உலகம் முழுவதும் பிரபலமான ஹாரி பாட்டர் திரைப்படத்தில் மாய போர்வை ஒன்று வருவதை அனைவரும் நினைவில் வைத்திருக்கலாம். ஒருவர் அந்த போர்வையை தன் மீது போர்த்திக் கொண்டால், மற்றவர் கண்களுக்கு தெரியாமல் மறைந்து விடுவார். அதேசமயம் போர்வைக்குள் இருப்பவரால் வெளியே நடக்கும் அனைத்தையும் பார்க்க முடியும். இந்த திரைப்படம் வெளியானதில் இருந்தே, இது போன்ற போர்வை தனக்கு வேண்டும் என அனைவரும் ஆசைப்பட்டு இருப்பார்கள். அதை நினைவாக்கும் விதமாகத்தான் தற்போது சீனாவை சேர்ந்த மாணவர்கள் செயற்கை நுண்ணறிவால் கட்டுப்படுத்தப்படும் கேமராக்களில் சிக்காத வண்ணம் போர்வை ஒன்றை உருவாக்கியுள்ளனர். அதே சமயத்தில் இந்த போர்வை செயற்கை நுண்ணறிவால் இயங்கும் கேமராக்களில் மட்டும் தான் தென்படாதே தவிர மனிதர்களால் இந்த போர்வையை மிக எளிதாக கண்டறிய இயலும்.
சீனாவில் உள்ள உகான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் பாதுகாப்பு கேமராக்களில் தென்படாத வண்ணம், இந்த இன்விஸ்டிஃபன்ஸ் ஜாக்கெட் என்ற மந்திரப் போர்வை அல்லது ஜாக்கெட்டை உருவாக்கியுள்ளனர். இதனை காலை, இரவு என எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அணிந்து கொண்டு பாதுகாப்பு கேமராக்களின் கண்ணில் மண்ணை தூவமுடியும்.
காலை நேரங்களில் இதனை அணிந்து கொள்ளும் போது கேமராக்களால் இந்த போர்வையை கண்டறிய முடியாது. அதேபோல இரவு நேரங்களில் மனித உடலில் இருந்து வெளிப்படும் வெப்ப அலைகளின் மூலமே நுண்ணறிவு கேமராக்கள் மனித நடமாட்டத்தை கண்டறிகின்றன. இந்தப் போர்வையானது மனித உடலில் இருந்து வெளிப்படும் வெப்ப அலைகளை செயற்கை நுண்ணறிவுக்கு தெரியாத வண்ணம் மறைத்து விடுகிறது.
செயற்கை நுண்ணறிவினால் செயல்படுத்தப்படும் கேமராக்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படும் இடமாக சீனா இருந்து வருகிறது. பணியாளர்களை கண்காணிப்பது முதல் பொது இடங்களில் மக்களை கண்காணிப்பது வரை அனைத்திற்கும் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் பாதுகாப்பு கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read : தமிழக இளைஞரை நேரில் அழைத்து பாராட்டிய சுந்தர் பிச்சை!
இதைப் பற்றி பேசிய இந்த உடையை உருவாக்கிய அணியில் ஒருவரும், கணினி அறிவியல் பட்டதாரியும், இந்த போர்வையின் அல்காரிதத்தை வடிவமைத்தவரான வெய் ஹுய் கூறுகையில் “இதை செய்து முடிப்பதற்கு எங்களுக்கு அதிக அளவிலான உழைப்பு தேவைப்பட்டது, மேலும் மிக அதிகமான சக்தியையும் இதை தயாரிப்பதற்காக நாங்கள் செலவழித்துள்ளோம். முக்கியமாக இந்த போர்வையில் வடிவமைப்பு மற்றும் இதற்கான ஆல்காரிதங்களை தயார் செய்வதில் கடினமாக உழைத்து உள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.
Also Read : திருமண போட்டோ ஷூட்: திடீரென குட்டியுடன் என்ட்ரி கொடுத்த குரங்கு... அடுத்து நடந்ததுதான் ஹைலைட்!
எது எப்படியோ, இந்த மந்திர போர்வை தயாரிக்கபட்டதின் நோக்கம் கேமராக்களில் கண்ணில் மண்ணை தூவுவது அல்ல. மாறாக சீனாவில் தயாரிக்கப்படும் செயற்கை நுண்ணறிவில் உள்ள குறைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யும் விதமாகவே இது தயாரிக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: China, Tamil News, Trending