Home /News /trend /

உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: செயல் மூலம் நம்பிக்கையை உருவாக்கி தற்கொலைகளை தடுப்போம்

உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: செயல் மூலம் நம்பிக்கையை உருவாக்கி தற்கொலைகளை தடுப்போம்

தற்கொலை தடுப்பு தினம்

தற்கொலை தடுப்பு தினம்

தற்கொலை எண்ணம் தோன்றும் சக மனிதனின் எண்ணத்தை மாற்றி வாழ வைக்கும் முயற்சியை எடுக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
உலக தற்கொலை தடுப்பு தினம் என்பது மக்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுப்பதற்கான பல்வேறு வழிகள் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

தற்கொலை:
இன்றைய சமூகம் எந்த சூழலையும் சமாளித்து போராடி அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வர துணிவதில்லை. பிரச்சனையில் இருந்து ஓட ஒரு வழியாக தற்கொலையை தேர்தெடுகின்றனர்.

தேர்வு பயம் என்றாலும் தற்கொலை, தேர்வில் எண்ணிய மதிப்பெண் கிடைவில்லை என்றாலும் தற்கொலை. கடன் வாங்கி கட்ட முடியவில்லை என்றாலும் தற்கொலை. குழந்தைகள், தினக்கூலிகள், விவசாயிகளின் தற்கொலை விகிதம் என்பது சமீப காலத்தில் அதிகரித்து வருவதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த மரணங்கள் அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக, கடுமையான துக்கத்தை அனுபவிப்பவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் வருகிறது.

வெள்ளை புலிக்கு பெயர் பெற்ற மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் பார்க்கவேண்டிய இடங்கள்.

வரலாறு
உலக தற்கொலை தடுப்பு தினம் 2003 இல் முதலில் தொடங்கப்பட்டது. WHO உடன் இணைந்து தற்கொலை தடுப்புக்கான சர்வதேச சங்கம் நிறுவப்பட்டது. 2003 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10 ஆம் தேதி, உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. மேலும் இதுகுறித்த விழிப்புணர்வை தனியார் அமைப்புகள், அரசு மற்றும் பொதுமக்கள் இணைந்து ஏற்படுத்துகின்றனர்

முக்கியத்துவம்

உலக தற்கொலை தடுப்பு தினத்தின் ஒட்டுமொத்த நோக்கம், தற்கொலையைத் தடுப்பதற்கான வழிகள் மற்றும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது. மனிதனுக்கு தேவையான மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். ஒவ்வொரு நபரும், ஒரு பெற்றோர், ஒரு குழந்தை, ஒரு உடன்பிறப்பு, ஒரு நண்பர் அல்லது ஒரு சக ஊழியர் போன்ற பாத்திரங்களை கையாள்கின்றனர். அப்படி இருக்கும் சூழலில் ஒவ்வொருவரும் தற்கொலை எண்ணம் தோன்றும் சக மனிதனின் எண்ணத்தை மாற்றி வாழ வைக்கும் முயற்சியை எடுக்க வேண்டும். அதை ஊக்குவிப்பதே இந்த நாளின் நோக்கம் ஆகும்.

பொது சுகாதாரப் பிரிவில் தற்கொலைத் தடுப்பு முன்னுரிமை கொடுப்பதன் முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துக் காட்டுகிறது. பங்களிப்பின் அளவு எதுவாக இருந்தாலும், ஒருவருடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தினால் போதும் என்ற இயக்கத்தைக் குறிக்கும் நாள்.

உலக தற்கொலை தடுப்பு தினம் 2022: தீம்
உலக தற்கொலை தடுப்பு தினத்திற்கான கருப்பொருள் 2021 முதல் 2023 வரை பொருந்தக்கூடிய ஒரு மூன்று ஆண்டு தீம் ஆகும். "செயல் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்" என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது.

எல்லாவற்றையும் மீறி தற்கொலை எண்ணம் தோன்றினால் தேசிய தற்கொலை தடுப்பு மையம் 988 என்ற டோல் பிரீ எண்ணிற்கு அழைத்து பேசுங்கள். தற்கொலை எதற்கு முடிவல்ல.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Suicide, WHO

அடுத்த செய்தி