முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / உடலை வில்லாய் வளைத்து உலக சாதனை படைத்த சிறுமி.. வைரல் வீடியோ

உடலை வில்லாய் வளைத்து உலக சாதனை படைத்த சிறுமி.. வைரல் வீடியோ

லிபர்ட்டி பாரோஸ்

லிபர்ட்டி பாரோஸ்

Guinness World Record | லிபர்ட்டி பாரோஸ் ஏற்கனவே தான் நடத்தி வரும் யூ-டியூப் சேனல் மூலமாக சோசியல் மீடியாவில் பிரபலமானவர். தற்போது கின்னஸ் சாதனை படைத்ததால் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

யோகாசனம் செய்யும் போது லேசாக தவறு செய்து விட்டால் கூட தசைப்பிடிப்பு, வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதேபோல் உடலை ரப்பர் போல் வளைத்து ஜிம்னாஸ்டிக்ஸ் செய்யும் யாரைப் பார்த்தாலும், “அடேங்கப்பா... இவர்களுக்கு உடலில் எலும்புகள் இல்லையோ?” என்ற சந்தேகம் தோன்றும். ஒரு சில நிமிடங்களிலேயே இடுப்பை வளைத்து, தலைக்கு மேல் கால்களைக் கொண்டு வந்து உருண்டையான பந்து போல உடலை மாற்றிக்கொள்வார்கள். இப்படி உடலை ஸ்பிரிங் போல் வளைக்க சின்ன வயதில் இருந்தே கடினமான பயிற்சியும், முயற்சியும் தேவை.

கின்னஸ் சாதனை படைத்த சிறுமி:

இங்கிலாந்தின் பீட்டர்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த லிபர்ட்டி பாரோஸ் என்ற சிறுமி, உடலை ஸ்பிரிங் போல வளைத்தும் முறுக்கியும் விதவிதமான சாகசங்களை செய்து உலக சாதனை புத்தகமான கின்னஸ் ரெக்கார்ட்டில் இடம் பிடித்துள்ளார். தற்போது 14 வயதாகும் லிபர்ட்டி, சிறு வயதிலிருந்தே படிப்பு விளையாட்டு இரண்டிலும் ஈடுபாடு காட்டி வருகிறார். குறிப்பாக நடனம் என்றால் லிபர்ட்டிக்கு மிகவும் பிடிக்குமாம். அதன் மூலமாக ஜிம்னாஸ்டிக் மீதும் அவருக்கு ஆர்வம் பிறந்துள்ளது. அந்த ஜிம்னாஸ்டிக் மூலமாக தான் இன்று “உலகிலேயே மிகவும் ஃபிலெக்சிபிலான பெண்” என்ற சாதனையை படைத்துள்ளார்.

பல்வேறு ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும், பாராட்டுக்களையும் குவித்துள்ளார். இந்நிலையில் அக்டோபர் 5 அன்று, தனது உடலைப் பின்னோக்கி வளைத்து, தனது தலையை கால்கள் மற்றும் மார்பு வழியாக தலைக்கு கொண்டு வந்து 30 வினாடிகளில் பத்துக்கும் மேற்பட்ட மாற்றங்களை செய்து காட்டி அசத்தியுள்ளார். இப்படி உடலை வளைப்பது 'The Liberty Lowdown' என அழைக்கப்படுகிறது. அரை நிமிடத்தில் 11 முறை உடலை வளைத்ததன் மூலமாக லிபர்ட்டி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இதுவரை இதுபோன்ற சாதனையை யாரும் செய்ததில்லை என்றும், அதைச் செய்வது அவ்வளவு எளிதல்ல என்றும் கின்னஸ் சாதனைப் பிரதிநிதிகளே கூறியுள்ளனர்.




 




View this post on Instagram





 

A post shared by LIBERTY BARROS (@libertybarros)



இது குறித்து சிறுமி லிபர்ட்டி பாரோஸ் கூறுகையில் "நான் ஒரு கின்னஸ் உலக சாதனையாளர் என்று சொல்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன். இது ஒரு அற்புதமான சாதனை. என் உடலின் வளையும் தன்மையை உணர்ந்துகொண்டது நான் நினைத்ததை விட எனக்கு பல படிகள் முன்னேற்றத்தை கொடுத்துள்ளது. இது என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read : எனக்கு 60 அவருக்கு 30.. பழங்குடியின இளைஞருடன் அமெரிக்க பெண்ணுக்கு மலர்ந்த காதல்..!

யூ-டியூப் சேனல்:

லிபர்ட்டி பாரோஸ் ஏற்கனவே தான் நடத்தி வரும் யூ-டியூப் சேனல் மூலமாக சோசியல் மீடியாவில் பிரபலமானவர். தற்போது கின்னஸ் சாதனை படைத்ததால் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளார். தற்போது ஸ்பெயினின் காட் டேலண்ட் போட்டியின் அரையிறுதியில் போட்டியிட உள்ளார். இதுமட்டுமின்றி பல்வேறு ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளிலும் பங்கேற்று அசத்தி வருகிறார்.

லிபர்ட்டியின் தந்தை ராம் பாரோஸ் தனது மகளுக்கு பயிற்சி வழங்கிய பீட்டர்பரோ ஜிம்னாஸ்டிக்ஸ் கிளப்பைப் பாராட்டியுள்ளார். "இந்த கிளப், பீட்டர்பரோ மற்றும் கேம்பிரிட்ஜைச் சுற்றியுள்ள ஜிம்னாஸ்டிக்ஸிற்கான மையங்களில் சிறந்ததாகும். சிறுவர், சிறுமிகளுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய இப்படியொரு சிறப்பான கிளப்பை கண்டுபிடிப்பது கடினம்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read : தலையை துண்டிக்க இருந்த லிப்ட்.. நூலிழையில் தப்பித்த இளைஞர் - ஷாக் வீடியோ

top videos

    நடனத்தின் மீது தீராத ஆர்வம் கொண்டுள்ள லிபர்டி பாரோஸ், எதிர்காலத்தில் சொந்தமாக நடன மையம் தொடங்க வேண்டும் என்பதும், ஆக்‌ஷன் படங்களில் நடிக்க வேண்டும் என்பதும் தனது கனவு எனத் தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Guinness, Trending, World record