Home /News /trend /

உலகிலேயே உயரமான செனாப் பாலம்.. கண் கவரும் போட்டோக்களை பகிர்ந்த இந்திய ரயில்வே.! 

உலகிலேயே உயரமான செனாப் பாலம்.. கண் கவரும் போட்டோக்களை பகிர்ந்த இந்திய ரயில்வே.! 

செனாப் பாலம்

செனாப் பாலம்

Chenab Bridge | பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட உயரமானது எனக்கூறப்படும் செனாப் பாலத்தின் கண் கவரும் போட்டோக்களை இந்திய ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Jammu and Kashmir, India
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இரும்பு பாலம் ‘செனாப் பாலம்’ என அழைக்கப்படுகிறது. உதம்பூர் - ஸ்ரீநகர்-பாராமுல்லா ரயில் இணைப்புகளின் முக்கிய வழித்தடமாக விளக்கும் இந்த பாலம், உலகிலேயே மிகவும் உயரமான ரயில் பாலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

செனாப் பாலம் ஆற்றுப் படுகையின் மட்டத்திலிருந்து சுமார் 359 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது, இதன் நீளம் 1,315 மீட்டராகும். உலக புகழ் பெற்ற காதல் நகரமான பாரிஸில் அமைந்துள்ளா ஈபிள் கோபுரத்தை விட, செனாப் பாலம் 35 மீட்டர்கள் அதிக உயரம் கொண்டது. 120 ஆண்டுகள் வரை உறுதியாக நிற்கும் என கணிக்கப்பட்டுள்ள செனாப் பாலம், 8 ரிக்டர் வரையிலான நிலநடுக்கத்தையும், சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலையும் தாங்கக்கூடியது.

14 மீட்டர் இரட்டை இருப்புப் பாதை மற்றும் 1.2 மீட்டர் அகலமுள்ள மத்திய விளிம்பு ஆகியவற்றைக் கொண்ட இந்த பாலத்தில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் பயணிக்கின்றன. 1,486 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, இந்த பிரம்மாண்ட பாலத்தின் அற்புதமான காட்சிகள் அடங்கிய போட்டோக்களை இந்திய ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளுடன் கூடிய செனாப் பாலத்தின் 4 புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.ஆகாயத்திற்கு நடுவே கட்டிய இரும்பு பாதை போல் மேகக்கூட்டங்களுக்கு நடுவிலும், தங்க நிறத்தில் சூரியன் தகதகக்கும் பின்னணியிலும், மற்ற 2 படங்களும் செனாப் பாலத்தை முழுவதுமாக வெண் பனி போர்த்தியது போன்ற மேகக்கூட்டங்களால் சூழப்பட்டுள்ளது போலவும், 4 புகைப்படங்களும் விதவிதமான இயற்கை சூழலில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. அந்த போட்டோக்களை பார்த்து வியந்து போன நெட்டிசன்கள் பலரும் மேகக்கூட்டங்களுக்கு நடுவே பாலம் கட்டப்பட்டுள்ளதா? என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also Read : எனக்கும் பலூன் கொடுங்க... காத்திருந்து பலூனை வாங்கிய நாயின் க்யூட் வீடியோ

சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த செனாப் பாலத்தின் போட்டோக்களை இதுவரை 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் ரீ-ட்வீட் செய்துள்ளனர். அதேபோல் ட்விட்டரில் நூற்றுக்கணக்கான கமெண்ட்களும் குவிந்து வருகிறது. "உண்மையாக உலகளாவிய தரநிலை திட்டம் - இந்தியர்கள் பெருமைப்பட வேண்டிய ஒன்று” என ட்விட்டர் யூஸர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

Also Read : இளம்பெண்ணுக்கு பிறந்த ட்வின்ஸ்... அப்பாவும் இருவர் என்பதால் மருத்துவர்கள் அதிர்ச்சி

மற்றொருவர் "இந்தியப் பொறியாளர்களின் குறிப்பிடத்தக்க சாதனை. இத்திட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார். பலரும் ஈபிள் டவரை விட இது உயரமான செனாப் பாலத்தின் காட்சிகள் மெய்சிலிர்க்க வைப்பதாகவும், இந்த பாலத்தை கட்டமைக்க பொறியாளர்கள் எப்படிப்பட்ட கஷ்டங்களை எல்லாம் எதிர்கொண்டு இருப்பார்கள் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்றும் விதவிதமான வகையில் தங்களது உணர்வுகளை பகிர்ந்து வருகின்றனர்.
Published by:Selvi M
First published:

Tags: Jammu and Kashmir, Photo, Trending

அடுத்த செய்தி