ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

உலக மக்கள் தொகை 8 பில்லியன்... ஆனால் நான் இன்னும் சிங்கிள்.. தெறிக்கவிடும் 90'ஸ்

உலக மக்கள் தொகை 8 பில்லியன்... ஆனால் நான் இன்னும் சிங்கிள்.. தெறிக்கவிடும் 90'ஸ்

மாதிரி படம்

மாதிரி படம்

இவ்வளவு மக்கள் தொகை இருந்தபோதிலும், அவர்களில் பலர் இன்னும் தனிமையில் இருப்பதாக பதிவிட்டு தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலக மக்கள் தொகை நவம்பர் 15 அன்று 8 பில்லியனை எட்டியதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. 1974-இல் உலக மக்கள் தொகையின் எண்ணிக்கை 4 பில்லியனாக இருந்தது. உலக மக்கள்தொகை 7 முதல் 8 பில்லியனாக வளர 12 ஆண்டுகள் எடுத்தாலும், இது 9 பில்லியனை எட்டுவதற்கு சுமார் 15 ஆண்டுகள் ஆகும். அதாவது 2037 வரை இதற்கான கால அளவாக எடுத்து கொள்ளும். இது உலக மக்கள்தொகையின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதற்கான அறிகுறியாகவும் இது பார்க்கப்படுகிறது என்று ஐநா சபை கூறியுள்ளது.

இது குறித்த பல சமூக வலைதள பதிவுகள் குவிந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக உலக மக்கள் தொகையை பற்றிய மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. எட்டு பில்லியன் என்கிற வரிசை கணக்கில் நேற்று உலகில் எங்காவது ஒரு குழந்தை பிறந்திருக்கும் என்று கூட ட்விட்டரில் பலர் ட்வீட் செய்து வருகின்றனர். அதே போன்று, 8 பில்லியன் மக்கள் தொகை இருந்த போதிலும் இன்னும் சிங்கிளாகவே இருப்பதாக பலர் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

இவ்வளவு மக்கள் தொகை இருந்தபோதிலும், அவர்களில் பலர் இன்னும் தனிமையில் இருப்பதாக பதிவிட்டு தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு நபரை "முழுமைப்படுத்த" காதல் உறவுகளுக்கு நமது கலாச்சாரம் தேவையற்ற அழுத்தத்தை அளிக்கிறது என்றும் பதிவிட்டுள்ளனர். பலரின் ட்வீட்டர் பதிவுகள் பார்ப்பவர்களை வாய்விட்டு சிரிக்கும் படியாகவும் உள்ளது.

மிக குறைந்தபட்ச அளவினரே இந்த விஷயங்களைப் பற்றி கொஞ்சம் நம்பிக்கையுடன் பதிவிட்டு இருந்தனர். “உலக மக்கள்தொகை 8 பில்லியனை எட்டுகிறது. நீங்கள் விரைவில் ஒரு சிறந்த நபரைப் பெறுவீர்கள். தொடர்ந்து செயல்படுங்கள்," என்று ஒருவர் உறுதியுடன் ட்வீட் செய்திருந்தார். இன்னொரு பயனர் 'உலகில் எட்டு பில்லியன் புன்னகைகள் மற்றும் உங்களுடையது எனக்கு மிகவும் பிடித்தது!' என்று ட்வீட் போட்டுள்ளார்.

Also Read : 7,80,0000 ஆண்டுகளுக்கு முன்பே உணவை சமைத்து சாப்பிட்ட மனிதர்கள் - தொல்லியல் ஆய்வில் வெளியான ஆச்சரியம்!

பலரும் பூமியின் புகைப்படத்தை பதிவிட்டு, இவ்வளவு பெரிய பூமியில் நாங்கள் இன்னும் சிங்கிளாகவே உள்ளோம் என்று வருத்தமாகவும் வேடிக்கையாகவும் மீம்ஸ் போன்று பதிவிட்டு இருந்தனர். சிலர் எலும்பு கூடுகளை குறித்த படங்களை போஸ்ட் செய்து சாகும்வரை நம்மில் பலர் சிங்கிள் தான் என்பன போன்ற விளையாட்டான மீம்ஸ்களையும் ட்வீட் செய்துள்ளனர்.

Published by:Vijay R
First published:

Tags: Trends, Viral