கும்பமேளாவில் கவனம் ஈர்க்கும்1.5 அடி துறவி - யார் இந்த நாகா சேது?

கும்பமேளாவில் கவனம் ஈர்க்கும்1.5 அடி துறவி - யார் இந்த நாகா சேது?

கும்பமேளாவில் கவனம் ஈர்க்கும்1.5 அடி துறவி

இந்த ஆண்டு கும்பமேளாவில் 1.5 அடி உயரம் மட்டுமே உடைய நாகா சாது பக்தர்களின் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்

  • News18
  • Last Updated :
  • Share this:
உலகிலேயே மிக குறைந்த உயரம் கொண்ட நாகா சேது, இந்த ஆண்டு கும்பமேளாவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய பண்டிகைகளுள் ஒன்றாக கும்பமேளா உள்ளது. ஹரித்துவாரில் நடைபெறும் இந்த விழாவில் உலகம் முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கான இந்து மதத்தினர் கலந்து கொள்வார்கள். மேலும், கும்பமேளாவில் நாடு முழுவதும் உள்ள சாதுக்கள் மற்றும் துறவிகளும் கலந்து கொள்வது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு கும்பமேளாவில் 1.5 அடி உயரம் மட்டுமே உடைய நாகா சாது பக்தர்களின் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 55 வயதுடைய நாராயணன் நந் கிரிமகாராஜ் என்ற நாகா சாது துறவி உலகிலேயே மிக குறைந்த உயரம் கொண்ட சாதுவாகவும் அறியப்படுகிறார்.

இந்த ஆண்டு கும்பமேளா உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் ஏப்ரல் 1ம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாடு முழுவதும் 2வது அலை கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வருவதால், முழுமையான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பமேளாவில் மக்கள் ஏராளமானோர் கூடுவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவது மட்டுமல்லாமல், உலகெங்கும் இருந்து இந்த கும்பமேளாவில் பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்களின் வருகையை கருத்தில் கொண்டும் ஹரித்துவாரில் முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு ஏற்ப பரிசோதனைகள் மற்றும் பிரத்யேக கட்டுபாடுகள் மத்திய அரசு சார்பில் பிறபிக்கப்பட்டுள்ளது.

கும்பமேளாவில் மிக முக்கியமாக பார்க்கப்படுவது, நாடு முழுவதும் இருக்கும் சாமியார்கள், அகோரிகள், நாக சாதுக்கள், சன்னியாசிகள், துறவிகள் அதிகம் கலந்து கொள்வார்கள். விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் சாதுக்கள் மற்றும் துறவிகளிடமும் ஆசி வாங்கிக்கொள்வார்கள். சாபம் மற்றும் பாவங்களில் இருந்து விமோசனம் பெறுவதற்காக அவர்களிடம் ஆசி பெறுவார்கள். துறவிகள் மற்றும் சாதுக்கள் உள்ளிட்டோரிடம் ஆசி பெற்றுக்கொண்டால், துன்ப வாழ்க்கை மற்றும் சாபங்களில் இருந்து விடுபடுலாம் என இந்துக்களின் நம்பிக்கையாக இருப்பதால், அவர்களிடம் பக்தர்கள் ஆசிர்வாதம் பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Also read... ரசிகர்கள் எழுப்பிய சரமாரியான கேள்விகளுக்கு ஷாரூக்கானின் 'நச்' பதில்கள்!

அந்த வகையில் இந்த வருடம் , ஹரித்வாருக்கு வருகை தந்துள்ள நாக சாதுவான நாராயண் நந்த் கிரி மகாராஜ் என்னும் நாக சாது அனைவரையும் ஈர்த்துள்ளார். 55 வயதான அவர் 18 அங்குல உயரத்தில் உள்ளார். இவர் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. 18 கிலோ எடையுடன் உள்ளார். எழுந்து நிற்கவோ நடக்கவோ முடியாத இந்த துறவிக்கு அவரது பக்தர்கள் சேவை செய்து வருகின்றனர். "உலகின் மிகச்சிறிய துறவி" என்று கருதப்படும் இவரது பிரகாசமான கண்கள் அனைவரையும் ஈர்க்கின்றன. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இவர்தான் உலகில் மிகவும் இளமையான நாக சன்னியாசி என்றும் கூறப்படுகிறது.

பெரும்பாலான நாகர்கள் தங்கள் இளம் வயதிலேயே, சந்நியாசம் பெறுகிறார்கள் சிவனின் அழைப்பை ஏற்று, தங்கள் குடும்பங்களையும் , உடமைகளையும் விட்டுவிட்டு - சிவனை பூஜிப்பதில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள். ஆழ்ந்த தியானங்கள், கடுமையான யோகா, ஆன்மீக சடங்குகள் மற்றும் வேதங்களைக் கற்றுக்கொள்வது மற்றும் ஆன்மீக தேடலில் ஈடுபட இல்லற வாழ்க்கையை துறக்கிறார்கள். ஒரு சந்நியாசி , நாக சாது என்ற மதிப்பிற்குரிய பட்டத்தை பெற ஆறு வருட பிரம்மச்சரிய வாழ்க்கை, 12 ஆண்டுகள் சிவ பூஜை செய்திருக்க வேண்டும். இவர்களை தரிச்சிப்பதே புண்ணியம் என்பதால், மக்கள் இங்கே கூடுகிறார்கள்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

சிறந்த கதைகள்