அல்சைமர்ஸ் டிசீஸ் இன்டர்நேஷனல் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 21 அன்று உலக அல்சைமர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்தத் தினத்தன்று, உலகெங்கிலும் உள்ள சுகாதார நிறுவனங்கள் இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தங்கள் முயற்சிகளில் கவனம் செலுத்துகின்றன.
அல்சைமர் நோய்:
அல்சைமர் நோய் என்பது முதலில் ஜெர்மனியில் 1906 இல் கண்டுபிடிக்கப்பட்டது. மறதி ஏற்பட்டு வந்த ஒரு பெண்ணிற்கு மனநோய் என்று நினைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் இறந்த பின்னர் அவரது மூளையில் ஏற்பட்ட சிதைவுகள் கண்டறிந்த அல்சைமர் எனும் மருத்துவர் பெயராலேயே இந்த நோய் அழைக்கப்படுகிறது.
அல்சைமர் ஒரு மூளைக் கோளாறு ஆகும். இது வயதாக வயதாக மெல்ல மெல்ல மனிதனின் நினைவாற்றலையும் சிந்திக்கும் திறனையும் அழிக்கிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி(WHO), அல்சைமர் நோய் டிமென்ஷியாவின் மிகவும் பொதுவான வடிவமாகும், மேலும் இது 60-70 சதவீத வழக்குகளுக்கு பங்களிக்கக்கூடும்.
International Day of Peace: இனவாதத்தை உடைத்து அமைதியைக் கட்டியெழுப்பும் சர்வதேச அமைதி தினம் இன்று!
இந்த நிலை லேசானது முதல் மிதமானது முதல் கடுமையானது வரை மூன்று நிலைகளில் மோசமடைகிறது, நினைவாற்றல் இழப்பு முக்கிய அறிகுறியாக உள்ளது. இறுதியில்,அவர்கள் எளிய பணிகளைச் செய்யும் திறனை கூட இழக்கிறார்கள். அல்சைமர் டிமென்ஷியாவுக்கு மிகவும் பொதுவான காரணம். 65 வயதிற்கு மேல், அல்சைமர் நோயின் பாதிப்பு ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் இரட்டிப்பாகும்.
உலகில் சுமார் 44 மில்லியன் மக்கள் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகப்படியாக அமெரிக்காவில், 5.5 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு 66 வினாடிகளிலும், அமெரிக்காவில் ஒருவர் அல்சைமர் நோயால் பாதிக்கப்படுவது தெரிகிறது. இன்று வரை அந்த நோயை முழுமையாக குணப்படுத்த எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.
கருப்பொருள்
செப்டம்பர் 2022 இல் உலக அல்சைமர் மாதத்திற்கான கருப்பொருள் 'டிமென்ஷியாவை அறிந்து கொள்ளுங்கள், அல்சைமர் நோயை அறிந்து கொள்ளுங்கள்' என்பதாகும். சரியான நேரத்தில் நோயறிதலின் முக்கியத்துவம்,அறிகுறிகள், டிமென்ஷியாவின் நோய் எச்சரிக்கை மற்றும் அல்சைமர் நோய்க்கு எதிராக போராட வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நோக்கம்.
உலகெங்கிலும் உள்ள சமூகங்கள் அல்சைமர் பற்றிய விழிப்புணர்வைப் பரப்ப கருத்தரங்குகள் மற்றும் பொது நிகழ்வுகளை நடத்துகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Alzheimer Disease, WHO