Home /News /trend /

டிரீம் ஜாப்புக்கான விண்ணப்பத்தில் பாலியல் பரிசோதனை ரிப்போர்ட்டை இணைத்த இளைஞர்!

டிரீம் ஜாப்புக்கான விண்ணப்பத்தில் பாலியல் பரிசோதனை ரிப்போர்ட்டை இணைத்த இளைஞர்!

மாதிரி படம்

மாதிரி படம்

Trending News | விண்ணப்பத்தில் கவர் லெட்டரை சேர்க்கும் இடத்தில் தவறுதலாக மருத்துவ அறிக்கையை சேர்த்து சமர்ப்பித்துள்ளார்.

    இன்றைய காலகட்டத்தில் வேலை கிடைப்பது கடினமாக இல்லை. ஆனாலும், நாம் விரும்பும் வேலை கிடைப்பது அல்லது டிரீம் ஜாப் எனப்படும் கனவு வேலை, பிடித்த நிறுவனம், எதிர்பார்க்கும் சம்பளம் ஆகிய அனைத்து விஷயங்களையும் பூர்த்தி செய்யும் அளவுக்கு ஒரு வேலை கிடைப்பது என்பது நிச்சயமாக கடினமானது தான்.

    கல்விக்கும், படித்த படிப்புக்கும் சம்பந்தமே இல்லாத துறையில் தான் பலரும் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி இருக்கும் பொழுது ஒரு வேலைக்காக விண்ணப்பம் அனுப்புவது, நேர்காணலுக்காக தயார் செய்து கொள்வது என்று எல்லாவற்றிலுமே இன்றைய இளைஞர்கள் மிக மிக மெனக்கெடுகிறார்கள். போட்டி நிறைந்த உலகில் மிகச் சிறிய தவறு செய்தால் கூட வாய்ப்பு கை நழுவி விடும் அபாயமும் உள்ளது.

    இந்நிலையில் தன்னுடைய டிரீம் ஜாப் என்று கூறப்படும் ஒரு வேலைக்கு விண்ணப்பித்த ஒரு இளைஞர் வேலைக்கான விண்ணப்பத்தில், தன்னுடைய மருத்துவ பரிசோதனை அறிக்கையை தவறுதலாக இணைத்துள்ளார். அதுவும் என்ன அறிக்கையை இணைத்துள்ளார் என்பது தெரிய வந்தால் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள்!

    கடந்த 18 மாதங்களாக வேலை தேடி வந்த இந்த இளைஞர், தன்னுடைய கனவு வேலை கிடைத்தும் ஒரு சிறிய பிழையால் அதை தவறவிட்டுள்ளார். 27 வயதான ஜாக்வெஸ் பால் என்ற இளைஞர், தன்னுடைய ட்ரீம் ஜாபுக்கு விண்ணப்பிக்க, அதில் இணைக்க வேண்டிய கவர் லெட்டருக்கு பதிலாக, தன்னுடைய பாலியல் தொற்று நோய் மருத்துவ பரிசோதனை அறிக்கையை இணைத்துள்ளார்.

    வாவ்!! நீருக்கு அடியில் பிரபல சமையற் கலைஞர் செய்த காரியம்... வைரல் வீடியோ!


    ஆமாம், இவருடைய வேலைக்கான விண்ணப்பத்தை பார்த்த நிறுவனம். பாலியல் தொற்று அறிக்கை ரிப்போர்ட்டை கண்டவுடனே இவருடைய விண்ணப்பத்தை நிராகரித்து விட்டது. ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ரோலுக்கு விண்ணப்பித்ததாக பால் தெரிவித்தார்.

    ஒரு சில வேலைகளுக்கு அப்ளிகேஷன் பிராசஸ் என்பதே பல மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும். அந்த வகையில் இவருடைய இந்த வேலைக்காகவும் பல மணி நேரங்கள் செலவு செய்து விண்ணப்பித்ததாக பால் கூறினார். இறுதியாக விண்ணப்பத்தில் கவர் லெட்டரை சேர்க்கும் இடத்தில் தவறுதலாக மருத்துவ அறிக்கையை சேர்த்து சமர்ப்பித்துள்ளார். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, அதை உறுதி படுத்தும் விதமாக, அக்னாலேஜ்ட்மென்ட் கிடைக்கும். அதில், நாம் என்ன விண்ணப்பித்தோம் என்ற விபரங்கள் திரையில் காண்பிக்கப்படும். அதில் இவருடைய STI அறிக்கையைப் பார்த்தவுடன் அதிர்ந்து போனதாக செய்தியாளர்களிடம் கூறினார்

    இது எதார்த்தமாக நடந்த தவறு என்றும், நிறுவனம் தனது விண்ணப்பத்தின் கவர் லெட்டரை கேட்கும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால், இவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. தனது திறமைகளுக்கு, தன்னுடைய குவாலிபிகேஷனுக்கு ஏற்ற வேலையாக இருக்கும் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருந்ததாகவும் தன்னுடைய சிறிய தவறால் கவனக்குறைவால் இந்த வேலையை இழந்ததாகவும் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

    இவ்வளவு குளறுபடிக்கும் காரணமாக இருந்த அந்த பாலியல் தொற்று நோய் பரிசோதனை ரிப்போர்டில் இவருக்கு பாலியல் நோய் இல்லை என்பது தான் ஒரே ஒரு ஆறுதலான விஷயம்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Job, Trending, Viral Video

    அடுத்த செய்தி