காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் என்று பாடிய காலம் எல்லாம் மலை ஏறி போய்விட்டது. இப்போது யாரும் கடிதங்கள் எழுதுவதில்லை. எல்லாம் மெசேஜ் தான். அலுவல் பணிகள் சிலது, அரசாங்க அஞ்சல் மற்றும் பதிப்புகள் மட்டுமே அஞ்சல் மூலம் அனுப்பப்படுகிறது.
டிஜிட்டல் யுகம் வந்ததிலிருந்து அஞ்சல்களுக்கு பெரிதாக மவுசு இல்லாமல் போய்விட்டது. அதை உயிர்ப்புடன் வைக்க இன்றைய தினம் உலக அஞ்சல் தினம் கொண்டாடப்படுகிறது.
உலக அஞ்சல் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் மக்கள் மற்றும் வணிகங்களின் அன்றாட வாழ்வில் அஞ்சலின் பங்கைக் கொண்டாடுகிறது. கூடுதலாக, இது உலகளாவிய சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பை ஊக்குவிப்பதாகும்.
ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஸ்பிட்டி பள்ளத்தாக்கின் அற்புதமான 6 இடங்கள்!
உலக அஞ்சல் தின வரலாறு:
‘யுனிவர்சல் போஸ்டல் யூனியன்’ 1874 இல் சுவிட்சர்லாந்தில் நிறுவப்பட்ட தேதியை நினைவுகூரும் நாளாகவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
1969 ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோவில் நடந்த UPU காங்கிரஸில் உலகளாவிய அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தேதியை நினைவுகூரும் வகையில் உலக அஞ்சல் தினம் நிறுவப்பட்டது. உலகளவில், தபால் சேவைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில்..
தூதுவர்கள் மூலம் இந்தியாவில் இருந்து வந்த அஞ்சல் துறையை 1688 ஆம் ஆண்டு ஆங்கில கிழக்கிந்திய கம்பனி ஒழுங்குபடுத்தியது. 1837 இல் எல்லோருக்குமான அஞ்சல் சேவையைத் தொடங்கியது.
SSC CGL 2022 தேர்வை எதிர்கொள்வது எப்படி! - ஒரு முழுமையான வழிகாட்டல்!
உலகின் முதல் அதிகாரப்பூர்வ ஏர்மெயில் விமானம் இந்தியாவில் பிப்ரவரி 18, 1911 அன்று பறந்தது. இந்திய தபால் அலுவலகச் சட்டம் 1898 மார்ச் 22, 1898 அன்று சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. இது ஜூலை 1, 1898 இல் செயல்பாட்டிற்கு வந்தது.
சுதந்திர இந்தியாவில், முதல் அதிகாரப்பூர்வ அஞ்சல் முத்திரை நவம்பர் 21, 1947 அன்று வெளியிடப்பட்டது. புதிய முத்திரையில் தேசபக்தர்களின் 'ஜெய் ஹிந்த்' என்ற முழக்கத்துடன் இந்தியக் கொடி சித்தரிக்கப்பட்டது.
2022 உலக அஞ்சல் தினத்தின் தீம்: 'Post for Planet' கிரகத்திற்கான அஞ்சல்
போஸ்ட் என்பது உலகின் மிகப்பெரிய இணைப்பு நெட்வொர்க் ஆகும். ஒவ்வொரு ஆண்டும், 150 க்கும் மேற்பட்ட நாடுகள் உலக அஞ்சல் தினத்தை பல்வேறு வழிகளில் கொண்டாடுகின்றன. இன்றைய தினம் அருகில் உள்ள அஞ்சலகம் சென்று உங்களுக்கு பிடித்தமான நபருக்கு ஒரு அஞ்சல் போடுங்களேன்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India post, Post Office