ஏலத்தை பொறுத்தவரை திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் பயன்படுத்திய ஆடைகள், அணிகலன்கள், கண்ணாடி, இசைக்கருவி, கார், பைக், தொப்பி, ஓவியங்கள் உள்ளிட்டவை பல கோடி ரூபாய்க்கு ஏலத்திற்கு செல்வதை பார்த்திருப்போம். அதில் இருந்து ஒருகுறிப்பிட்ட அல்லது முழு தொகையும் ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்திற்கு வழங்குவார்கள். ஆனால் இந்த முறை உலக அளவில் சாதனை படைத்த விஸ்கி பாட்டில் ஒன்றினை ஏலத்தில் விட்டு, அதன் மூலம் வந்த தொகையை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளனர்.
ஸ்காட்ச் ரக விஸ்கியை கொண்ட 5 அடி நீளம், 11 அடி அங்குலம் நீளமுள்ள பாட்டிலை 2021ம் ஆண்டு மெக்கலன் நிறுவனம் உருவாக்கியது. உலக அளவில் புகழ் பெற்ற மெக்கலன் நிறுவனம் தயாரித்த 32 ஆண்டுகள் பழமையான பேரலில் இருந்து உலகிலேயே மிகப்பெரிய விஸ்கி பாட்டில் நிரப்பப்பட்டுள்ளது. இந்த பாட்டில் உலகின் மிகப்பெரிய ஸ்காட்ச் விஸ்கி பாட்டில் என கடந்த செப்டம்பர் மாதம் 9ம் தேதி, 2021ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. 311 லிட்டரும் கொள்ளவும் கொண்ட பாட்டிலில் அடைக்கப்பட்டுள்ள விஸ்கிக்கு ‘தி இண்ட்ரிபிட்’ என பெயர் சூட்டப்பட்டது.
இந்த பாட்டிலை வாங்க அப்போது பல மில்லினியர்களும் ஆர்வம் காட்டிய நிலையில், இம்மாதம் 25ம் தேதி அன்று ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி குறிப்பிட்ட தேதியில் லண்டன் மாநகரின் எய்டன்பெர்க்கில் உள்ள ல்யான் அண்ட் டார்பிள் என்ற ஏல விடுதியில் இந்த விஸ்கி பாட்டில் ஏலம் விட்டது. இந்த பாட்டில் பிரிட்டிஷ் மதிப்பிற்கு சுமார் 1.1 மில்லியன் பவுண்டிற்கு விற்பனையாகியுள்ளது.
லியோன் & டர்ன்புல்லின் நிர்வாக இயக்குனர் கவின் ஸ்ட்ராங்கின் கூறுகையில் "உலகின் மிகப்பெரிய ஸ்காட்ச் விஸ்கி பாட்டிலான இன்ட்ரெபிட் கலெக்ஷன், மிகப்பெரிய உலகளாவிய ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. ஏலத்தின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது” எனக்குறிப்பிட்டுள்ளார்.
Also Read : தினமும் நூடுல்ஸ் மட்டுமே சமைச்சா எப்படி சார்..! கடுப்பான கணவன் எடுத்த தடாலடி முடிவு
இதனை ஒரு சர்வதேச விஸ்கி சேகரிப்பாளர் ஒருவர் ஏலத்தில் எடுத்துள்ளார். 32 ஆண்டுகள் பழமையான பேரலில் இருந்து ராட்சத பாட்டிலை நிரப்பியதோடு, மீதமுள்ள விஸ்கி 12 சிறிய அளவிலான பாட்டில்களில் நிரப்பப்பட்டுள்ளன. இன்ட்ரெபிட் பாட்டிலின் லேபிளில் 'உலகின் மிகவும் கொண்டாடப்படும் 11 ஆய்வாளர்களின்' போட்டோக்கள் இடம் பெற்றுள்ளன. அதாவது ஒல்லி ஹிக்ஸ், சர் ரனுல்ஃப் ஃபியன்னெஸ், வில் கோப்ஸ்டேக், டுவைன் ஃபீல்ட்ஸ், கரேன் டார்கே உள்ளிட்டோரது புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
Also Read : McDonald’s கஸ்டமர் பதிவிட்ட பல்லி விழுந்த குளிர்பான வீடியோ!
இந்த ஏலத்தின் மூலம் கிடைத்த பெரும் தொகையில் இருந்து 25 சதவீதம் மேரி கியூரி மருத்துவ தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.