யாரடி நீ மோகினி படத்தின் பாடலுக்கு டி.ஆர் நடனம் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

டி. ராஜேந்தர்

யாரடி நீ மோகினி படத்தின் பாடலுக்கு டி. ராஜேந்தர் நடனமாடுவது போல் இணையவாசிகள் உருவாக்கி உள்ளனர்.

 • Share this:
  யாரடி நீ மோகினி 2008ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் தனுஷ், நயன்தாரா, மற்றும் பலரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் "ஆடவாரி மாதாலகு ஆர்தாலு வேருலே" என்ற தெலுங்குத் திரைப்படத்திலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

  இந்த திரைப்படத்தில் வெளியான வெண்மேகம் பெண்ணாக உருவானதோ பாடல் கவிஞர் நா. முத்துக்குமார் எழுதியிருந்தார். ஹரிஹரன் இந்த பாடலை பாடி இருந்தார். இந்த பாடலுக்கு நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாரா லிப்சிங் கொடுத்து நடித்திருந்தனர். நடிகர் தனுஷின் யாரடி நீ மோகினி திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

  இந்த திரைப்படம் முடிந்து 13 ஆண்டுகள் முடிந்த நிலையில் இத்திரைப்படத்தில் வெளியான வெண்மேகம் பெண்ணாக உருவானதோ பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

  அதில் நடிகர் டி. ராஜேந்தர் நடனமாடுவது போல் இணையவாசிகள் உருவாக்கி உள்ளனர். மோனிஷா என் மோனலிசா 1999ல் வெளிவந்த தமிழ் மொழித் திரைப்படமாகும். இதனை டி.ராஜேந்தர் இயக்கினார். இதில் ராமகாந்த், மும்தாஜ், டி. ராஜேந்தர், மீனால் பெண்ட்சே ஆகியோர் படத்தில் நடித்தனர். இந்த திரைப்படத்தில் வெளியான நம்பாத நம்பாத பாடலை எடிட் செய்து தற்போது யாரடி நீ மோஹினி பாடலை உருவாக்கி உள்ளனர்.

  இந்த பாடல் இணையத்தில் பலரின் கவனம் பெற்றுள்ளது. இது யார் பார்த்த வேலை எனவும், இந்த பாடலுக்கு லிப் சிங் சரியாக பொருந்துகிறது எனவும் பலரும் கமெண்ட்ஸ் பதிவிட்டுள்ளனர்.
  Published by:Sankaravadivoo G
  First published: