Home /News /trend /

ஸ்மைல் ப்ளீஸ்... உலக புகைப்பட தினம் இன்று.....!

ஸ்மைல் ப்ளீஸ்... உலக புகைப்பட தினம் இன்று.....!

புகைப்பட தினம்

புகைப்பட தினம்

யாரும் படம் எடுக்கலாம். எதிலும் எடுக்கலாம் எனும் அளவிற்கு தொழிநுட்பம் வளர்ந்து விட்டது. கைபேசியிலேயே கேமெராவைப் போல் படம் எடுக்கும் வசதிகள் வந்து விட்டது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
முதலில் எல்லாம் படம் எடுக்க வேண்டும் என்றால் பிலிம் போட்டு போகஸ் செய்து நிதானமாக எடுக்க வேண்டும். ஒரு பிலிமின் மதிப்பு அதிகமாக இருப்பதால் அதை வீணடிக்காமல் பயன்படுத்த வேண்டும். அதை பக்குவமாக இருட்டறையில் வைத்து படமாக காகிதத்தில் ஏற்ற வேண்டும். ஆனால் இப்போது நிமிடத்துக்கு லட்சக்கணக்கான படங்கள் போனில் எடுக்கப்படுகிறது.

யாரும் படம் எடுக்கலாம். எதிலும் எடுக்கலாம் எனும் அளவிற்கு தொழிநுட்பம் வளர்ந்து விட்டது. கைபேசியிலேயே கேமராவைப் போல் படம் எடுக்கும் வசதிகள் வந்து விட்டது. இந்த கலை வடிவத்தை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 அன்று உலக புகைப்பட தினம் அனுசரிக்கப்படுகிறது.

புகைப்பட தினக் கொண்டாட்டம் புகைப்படக் கலைக்கு மரியாதை செலுத்துவதுடன், அதில் ஆர்வமுள்ளவர்கள் ஒன்று கூடி தங்கள் படங்களைப் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கிறது. புகைப்படம் எடுக்கும் நுட்பங்களையும் பகிர்ந்துகொள்ள உதவுகிறது. புகைப்படம் எடுப்பதை ஒரு தொழிலாகத் தொடர ஆர்வமுள்ளவர்களை ஊக்குவிக்கும் நாளாகவும் இது விளங்குகிறது.

உலக புகைப்பட தினம்: வரலாறு

1837 ஆம் ஆண்டு இதே நாளில் பிரெஞ்சுக்காரர்களான ஜோசப் நைஸ்ஃபோர் நீப்ஸ் மற்றும் லூயிஸ் டாகுரே ஆகியோர் உலகின் முதல் புகைப்பட செயல்முறையான 'டாகுரோடைப்பை' (daguerreotype) கண்டுபிடித்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி 9, 1839 அன்று, டாகுரோடைப் பிரெஞ்சு அறிவியல் அகாடமியால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

ஏழு மாதங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 19, 1839 அன்று, பிரெஞ்சு அரசாங்கம் அந்த சாதனத்திற்கான காப்புரிமையை வாங்கியது. டாக்யூரோடைப்பின் கண்டுபிடிப்பை உலகிற்கு ஒரு பரிசாக அவர்கள் அறிவித்தனர்.

ராஜஸ்தானில் அமைத்துள்ள கம்பீரமான மலைக்கோட்டைகளின் அழகு இருக்கே...!

அப்போதிலிருந்து புகைப்படம் எடுத்தல் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் உருவாகி வருகிறது. அதனால் தான் அந்த தினத்தை உலக புகைப்பட தினமாக அறிவித்தனர். முதல் நீடித்த வண்ண புகைப்படம் 1861 இல் கைப்பற்றப்பட்டது, அதே நேரத்தில் முதல் டிஜிட்டல் புகைப்படம் 1957 இல் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் தான் படிப்படியாக டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் உருவாகியுள்ளன.

இந்த நாளில் என்ன செய்யலாம்….

  • உலக புகைப்பட தினத்தில் நாம் எடுத்த சிறந்த படங்களை சமூக வலைத்தளத்தில் மற்றவர்களோடு பகிரலாம்.

  • புதிதாக புகைப்பட யுத்திகளை கற்றுக்கொள்ளலாம்

  • புதிய டெக்னிக்குகள் கொண்டு படங்கள் எடுத்துப் பகிரலாம்.

  • புகைப்பட தின சிறப்பு புகைப்பட போட்டிகளில் கலந்துகொள்ளலாம்.வெற்றியும் பெறலாம்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Photo Gallery, Photography, Photos

அடுத்த செய்தி