உலகின் முதல் தங்கமுலாம் பூசப்பட்ட வடா பாவ் துபாயில் அறிமுகம்.. விலை எவ்வளவு தெரியுமா?

காட்சி படம்

உலகின் முதல் தங்க வடா பாவ் துபாயில் இருக்கும் உணவகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
இந்தியாவில் வட மாநிலங்களில் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ் வகைகள் கிடைக்கும். அவற்றில் பல தற்போது தென் மாநிலங்களில் பிரபலமடைந்து வருகிறது. அதில் ஒன்று தான் வட பாவ். பர்கர் போல் இரண்டு பன்களுக்கு இடையே லட்டு போன்ற உருண்டையான ஒரு தீனியை வைத்து சாப்பிடுதுதான் இந்த வட பாவ். தெருக்களில் அதிகமாக விற்பனை செய்யப்படும் இந்த வடா பாவ் மும்பையில் பிரபலமானது.

இந்நிலையில், உலகத்தில் முதன் முறையாக 22 கேரட் தங்க முலாம் மூசப்பட்ட வட பாவ் துபாயில் உருவாக்கப்பட்டுள்ளது. வெண்ணெய் மற்றும் பாலாடைக்கட்டி சேர்க்கப்பட்ட அந்த வடா 22 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட காகிதத்தால் மூடப்படுகிறது.மேலும் இதில் இனிப்பு உருளைக்கிழங்கு, புதினா மற்றும் எலுமிச்சம்பழம் சேர்க்கப்பட்டுள்ளது. கலீஜ் டைம்ஸ் அறிக்கையின்படி, இதில் சேர்க்கப்பட்டுள்ள வெண்ணெய் பிரான்சிலிருந்து வந்துள்ளது மற்றும் பாவ் வீட்டில் தயாரிக்கப்பட்ட புதினா மயோனைஸ் டிப்பால் மூடப்பட்டிருக்கும்.

இந்த 22 கேரட் தங்க காகிதம் பிரான்சில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த வடா பாவ் விலை ரூ. 2,000 ஆகும். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மஸ்ரத் தாவூத் என்பவர் இந்த வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்திருந்தார். உலகின் முதல் தங்க வடா பாவ் என்ற தலைப்பில் அறிமுகமாகும் இந்த வீடியோவை இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவைபார்த்த நெட்டிசன்கள் "வாவ்" என ஆச்சரியப்படும் வகையில் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இந்த வைரல் வீடியோவில் வட பாவ் மரத்தால் செதுக்கப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 22k தங்க முலாம் பூசப்பட்ட வட பாவ் எப்படி தயார் செய்யப்பட்டது என்பதை விளக்கும் காட்சிகளும் அதில் உள்ளது.

Also Read : பாரா கிளைடிங்கில் பறந்து மகிழும் நாய் ... இணையத்தில் வைரலாகும் வீடியோ

"வட பாவ் இப்போது தங்கத் தரத்தை அனுபவிக்கிறது" என ஒரு யூசர் கமெண்ட் செய்துள்ளார். முன்னதாக துபாயின் ஸ்கூபி கபே (Scoopi cafe) எனும் ஓட்டலில் ‘பிளாக் டைமண்ட்’ என அழைக்கப்படும் வெண்ணிலா ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படுகிறது. இதன் ஒரு ஸ்கூப் விலை ரூ. 60,000 ஆகும். இந்த ஆடம்பரமான ஐஸ்க்ரீம் விற்பனை செய்யப்படுவதை நடிகையும், ட்ராவல் விலாகருமான(Vlogger) ஷெனாஸ் ட்ரஷரி என்பவர் வெளியிட்டிருந்தார். அதில் வெர்சேஸ் கிண்ணத்தில் இந்த ஐஸ்கிரீம் பரிமாறப்படுகிறது. இது உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம் என்றும் அழைக்கப்படுகிறது. 
View this post on Instagram

 

A post shared by O’Pao (@opaodxb)

மேலும், அங்கு சென்று ஐஸ்கிரீம் சாப்பிடுவது தொடர்பான வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், “ஒரு ஐஸ்கிரீமுக்கு 60,000 ரூபாய்!!!! GOLD ஐஸ்கிரீம் சாப்பிடுவது துபாயில் மட்டுமே. உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம்" என்று கேப்ஷன் செய்திருந்தார். இதில் 23 கேரட் உண்ணக்கூடிய தங்கம் மடகாஸ்கர் வெண்ணிலா ஐஸ்கிரீமின் மேல் தூவப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துபாயில் ராயல் கோல்ட் பிரியாணி என்ற தங்கம் சேர்க்கப்பட்ட பிரியாணி ஒரு பிளேட் சுமார் ரூ. 19,705.851க்கு விற்கப்படுகிறது. சமீபத்தில் இந்தியாவில் கூட தங்க மூலம் பூசப்பட்ட ஸ்வீட்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: