• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • உலகிலேயே விலை உயர்ந்த பர்கர்… ஒரு பீஸ் ரூ. 4 லட்சம்… அப்படி என்னதான் ஸ்பெஷல்?!

உலகிலேயே விலை உயர்ந்த பர்கர்… ஒரு பீஸ் ரூ. 4 லட்சம்… அப்படி என்னதான் ஸ்பெஷல்?!

டச்சு சமையல் கலைஞர் தான் செய்த அந்த பர்கரை "தி கோல்டன் பாய்" என்று பெயரிட்டுள்ளார்.

  • Share this:
கொரோனா தொற்றுநோயால் உலகெங்கிலும் உள்ள உணவக வணிகம் சிரமப்பட்டு வருகிறது. ஆனால் இது எதுவும் ஒரு சமையல் கலைஞரை பாதிக்காது என்று சொல்லும் வகையில் உணவக உரிமையாளரும், சமையல் நிபுணருமான டச்சு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் விலையுயர்ந்த பர்கர் ஒன்றை உருவாக்கியுள்ளார். டி டால்டன்ஸ் என்று பெயரிடப்பட்ட உணவகத்தின் உரிமையாளரான ராபர்ட் ஜான் டி வீன் என்பவர் ஒரு விலையுயர்ந்த ஹாம்பர்கரை உருவாக்கியுள்ளார். இதன் ஒரு துண்டுக்கு சுமார் 5,000 டாலர்கள் (அதாவது இந்திய மதிப்பில் ரூ. 4,41,305) செலவகுமாம்.

அப்படி என்ன இந்த பர்கரில் உள்ளது? டச்சு சமையல் கலைஞர் தான் செய்த அந்த பர்கரை "தி கோல்டன் பாய்" என்று பெயரிட்டுள்ளார். ஏனெனில் இந்த பர்கர் தங்க இலைகள், குங்குமப்பூ, வாக்யு மாட்டிறைச்சி, கேவியர் மற்றும் பல சத்தான விலையுயர்ந்த உணவு பொருட்களால் செய்யப்பட்டுள்ளது. உலகின் மிக விலையுயர்ந்த உணவுப் பொருட்களின் சமையல் பட்டியலில் தனது பர்கரும் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார். ராபர்ட் ஜான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பர்கரின் படத்தை பகிர்ந்துள்ளார். இதன் விலை உணவு பிரியர்களை வாயடைக்க வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இதற்கு முன்னதாக அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள ஒரு உணவகம் ஒன்று 2011 ஆம் ஆண்டில் உலகின் மிக விலையுயர்ந்த பர்கரை உருவாக்கியது. இதன் விலை $5,000 அமெரிக்க டாலர்களாக இருந்தது. அதாவது 4,200 யூரோ டாலர்கள். மேலும் இந்த ஒரு பர்கரின் எடை சுமார் 352.44 கிலோவாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இப்போது தயாரிக்கப்பட்டுள்ள இந்த ‘கோல்டன் பாய்’ பர்கர் எடையில் சாதனை படைக்காவிட்டாலும் பல்வேறு விலையுயர்ந்த பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

Also Read | ”சின்ன வேலதான்… ஆனா அதிக பலன்…” – ’ஆயில் புல்லிங்’-ன் மலைக்க வைக்கும் நன்மைகள்!

பெலுகா கேவியர், கிங் நண்டு, ஸ்பானிஷ் பாலெட்டா ஐபெரிகோ, வெள்ளை உணவு பண்டங்களுக்கு மணமூட்டும் காளான், மற்றும் இங்கிலீஷ் செடார் சீஸ் உள்ளிட்டவை இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பர்கரில் உலகின் விலையுயர்ந்த காபி பீன்களில் ஒன்றான கோபி லுவாக் என்பதை கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு பார்பெக்யூ சாஸ் உபயோகிக்கப்பட்டுள்ளது. பர்கரின் ரொட்டிகள் டோம் பெரிக்னான் ஷாம்பெயின் மாவைக் கொண்டு தயாரிக்கப்பட்டு, அதன் மேற்பரப்பில் தங்க இலைகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மிகவும் விலையுயர்ந்த பர்கர் என்ற விலைக் குறியைத் தவிர, இந்த பர்கர் உருவாக்கப்பட்டதற்கு பின்னால் ஒரு நல்ல காரணம் இருப்பதாக ராபர்ட் ஜான் தெரிவித்துள்ளார். இந்த விலையுயர்ந்த பர்கரை கடந்த ஜூன் 28ம் தேதி அன்று நெதர்லாந்தை தளமாகக் கொண்ட வணிக நிறுவனமான ரெமியா இன்டர்நேஷனலுக்கு € 5,000 டாலர்கள் (அதாவது 5,964 அமெரிக்க டாலர்கள்) என்ற விலைக்கு விற்கப்பட்டது.

மேலும் அதை ராயல் டச்சு உணவு மற்றும் பானங்கள் சங்கத்தின் தலைவரான ராபர்ட் வில்லெம்ஸ் சாப்பிட்டார். இந்த பர்கர் மூலம் கிடைத்த வருமானத்தை நெதர்லாந்தில் உணவு வங்கிகளை நடத்தும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இதுகுறித்து பேசிய ராபர்ட் ஜான், "இந்த 5,000 டாலர் நன்கொடை, பசியில் வாடும் மக்களுக்காக கிட்டத்தட்ட 1,000 உணவுப் பொதிகளை வாங்க தொண்டு நிறுவனத்திற்கு உதவும்" என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பர்கரில் பயன்படுத்தப்படும் குறிப்பிடத்தக்க பொருட்களில், பெலுகா கேவியர் மிகவும் விலையுயர்ந்த கேவியர் ஆகும். சந்தையில் இதன் தற்போதைய விலை ஒரு கிலோவுக்கு $7,000 முதல் $10,000 அமெரிக்க டாலர்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதேபோல், வாக்யு மாட்டிறைச்சி ஜப்பானில் இருந்து வருகிறது. இது உலகிலேயே மிகவும் மதிப்புமிக்க மாட்டிறைச்சி ஆகும். உயர் தர வாக்யு ஒரு பவுண்டுக்கு $ 200 அமெரிக்க டாலர்கள் வரை செலவாகும். விலையுயர்ந்த பொருட்களை கொண்டு தயாரித்த காரணத்திற்காகவே இதன் விலை தலைசுற்ற வைத்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: