ஒரு கதாநாயகன் ஒரு அழகான பெண்ணைக் காதலித்து, அவளையே திருமணமும் செய்து, இன்பத்துன்பங்களை பகிர்ந்து மகிழ்வோடு வாழும் திரைப்படங்களை பார்த்து, "ஆஹா! திருமண வாழ்க்கை என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்? புனிதமான பந்தம் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்? என்று நீங்கள் நினைத்து இருக்கலாம்.
திரையில் நாம் காணும் "ஆழமான காதல் மற்றும் அழகான திருமண வாழ்க்கை" மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் சில நிஜ வாழ்க்கை ஜோடிகளும் இங்கே உள்ளனர்.
ஆம்! கின்னஸ் உலக சாதனை இணையதளத்தின் படி, அமெரிக்காவைச் சேர்ந்த ஹெர்பர்ட் ஃபிஷர் மற்றும் ஜெல்மிரா ஃபிஷர் என்கிற தம்பதி, நீண்ட காலம் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த ஜோடி என்கிற சாதனையை படைத்துள்ளனர்.
1924 இல் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, கடந்த பிப்ரவரி 2011 இல் ஹெர்பர்ட் ஃபிஷர் இறக்கும் வரை 86 ஆண்டுகள் மற்றும் 290 நாட்கள் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். அமெரிக்காவின் வட கரோலினாவில் நண்பர்களாக வளர்ந்த ஹெர்பர்ட் மற்றும் ஜெல்மிரா ஆகியோர் முறையே 18 மற்றும் 16 வயதாக இருந்தபோது திருமணம் செய்து கொண்டனர்.
இரண்டாம் உலகப் போர் மற்றும் பெரும் பொருளியல் வீழ்ச்சி (Great Depression) முதல் சிவில் உரிமைகள் இயக்கம் வரை, இந்த தம்பதியினர் தங்கள் நீண்ட கால திருமண வாழ்க்கையில் பல பெரிய உலக வரலாற்றுக்கு நிகழ்வுகளை ஒன்றாக கண்டுள்ளனர்.
Also Read : தீ பற்றி எரியும் கட்டிடத்தில் இருந்து சிறுமியை உயிரை பணயம் வைத்து காத்த இளைஞர்கள்... வைரல் வீடியோ!
இவ்விருவரும் ஒருவருக்கொருவர் பகிரும் அசைக்க முடியாத அன்பை அங்கீகரித்து, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, கடந்த 2010 இல் இவர்களுக்கு கையொப்பமிடப்பட்ட பாராட்டையும் (commendation) வழங்கினார்.
இதற்கிடையில், அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு ஜோடி ஆன யூஜின் கிளாடு மற்றும் டோலோரஸ் கிளாடு, மே 25, 1940 அன்று திருமணம் செய்து இன்றுவரை தங்களது திருமண வாழ்வில் நீடித்து வருகிறன்றனர்.
இந்த ஜோடி 81 ஆண்டுகள் மற்றும் 57 நாட்கள் ஒன்றாக இருந்ததற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலையில் கின்னஸ் உலக சாதனைப் பட்டத்தை வென்றனர். தற்போது உதவி பெறும் விடுதியில் தங்கியிருக்கும் இந்த ஜோடி, நடைபயணம், நடனம், ஒன்றாகப் பயணம் செய்தல் போன்றவற்றில் ஒருவருக்கொருவர் இணைந்து தங்கள் வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது.
இதேபோல, ஈக்வடாரைச் சேர்ந்த 110 வயதான ஜூலியோ சீசர் மோரா டாபியா மற்றும் 105 வயதான வால்ட்ரமினா மக்லோவியா குயின்டெரோஸ் ரெய்ஸ் ஆகியோர் 79 ஆண்டுகளாக தங்களது திருமண வாழ்வில் நீடிக்கின்றனர்.
Also Read : யானைகிட்டயே பால் குடிக்கும் 3 வயது குழந்தை!
1934 இல் ஜூலியோ, வால்ட்ரமினாவைக் காதலிக்க தொடங்கி உள்ளார். பின்னர் அவரது கவிதைகளால் தன் காதலியின் மனதை மெல்ல மெல்ல கவர்ந்து, பின் ஒருவழியாக 1941 ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதேபோல "திருமணத்திற்கு இது தான் சரியான வயது" என்று ஒன்று கிடையாது என்பதை நிரூபிக்கும் வண்ணம், இங்கிலாந்தை சேர்ந்த ஜார்ஜ் கிர்பி மற்றும் டோரீன் லக்கி ஆகியோர், 27 வருடங்கள் டேட்டிங் செய்த பிறகு முறையே 103 மற்றும் 91 வயதில் கடந்த 2015 ஆம் ஆண்டில் தான் திருமணமே செய்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Guinness, Marriage Life, Trending, World record