இந்த அண்டமே ஒரு ஆச்சரியப் பேழைதான். அதில் அத்தனை ஆச்சரியங்களையும், அதிசயங்களையும், புதிர்களையும் தன்னுள் வைத்துள்ளது. அதில் ஒன்றைப் பற்றித்தான் இன்று பார்க்க இருக்கிறோம்.
UFO என்றால் என்ன?
வானத்தில் பறவை, பட்டம், விமானம், ராக்கெட் பறப்பதை பார்த்துள்ளோம். அதுபோக அவ்வப்போது விண்கற்கள், எரிகற்கள் எல்லாம் பறப்பதை பார்த்திருக்கிறோம். இப்படி நாம் இன்னதென்று அடையாளம் காண முடியாமல் விடும் பொருட்களைத் தான் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் (Unidentified Flying Object ) என்று குறிப்பிடுகின்றனர். அதை சுருக்கமாக UFO என்பர். பெரும்பாலும் வேற்று கிரகங்களில் இருந்து வந்த பறக்கும் தட்டுகளைக் குறிக்கவே இந்த வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர்.
உலக யுஎஃப்ஒ தினம் தெரியுமா?
அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பவும், யுஎஃப்ஒக்கள் இருப்பதை உறுதிசெய்யவும் உலக யுஎஃப்ஒ தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 2 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் முதன்முதலில் 2001 இல் UFO ஆராய்ச்சியாளர் ஹக்டன் அக்டோகனால் அனுசரிக்கப்பட்டது. இந்த நாளில் தங்களிடம் உள்ள தொலைநோக்கியைக் கொண்டு வானில் ஏதும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் தெரிகிறதா என்று தேடி விளையாடுகின்றன.
வரலாறு:
முன்னதாக, இந்த நாள் ஜூன் 24 அன்று உலக யுஎஃப்ஒ தினம் சிலரால் கொண்டாடப்பட்டது. சிலர் ஜூலை 2 ஐ உலக யுஎஃப்ஒ தினமாக அனுசரித்தனர். பின்னர், 2001 ஆம் ஆண்டு ஜூலை 2 உலக யுஎஃப்ஒ தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
உலகெங்கிலும் உள்ள மிகவும் பிரபலமான UFO நிகழ்வுகள் பின்வருமாறு:
கென்னத் அர்னால்ட், 1947: ஒரு அமேரிக்க சிவிலியன் பைலட் கென்னத் அர்னால்டி தான் முதன் முதலில் இந்த வார்த்தையை பயன்படுத்தினார். 1947 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி, வாஷிங்டனின் மவுண்ட் ரெய்னருக்கு அருகே அவர் தனது விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது, ஒன்பது நீல, ஒளிரும் பொருள்கள் V வடிவத்தில் மணிக்கு 1,700 மைல் வேகத்தில் வேகமாகப் பறப்பதைக் கண்டதாகக் கூறினார். பலரும் அதை பார்த்ததாக பதிவிட்டிருந்தனர்.ஆனால் அமெரிக்க அரசாங்கம் ஒருபோதும் அதை உண்மையாக ஏற்கவில்லை. மாய பிம்பம் என்று சொல்கிறது.
ரோஸ்வெல், 1947: யுஎஃப்ஒக்களைச் சுற்றியுள்ள மிகப்பெரிய தீர்க்கப்படாத மர்மங்களில் ஒன்று ரோஸ்வெல் சம்பவம், 1947. வில்லியம் ரோஸ்வெல் 1947 இல் நியூ மெக்சிகோவில் தனது மேய்ச்சல் நிலம் ஒன்றில் மர்மமான குப்பைகளைக் கண்டுபிடித்தார்.டின் தகடுகள், ரப்பர், மரப்பட்டைகள் கிடைத்துள்ளன. ஆனால் இவை எதுவும் பூமியில் செய்யப்பட்டதை போல் இல்லை என்று உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். ஆனால் கீழே விழுந்த துகள்கள் எல்லாம் ரசியாவின் அணுசக்தி பிரயோகங்களைக் கண்காணிக்க அமெரிக்கா பறக்கவிட்ட கண்காணிப்பு பலூன் பாகங்கள் மட்டுமே என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் ஏலியன் உடலை உடற்கூறு செய்ததாக அருகில் உள்ள மருத்துவமனையில் ஒரு கதையும் உள்ளது. அங்கு தொடங்கியது தான் இந்த நாள் கொண்டாட்டத்தின் கதைகள் எல்லாம்.
ரெண்டல்ஷாம் காடு, 1980: 1980 ஆம் ஆண்டு வூட்பிரிட்ஜ் மற்றும் பென்ட்வாட்டர்ஸில் நிறுத்தப்பட்ட அமெரிக்க விமானப்படை அதிகாரிகள், லண்டனில் இருந்து வடகிழக்கே 100 மைல் தொலைவில் உள்ள ரெண்டல்ஷாம் வனப்பகுதிக்கு மேலே விசித்திரமான வண்ணமயமான விளக்குகளைப் பார்த்ததாக தெரிவித்தனர். மறுநாள் மரங்களுக்கு அருகில் ஏற்பட்ட சேதம் மற்றும் அந்த இடத்தில் அதிக அளவிலான கதிர்வீச்சும் கண்டறியப்பட்டது. ஆனால் உண்மைக்காரணம் கண்டறியப்படவில்லை.
இந்தியாவில் 2007 இல், கொல்கத்தாவில், அதிகாலை 3:30 மணி முதல் 6:30 மணி வரை நகரும் பொருள் அடையாளம் காணப்பட்டு, கேமராவில் படம் பிடிக்கப்பட்டது. பொருளின் வடிவம் ஒரு கோளத்திலிருந்து ஒரு முக்கோணத்திற்கு மாறியது என்றும் அது சிறிது நேரம் மிதந்துவிட்டு வேறு பாதையில் சென்று விட்டதாகவும் சொல்லப்பட்டது.
ஆஃப்லைன் ஜிமெயில் வசதியை வழங்கும் கூகுள் - மெயில் படிப்பது, அனுப்புவது & தேடுவது குறித்து அறிவோம்.!
ஏலியன்கள் இருக்கிறார்களா?
இந்த புவியில் அல்லாத வேற்றுகிரக வாசிகள் அனைவருமே ஏலியன் பெயரால் தான் அழைக்கப்படுகின்றனர். ஆனால் பூமி தவிர்த்து மற்ற கிரகங்களில் உயிர்கள் இருப்பது பற்றிய ஆய்வுகள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. எந்த ஆதாரங்களும் இன்னும் கிடைக்க வில்லை. கற்பனைகதைகளும் யுகங்களும் மட்டுமே லட்சக்கணக்கில் உலவிக்கொண்டு இருக்கிறது.
நீங்கள் வானை வேடிக்கை பார்த்ததுண்டா? இப்படி பறக்கும் தட்டுகள் ஏதும் உங்கள் கண்ணில் பட்டதுண்டா? பார்த்தால் என்ன செய்வீர்கள்? ஏலியன் பற்றிய உங்கள் கருத்து என்ன மக்களே?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.