நம் வாழ்க்கையில் பாண்டி, சடுகுடு என்று விளையாடத் தொடங்கி இருந்தாலும் சரியாக ஒரு விளையாட்டை பற்றி தெரிந்துகொள்ளும் வாய்ப்பை நமக்கு தருவது இந்த விளையாட்டு செய்தியாளர்கள் தான்.
கிரிக்கெட்டில் உள்ள நேக்குகளை, சூட்சமங்களை சிறிய வாண்டு கூட சொல்கிறது என்றால் அது இந்த செய்தியாளர்கலால் என்று தைரியமாக சொல்லலாம்.
செய்தியாளர் என்பவர் வெறும் உள்நாட்டு கலவரங்களையும், அரசியலையும், வணிகத்தை மட்டும் பேச வேண்டும் என்றில்லை. தனக்கு பிடித்த விளையாட்டை தன் செய்திதுறையோடு இணைத்து விளையாட்டு பற்றிய அறிவையும், செய்தியையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை இவர்கள் செய்கின்றனர்.
ரூ.40 கட்டணத்தில் உள்ளூர் ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சை எடுக்கும் கேப்டன் தோனி
படிப்பு படிப்பு என்றும் ஓடும் உலகத்தில் விளையாட்டு என்பதையே இங்கு பலர் மறந்து விடுகின்றனர். அதில் இருந்தாலும் அது பற்றி தெரிந்து கொள்ளவோ விளையாடவோ நேரம் ஒதுக்காமல் ஓடும் உலகத்திற்கு காட்சி வழியாகவோ, குறும் செய்தியாகவோ, வானொலி அலையின் மூலமோ குறைந்த நேரத்தில் அவர்கள் விரும்பும் விளையாட்டு அப்டேட்களை தருபவர்கள் நமக்கு ஸ்பெஷல் தானே?
மெஸ்ஸி, ரொனால்டோ, தோனி,கோலி, என்று மக்கள் உலகளாவிய விளையாட்டுகளில் அறிமுகமாகியுள்ளார். இந்த ஆர்வம் தோன்றுவதற்குக் காரணம் அவர்களது முழு விளையாட்டை பார்க்காவிடினும், அவர்களின் சிறப்புகளை நமக்கு இந்த பத்திரிகையாளர்களின் எழுத்துக்களோ சொற்களோ நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளன. சும்மா தெருவில் காகித பந்தை பரிச்சை அட்டையில் அடித்து விளையாடுபவன் கூட செய்தித்தாளில் வரும் தோனி ஸ்கோர் கார்டையும் போட்டோவையும் வெட்டி வைக்கிறான்.
சாதி, மதம், இனம், நாடு, மொழி எல்லாவற்றையம் கடந்து மக்களை விளையாட்டால் ஒன்று சேர்க்கும் பணியைச் செய்யும் விளையாட்டு பத்திரிகையாளர்களை கவுரவிக்கும் நாள் இன்று.
உலக விளையாட்டுப் பத்திரிகையாளர் தினம்:
1924 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி பாரிஸில் நடந்த கோடைகால ஒலிம்பிக்கின் போது சர்வதேச விளையாட்டுப் பத்திரிகையாளர் சங்கம் (AIPS) உருவாக்கப்பட்டது. அதன் நினைவாக 1994 இல் AIPS சங்கம், உலக விளையாட்டுப் பத்திரிகையாளர் தினத்தை நிறுவியது. பல ஆண்டுகளாக, பல விளையாட்டு ஊடக வல்லுநர்களின் சாதனைகள் இந்த நாளில் கௌரவிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் விளையாட்டு பத்திரிகையாளர்களின் பணியை கவனித்து அவர்களை பாராட்டி வருகின்றன.
உங்களுக்கு பிடித்த விளையாட்டுப் பத்திரிக்கையாளர் யார்? அவரால் எந்த விளையாட்டைக் கற்றுக்கொண்டீர்கள்?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.