Home /News /trend /

தவழும் பந்தயம் வச்சா இந்த குழந்தைங்க என்ன பன்றாங்க பாருங்க.. - கியூட் வீடியோ

தவழும் பந்தயம் வச்சா இந்த குழந்தைங்க என்ன பன்றாங்க பாருங்க.. - கியூட் வீடியோ

Baby Crawling Race

Baby Crawling Race

Baby Crawling Race Video | கூடைப்பந்து மைதானத்தில் நடத்தப்பட்ட மழலைகளுக்கான தவழும் பந்தயத்தில் ஏராளமான குழந்தைகள் தவழும் வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

குழந்தைகள் செய்யும் குறும்புகளை ரசிக்காதர்வர்கள் இங்கே எவரும் இல்லை. அவர்கள் செய்யும் குறும்புகளையும், சேட்டைகளையும் பார்த்தாலே  நம் கவலைகள் அனைத்தும் மறந்துவிடும் என்றே கூறலாம். ஒரு வயதிற்கும் குறைவான சுட்டிக் குழந்தைகள் தவழ்ந்து செல்லும் பந்தயத்தில் கலந்து கொண்டால் அவர்கள் செய்யும் குறும்புகள் பற்றி சொல்லவா வேண்டும்.

ஒரு குழந்தை தவழ்வதைப் பார்த்தாலே நமக்கு உற்சாகம் பீரிடும் அல்லவா.?  ஆனால் மழலைகளுக்கான தவழும் போட்டியில் குழந்தைகள் கூட்டமாக தவழ்ந்து செல்வதை  பார்த்தால் எப்பேர்ப்பட்ட சந்தோஷம் நமக்கு கிடைக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்..

கூடைப்பந்து மைதானத்தில் நடத்தப்பட்ட மழலைகளுக்கான தவழும் பந்தயத்தில் ஏராளமான குழந்தைகள் தவழும் வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

கூடைப்பந்து மைதானத்தில் நடைப்பெற்ற இந்த பந்தயத்தில் குழந்தைகள் அனைவரும் ஒரு பக்கத்திலிருந்து தவழ்ந்து சென்று மறுபக்கத்தில் இருக்கும் வெற்றிக்கோட்டை கடந்து தங்களது பெற்றோரை அடைய வேண்டும்.   பந்தயம் தொடங்கியவுடன் குழந்தைகள் மறுபக்கத்தில் இருக்கும் தங்களது பெற்றோரை நோக்கி தவழ துவங்குகிறார்கள். ஆனால் இதில் ஒருசில குழந்தைகள் அதே இடத்தில் இருந்து விளையாடுவதும், அழுவதுமாக இருக்கும் போது இரு குழந்தைகள் மட்டும் ஒன்றன் பின் ஒன்றாக வெற்றிக்கோட்டை நோக்கி தவழ்கின்றனர். அனால் அங்கே தான் ட்விஸ்டே உள்ளது, வெற்றிக்கோட்டை நெருங்கும் நேரத்தில் அவ்விரு குழந்தைகளும் தங்கள் பெற்றோரை மறந்துவிட்டு ஒருவருக்கொருவர் விளையாடத் தொடங்குகிவிடுகிறார்கள்.



இதே போல் அடுத்து அடுத்து வரும் ஒவ்வொரு வீடியோவில் குழந்தைகள் செய்யும் குறும்புகளை ஒரு தொகுப்பாக தன்சு யேகன் என்பவர் 'உலகின் அழகான விளையாட்டு - குழந்தைகளுக்கான தவழும் பந்தயம் தான்' என்று தலைப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Also Read : குழந்தையும் தெய்வமும் ஒண்ணு.. நடுத்தெருவில் கொட்டிய இந்த பழங்களே அதற்கு சாட்சி!

இந்த வீடியோவை இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர், 600க்கும் மேற்பட்ட பயனர்கள் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்துள்ளனர். பல பயனர்கள் வீடியோவைப் பாராட்டியும், சிலர் குழந்தைகளை இப்படி நடத்தும் முழு செயல்முறையையும் விமர்சித்தும் பதிவிட்டுள்ளனர்.





குழந்தைகள் இணையத்தில் ஆட்சி செய்வது இது முதல் முறை அல்ல. அவர்கள் எப்பொழுதும் கூடுதலான ஒன்றைச் செய்வதில் பரபரப்பாக இருப்பார்கள். சமீபத்தில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், புஷ்பா: தி ரைஸ் படத்தில் இருந்து அல்லு அர்ஜுனின் வசனத்திற்கு தனது மகள் 'ஜுகேகா நஹி' ஆக்சன் செய்திருந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

Also Read : போட்டோ எடுக்காதீங்க ப்ளீஸ்; பெண்ணை தடுத்த யானை... அடுத்து என்ன செய்தது தெரியுமா?

வார்னரின் இன்ஸ்டாகிராம் ரீல்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். ஹிட் பாடல்கள் முதல் ஃபேமஸ் வசனங்கள் வரை என்று இவர் பதிவிடும் வீடியோக்கள் அனைத்தும் வேடிக்கையாக இருக்கும். வார்னரின் குழந்தையும் இவரை பின்பற்றி ரீல்ஸ் விடியோக்களின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் என்றே கூறலாம். இந்த வீடியோ இதுவரை 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து, 8 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்கள் மற்றும் டன் கருத்துகளையும் பெற்றுள்ளது.



 




View this post on Instagram





 

A post shared by David Warner (@davidwarner31)






வார்னரின் இந்த பதிவிற்கு அவரது மனைவி கேண்டீஸ் "அவள் இதை விரும்புகிறாள், அவள் அப்பாவையும் பின்பற்றுகிறாள்”என்று இதய எமோஜியுடன் கமெண்ட் செய்துள்ளார். மேலும் வார்னரின் டெல்லி கேபிடல்ஸ் அணி வீரரான கலீல் அகமதுவும் 'எனக்கு மிகவும் பிடித்த ISLA' என்று பதிவிட்டுள்ளார்.
Published by:Selvi M
First published:

Tags: Baby, Trending, Viral Video

அடுத்த செய்தி