கனவு காணுங்கள் இளைஞர்களே! உங்களை தூங்க விடாத கனவு காணுங்கள் என்று மாணவர்களை ஊக்குவித்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாளில் கொண்டாடப்படும் உலக மாணவர்கள் தினம் இன்று.
நமது சமூகத்தில் கல்வி வளர்ச்சிக்கு கலாமின் தன்னலமற்ற பங்களிப்பை போற்றும் வகையில் இது கொண்டாடப்படுகிறது. "நீங்கள் தோல்வியுற்றால், ஒருபோதும் முயற்சியைக் கைவிடாதீர்கள். FAIL என்றால் 'கற்றலில் முதல் முயற்சி' என்று பொருள். NO என்றால் Next Opportunity 'அடுத்த வாய்ப்பு' என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, எப்போதும் முயற்சி செய்யுங்கள்," என்று அவர் கூறினார்
உலக மாணவர் தின வரலாறு
உலக மாணவர் தினம் இன்னும் ஐநா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் 2010 முதல் அக்டோபர் 15 அன்று உலக மாணவர் தினம் என்பது இந்தியாவில் மட்டும் கொண்டாடப்படுகிறது.
உலக மாணவர் தினத்தின் முக்கியத்துவம்
அப்துல் கலாம் எப்போதும் மாணவர்களே எதிர்காலம் என்றும், நம் நாட்டை ஒவ்வொரு துறையிலும் வெற்றியின் புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும் முற்போக்கு மனதைக் கொண்டவர்கள் என்று நம்பினார். அப்துல் கலாமின் மாணவர்கள் மீது கொண்ட அன்பைக் கொண்டாடும் வகையில் உலக மாணவர் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
மேலும் இது கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும்
கல்விக்கான அடிப்படை உரிமையை அங்கீகரிக்கும் நாளாக உள்ளது.
டாக்டர் அப்துல் கலாம்:
தமிழ்நாட்டின் கடைக்கோடி ராமேஸ்வரத்தில் இருந்து நாட்டின் டெல்லி ராஷ்ட்ரிய பவனில் முதல் குடிமகனாக மாறிய டாக்டர் அப்துல் கலாம் அக்டோபர் 15, 1931 இல் பிறந்தார். DRDO மற்றும் இஸ்ரோவில் பணியாற்றும்போது நாட்டின் முதல் விண்கல உருவாக்கம், அணுசக்தி சோதனை என்று பல முக்கிய பணிகளில் ஈடுபட்டார்.
5Gbps, 8Gbps அதிவேக இணையசேவை வழங்கும் கூகுள் ஃபைபர்! அமெரிக்காவில் முதற்கட்ட சோதனை!
டாக்டர் கலாம் இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா விருது பெற்றார். இந்திய அரசின் அறிவியல் ஆலோசகராக பணியாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷண் விருதும் வழங்கப்பட்டது.
ஜனாதிபதியாக இருந்த அவரது பதவிக்காலம் முடிந்ததும், அவர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM), IIM-இந்தூர் மற்றும் IIM- அகமதாபாத் ஆகியவற்றில் ஆசிரியர் ஆனார். கலாம் ஜூலை 27, 2015 அன்று, ஐஐஎம்-ஷில்லாங்கில் விரிவுரை ஆற்றிக்கொண்டிருந்தபோது, மாரடைப்பால் இறந்தார்.
உங்கள் முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுக்க வேண்டாம், ஏனென்றால் நீங்கள் இரண்டாவது முயற்சி தோல்வியடைந்தால், உங்கள் முதல் வெற்றி அதிர்ஷ்டம் என்று சொல்ல அதிக உதடுகள் காத்திருக்கின்றன என்ற அவரது வார்த்தையை என்றும் நினைவில் கொள்ளுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: APJ Abdul Kalam, Students