• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • உலகின் பணக்கார நாயின் மாளிகை விற்பனை - விலை ஜஸ்ட் 238 கோடி!

உலகின் பணக்கார நாயின் மாளிகை விற்பனை - விலை ஜஸ்ட் 238 கோடி!

உலகின் பணக்கார நாயின் மாளிகை விற்பனை

உலகின் பணக்கார நாயின் மாளிகை விற்பனை

விற்பனையான இந்த மாளிகை, 2000 ஆம் ஆண்டு ஹாலிவுட் நட்சத்திரமான மடோனாவிடம் இருந்து 7.5 மில்லியன் டாலருக்கு வாங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

  • Share this:
உலகின் ஆடம்பரமான மாளிகைகள் மற்றும் வீடுகள் எக்கச்சமான விலைக்கு விற்பனையாகிறது என்று செய்திகள் அவ்வபோது வெளிவந்து ஆச்சரியப்படுத்தும். மியாமியில் விற்பனையான ஒரு மாளிகைப் பற்றி தற்போது வெளியான செய்தி உலகம் முழுவதும் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. விற்பனைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் மாளிகையின் விலை 32 மில்லியன் டாலர் என்பதைத் தாண்டி, இந்த மாளிகைக்கு சொந்தக்காரர் ஒரு நாய் என்பது நெட்டிசன்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 238 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு மாளிகைக்கு சொந்தக்காரர் ஒரு கந்தர் VI என்ற ஜெர்மன் ஷெப்பர்டு இனத்தை சேர்ந்த நாய் என்று செய்தி பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. பரம்பரை சொத்து என்பது மனிதர்களுக்கு மட்டுமா என்ன, விலங்குகளுக்கும் பொருந்தும். தன்னுடைய தாத்தாவான கந்தர் IV இன் 500 மில்லியன் டாலர் சொத்தை பெற்று, உலகிலேயே பணக்கார நாயாக கந்தர் VI (Gunther VI) அறிவிக்கப்பட்டது.



மியாமியில் இருக்கும் டஸ்கன் ஸ்டைலில் கட்டப்பட்டிருந்த, இந்த நாய்க்குச் சொந்தமான மேன்ஷன் 238 கோடி ரூபாய்க்கு விற்பனையாக இருக்கிறது. நாய்களின் பெயரில் கோடிக்கணக்கான சொத்துக்களை யார் எழுதியது என்பது பற்றிய தகவலை தேடும்போது ஆச்சரியமூட்டும் பல செய்திகள் கிடைத்தன.



கர்லோட்டா லெய்பென்ஸ்டீன் என்ற ஜெர்மனியை சேர்ந்த பெண்மணி, கந்தர் III நாயை வளர்த்து வந்துள்ளார். 1992 ஆம் ஆண்டில், கர்லோட்டா இறக்கும் முன், ஒரு டிரஸ்ட் உருவாக்கி 58 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்தை தனது வளர்ப்பு நாயின் பெயரில் மாற்றியுள்ளார். அதைத் தொடர்ந்து, ஒரு குழு நியமிக்கப்பட்டு, கந்தர் III இன் வம்சாவளியை அனைத்து வசதிகளோடும் பராமரித்து வருகிறது. கந்தர் குழுவில் இயங்கும் இத்தாலிய நாட்டு வணிகர்களால் இந்த டிரஸ்ட் பாதுகாக்கப்பட்டு வருகிறது.



விற்பனையான இந்த மாளிகை, 2000 ஆம் ஆண்டு ஹாலிவுட் நட்சத்திரமான மடோனாவிடம் இருந்து 7.5 மில்லியன் டாலருக்கு வாங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. விற்பனைக்கு பட்டியலிடப்பட்ட போது, இந்த மாளிகையின் சொந்தக்காரர் ஒரு நாய் என்பதை அறியவில்லை என்று, பல ஆடம்பர மாளிகைகளை விற்பனை செய்த அசோலின் டீம் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ரூத்தி ஆச்சரியத்துடன் தெரிவித்தார்.

 



 

மிகவும் பிரைவேட்டான, பாதுகாக்கப்பட்ட, விலையுயர்ந்த எஸ்டேட்டில் இந்த மாளிகை அமைந்துள்ளது. இந்த மாளிகை கட்டி, 90 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. 1928 ஆம் கட்டப்பட்ட இந்த மாளிகையில், ஒன்பது படுக்கை அறைகள், எட்டு குளியல் அறைகள் மற்றும் ஒரு அவுட்டோர் நீச்சல் குளம் ஆகியன உள்ளன.

மாளிகை பிரம்மாண்டமான நுழைவாயில்கள், சுற்றிலும் அழகழகான பனை மரங்கள் என்று வெளிப்புறத்தில் கண்ணைக் கவரும் தோற்றத்துடன் அமைந்துள்ளது மாளிகை. பவழத்தால் கட்டப்பட்ட படிக்கட்டுகள், விலையுயர்ந்த அலங்காரங்கள், பணியாளர்கள் தங்குவதற்கான குடியிருப்புகள் என்று உட்புற அலங்காரத்திலும் பிரமிக்கவைக்க தவறவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: