அலை, முன்பைவிட வேகமாக பரவி வரும் நிலையில், மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். பொது இடங்களில் கூட்டமாக கூடுவதையும், சமூக விலகலை கடைபிடிக்கவும் மறுக்கின்றனர். மத்திய, மாநில அரசுகள் கொரோனா பாதிப்பு குறித்து பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் உத்தரப்பிரதேசம் மொரதாபாத்தில், கலைஞர் ஒருவர் மேற்கொள்ளும் வித்தியாசமான கொரோனா வழிப்புணர்வு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மொரதாபாத்தில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் உறுப்பினராக இருக்கும் விக்கி என்ற கலைஞர், எமதர்மராஜாவைப் போல் வேடமணிந்து கொரோனா விழிப்புணர்வை மேற்கொண்டு வருகிறார். தொலைக்காட்சிகளில் காட்டப்படும் எமன் உருவத்தைப்போல் ஆபரணங்களை அணிந்து கொண்டு, கடாயுதத்தை சுமந்தவாறு வீதிகளில் வலம் வருகிறார். முகத்தில் மாஸ்க் அணிந்துள்ள அவர், கொரோனா வழிப்புணர்வு வாசகங்களை இந்தியில் எழுதியுள்ளார். அதில், ' பூலோகத்தில் இருக்கும் மக்களே! எமலோகத்தில் இருக்கும் தங்களுக்கு அதிக வேலை கொடுக்க வேண்டாம், முறையாக மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுங்கள்' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.



இந்து மத நம்பிக்கை அதிகம் பின்பற்றப்படும் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் அவர் முன்னெடுத்துள்ள இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து பேசிய கலைஞர் விக்கி, "கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. இந்த பெருந்தொற்று நோயில் இருந்து முழுமையாக விடுபட வேண்டுமென்றால், நம்மிடம் இருக்கும் மிக முக்கியமான ஆயுதம் சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிவது மட்டுமே. அதனை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும்" எனக் கூறினார்.

 

 



 

 

நாடு முழுவதும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 2 அலையின் வேகம் மிக அதிகமாக உள்ளது. இதனையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் நொய்டா, அலகாபாத், மீரட், காசியாபாத் உள்ளிட்ட நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகள் கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளுக்கு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. லக்னோ மாநகராட்சியில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: