உலக டோஃபு தினம் ஆண்டுதோறும் ஜூலை 26 அன்று அனுசரிக்கப்படுகிறது. சோயாபீன்களில் இருந்து தயாரிக்கப்படும் இறைச்சிக்கு மாற்றான தாவர அடிப்படையிலான டோஃபுவை கௌரவிக்கும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
அதிகமான மக்கள் தாவர அடிப்படையிலான உணவுக்கு மாறுவதால் டோஃபு பிரபலமடைந்தது. சைவ உணவு உண்பவர்கள் மற்றும் அசைவ உணவு உண்பவர்கள் என அனைவராலும் விரும்பப்படும் உணவுப்பொருள் இது. அசைவத்தில் இல்லாத சில புரதங்களை இதிலிருந்து பெறலாம்.
உலக டோஃபு நாளின் வரலாறு
பால் மற்றும் பாலாடைக்கட்டி போன்ற பால் பொருட்கள் எப்படி உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் தவிர்க்கமுடியாத தினசரி உணவோ, அதுபோன்று டோஃபு கிழக்காசிய நாட்டின் ஒவ்வொரு சைவ உணவிலும் இன்றியமையாத பகுதியாகும். இது மேற்கு உலக நாடுகளுக்கு புதியதாக இருக்கலாம், ஆனால் டோஃபு சீன , ஜப்பான் பகுதிகளில் பொது ஆண்டிற்கு முன்பிருந்தே சமைக்கப்படுவதாக வரலாறு கூறுகிறது.
இன்று கார்கில் வெற்றி தினம்.. சியாச்சின் பள்ளத்தாக்கு போரின் நினைவுகள்..
பொது ஆண்டிற்கு முன் 179 இல் ஹான் வம்சத்தின் போது, இறைச்சி வாங்க முடியாத மக்களுக்கு மலிவு விலையில் டோஃபுவை சீனா உருவாக்கியது. பொது ஆண்டு 8 ஆம் நூற்றாண்டில் நாரா காலத்தில், ஜப்பானியர்கள் டோஃபுவை ஏற்றுக்கொண்டு, அவற்றை உறுதியானதாகவும் சுவையாகவும் மாற்றுவதற்கான நுட்பத்தைக் கண்டறிந்தனர். 1803 இல் டோஃபுவை ஜப்பானின் சாமானிய மக்களும் வாங்கும் அளவு மாற்றப்பட்டது.
1975 இல் "தி புக் ஆஃப் டோஃபு" புத்தகம் மூலம் மேற்கத்திய உலகிற்கு டோஃபுவை அறிமுகப்படுத்தியது. 2014 இல் விலங்குகள் பாதுகாப்பிற்கான சங்கம் உலக டோஃபு தினத்தை ஏற்படுத்தி உலகளாவிய முதல் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தது.
டோஃபு- சிறப்புகள்:
டோஃபு, அல்லது ஆங்கிலத்தில் பீன்-பால் கட்டி என்று அழைக்கப்படும் உணவுப்பொருளுக்கு , சீன மற்றும் ஜப்பானிய மொழிகளில் பல்வேறு பெயர்கள் உண்டு. முதலில் மேற்கு உலகில் இதனை ஏற்கவில்லை. 1900 களில் இதை அங்கீகரித்து டோஃபு என்று பெயரிட்டு, தங்கள் சமையல் புத்தகங்களில் உள்ளிட்டனர்.
ஒவ்வொரு ஜப்பானிய மாகாணமும் டோஃபுவை உற்பத்தி செய்வதற்கான தனித்துவமான முறையைக் கொண்டுள்ளது. இது நுகரப்படும் பரந்த வழிகளை பிரதிபலிக்கிறது. சோயாபீன் உற்பத்தி சிறப்பாக செயல்படுத்தப்படும் போது, அது பெரும் எண்ணிக்கையிலான டோஃபுக்களை தயாரித்து மக்களுக்கு வழங்குகிறது.
டோஃபுவை ஃப்ரைஸ், சூப்கள் மற்றும் சாலடுகள் போன்ற உணவுகளில் பயன்படுத்தலாம். கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி12 ஆகியவை இதில் உள்ளது. புற்றுநோய் மற்றும் பிற நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளன.
டோஃபு உலகளவில் கிடைக்கும் சத்தான உணவுகளில் ஒன்றாகும். உலக டோஃபு தினம், டோஃபு உலகெங்கிலும் உள்ள மக்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் பல்வேறு வழிகளை முன்னிலைப்படுத்த முயல்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.